கட்டழகு உடலுக்கு காய்கறி சாலட்--ஹெல்த் ஸ்பெஷல்,

நொறுங்கத் தின்றால் நூறுவயது வாழலாம் என்பது பழமொழி. ஆனால் சத்தான, சரிவிகித உணவே இன்றைய ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. கண்டதையும...

நொறுங்கத் தின்றால் நூறுவயது வாழலாம் என்பது பழமொழி. ஆனால் சத்தான, சரிவிகித உணவே இன்றைய ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. கண்டதையும் தின்று குண்டான உடம்பால் நோய் அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தேவையற்ற கொழுப்புகளும் அழையா விருந்தாளியாக உடலுக்குள் புகுந்து கொள்கின்றன. உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வதற்காக பொதுவான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், உணவுக்கட்டுப்பாடுகளையும் தேசிய சத்துணவு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தினமும் உடற்பயிற்சி உடல் தசைகள் வலுவடைய தினமும் 15 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். இதனால் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுவதோடு உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும். உணவுக்கட்டுப்பாடு காடு, கழனிகளில் வேலை பார்த்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் நோய் வருவதில்லை. கனிணி முன் அமர்ந்த படியே பைல் பார்ப்பவர்களுக்குத்தான் அனைத்து நோய்களும் அழைக்காமல் வருகின்றன. கட்டுப்பாடான உணவுப் பழக்கத்தை கையாண்டால் நோய் தாக்குதலில் இருந்த தப்பிக்கலாம் என்பது தேசிய சத்துணவு நிறுவனத்தின் அறிவுரை. காலையில் இட்லி, தோசை காலை நேரத்தில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆகாரங்களாக உட்கொள்ளவேண்டும். அமர்ந்து கொண்டே வேலை பார்க்கும் ஆண்கள் தினமும் 200 மில்லி லிட்டர் பால் அல்லது 2 கப் டீ மற்றும் காபி சாப்பிடலாம். 4 இட்லி அல்லது 3 தோசை சாப்பிடலாம் இவை தவிர 11/2 கப் உப்புமா அல்லது 4 ரொட்டித் துண்டுகள், அல்லது 2 கப் பாலுடன் கூடிய கார்ன் பிளேக்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பெண்களின் உணவு பழக்கத்தை பொறுத்த வரை ஆண்களின் உணவை விட 20 முதல் 30 சதவீதம் குறைவாக எடுத்து கொண்டால் நல்லது. காலை உணவாக 3 இட்லி அல்லது 2 தோசை அல்லது 1 கப் உப்புமா அல்லது 3 ரொட்டி துண்டுகளே சாப்பிடலாம். காய்கறி சாலட் மதிய சாப்பாட்டை பொறுத்தவரை ஆண்கள் 2 கப் அரிசி சாதம் சாப்பிடலாம். அதனுடன் 1/2 கப் பருப்பு, 3 முதல் 4 கப் காய்கறிகள், 8 துண்டு வெஜிடபுள் சாலட் மற்றும் 1/2 கப் தயிர் எடுத்து கொள்ளலாம். அசைவ உணவு வகையில் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றை ஒரு சில துண்டுகள் மட்டும் சாப்பிடலாம். பெண்களை பொறுத்த வரை 1 கப் அரிசி சாதம் சாப்பிட்டால் போதுமானது. மற்ற படி ஆண்கள் சாப்பிடும் அதே அளவு பொருட்களை சாதத்துடன் சேர்த்து கொள்ளலாம். இரவில் அரிசி சாதம் இரவு சாப்பாட்டின்போது ஆண்கள் 2 கப் அரிசி சாதமும், 1/2 கப் பருப்பு, 3 முதல் 4 கப் காய்கறிகள் உண்ணலாம். அத்துடன் 100 கிராம் பழங்களும் சாப்பிடலாம். பெண்களை பொறுத்தவரை 1 கப் அரிசி சாதமும், ஆண்களுக்கான மற்ற உணவு வகைகளையும் சேர்த்து கொள்ளலாம். ஆரோக்கியத்திற்கு தாய்பால் அன்றாட உணவில் புரதச்சத்து நிறைந்த கடல் உணவுகளையும், குறைவான கொழுப்பு கொண்ட பாலையும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தை பெற்ற தாய்மார்கள் , பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது தாய்மார்களுக்கும் ஆரோக்கியமானதாகும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8880678863723142388

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item