பனீர் 65 --- சமையல் குறிப்புகள்
பனீர் 65 தேவையான பொருட்கள்: பனீர்-100 கிராம், மஞ்சள் தூள்-¼ டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன், கார்ன்ஃப்ளார்-1 தேக்கரண்டி, எலுமிச்சம் சா...
https://pettagum.blogspot.com/2012/02/65.html
பனீர் 65
தேவையான பொருட்கள்: பனீர்-100 கிராம், மஞ்சள் தூள்-¼ டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன், கார்ன்ஃப்ளார்-1 தேக்கரண்டி, எலுமிச்சம் சாறு-1 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு, விழுது - ½ டீஸ்பூன், ஃபுட் கலர் (ஆரஞ்ச்) - 1 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரைத் துண்டுகளாக்கி, எலுமிச்சம் சாறு பிழிந்து, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், ஃபுட் கலர் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி, பனீர் துண்டுகள் கலந்த கலவையை வைத்து, லேசாக எண்ணெய் தெளித்து மூடி, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். பிறகு திறந்து வெளியே எடுத்து மீண்டும் 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள்.
Post a Comment