உருளைக்கிழங்கு டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள்,
1.உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது உப்பு போட்டால் பாத்திரத்தில் அல்லது குக்கரில் உப்பு படிந்து காணப்படும் ஆதலால் வேகவைத்த பின்பு உப்பு போடவ...
2. உருளைக்கிழங்கை வெந்த பின்பு சூடு ஆறியவுடன் தோல் உரிக்கவேண்டும். சூடாக இருக்கும் போது உரித்தால் தோலோடு கிழங்கும் சேர்ந்து வரும். 3. உருளளக்கிழங்கை ப்ரை பண்ண தோல் நீக்கி சிறிய சதுரங்களாக கட் பண்ணி, பாதி அல்லது முக்கால் வேக்காட்டில் எடுத்து மசாலா பிரட்டி வைக்கவும். அப்படி வைக்கும் போது நீர் ஊறும். இதனன தவிர்க்க பொறிக்கும் போது கார்ன்மாவை மிக்ஸ் செய்து பொறித்தால் கிரிஸ்ப்பியா இருக்கும். 4. குழம்பு, குருமா வைக்கும் போது தக்காளி போன்ற புளிப்பு சுவையுள்ள பொருட்களை அதிகம் சேர்க்க வேண்டாம் அளவாக சேர்த்துக் கொள்ளவும். கூடிவிட்டால் உருளை கிழங்கின் ருசி குறைந்து விடும். 5. குழம்பு, குருமாவில் உப்பு கூடிவிட்டால் உருளை கிழங்கை சேர்த்து சமைத்தால், பாதி உப்பை எடுத்து விடும். இதன் மூலம் குழம்பிலுள்ள கூடுதல் உப்பை குறைத்து விடலாம் 6. உருளை கிழங்கு வாங்கும் போது ப்ரெஷாக இருந்தால் ஒருமாததிற்கு தேவையானதை வாங்கி வைத்துக் கொள்ளலாம். வெட்டுபட்டது, துளிர்விட்டதை கழித்து விட்டு உபயோகிக்கலாம். 7. வாயுத் தொல்லை உள்ளவர்கள் ஆசைக்கு அளவாக சாப்பிட்டுக் கொள்ளவும். 8. குழந்தைகளுக்கு எடை கூடுவதற்கு மசித்த உருளள கிழங்கை தினமும் சிறிது கொடுத்து வந்தால் கொழு கொழு வென்று பார்க்க அழகாக இருப்பார்கள். கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் சாதம் கொடுக்கும் அளவுக்கு சத்து இதில் கிடைக்கும். 9. கட்லட், பொடிமாஸ், பூரி கிழங்கு செய்யும் போது குக்கரில் முதல் விசில் வந்தவுடன் குறைத்து வைத்து திரும்ப 2 விசில் வந்தவுடன் அணணத்தால் கிழங்கு நன்றாக வெந்து இருக்கும். 10. எந்த உணவோடும் உருளைக் கிழங்கு சேர்த்து சமைத்தாலும் சுவை கூடுமே தவிர குறையாது.
Post a Comment