கத்திரிக்காய் கட்டா தேவையான பொருள் பிஞ்சுக் கத்திரிக்காய்- 1/2கிலோ வெங்காயம்- 100கிராம் தக்காளி- 150 க...
கத்திரிக்காய் கட்டா
தேவையான பொருள்
பிஞ்சுக் கத்திரிக்காய்- 1/2கிலோ
வெங்காயம்- 100கிராம்
தக்காளி- 150 கிராம்
பச்சை மிளகாய்- 3
மிளகாய்த்தூள்- ஒன்றரை ஸ்பூன்
மிளகு- 1ஸ்பூன்
சிரகம்- 2ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
புளி- எலுமிச்சை அளவு
எண்ணெய்- 150 கிராம்
எள்- 25கிராம்
வேர்க்கடலை- 50கிராம்
கடுகு- 1ஸ்பூன்
உளுந்து- 1ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் மிளகு,சிரகம்,எள் முதலியவற்றை ஒவ்வொன்றாக தனித் தனியே,பொன்னிறமாக வறுத்து,தனித் தனியே பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து போட்டு நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயை போட்டு வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,தக்காளி முதலியவற்றை கொட்டி முக்கால் வேக்காடு வரும் வரை வதக்கவும்.பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி பச்சை மிளகாயையும் மசாலாப் பொடிகளையும் உப்பும் போட்டு கொதிக்க விடவும்.கத்திரிக்காய் குழைய வெந்ததும் பொடி செய்த வேர்க்கடலை,எள் முதலியவற்றை தூவி இறக்கவும்
Post a Comment