மின்சார செலவைக் குறைக்க -- உபயோகமான தகவல்கள்
வீட்டில் மின்சாரச் செலவைக் குறைக்க சில முக்கியக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம். வீட்டில் குண்டு பல்புகளுக்கு பத...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_8931.html
வீட்டில் மின்சாரச் செலவைக் குறைக்க சில முக்கியக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
வீட்டில் குண்டு பல்புகளுக்கு பதிலாக குழாய் பல்புகளை வாங்கிப் பொருத்தவும்.
எந்த மின் சாதனத்தையும் அதன் அதிகபட்சத் திறனுக்குப் பயன்படுத்தவும்.
வாஷிங் மெஷினில் உலரவைப்பானைத் தேவையென்றால் மட்டுமே பயன்படுத்தவும். நமது நாடே வெப்ப நாடு. சூரிய வெளிச்சம் இலவசமாகக் கிடைக்கும் போது உலரவைப்பானின் தேவை நமக்கிருக்காது.
ஒரு சில துணிகளுக்கு இஸ்திரி போடுவதை விட, நிறையத் துணிகளுக்கு ஒட்டுமொத்தமாக இஸ்திரி போடுவது நல்லது.
வீட்டின் நீர்தொட்டியில் எவ்வளவு நேரம் நீர் ஏற்றினால் தண்ணீர் நிரம்பும் என்பதை அறிந்து கொண்டு அந்த நேரத்திற்குள் நீர் ஏற்றத்தை அணைத்து விடுவதும் நல்லது.
Post a Comment