புறநோயாளிகளுக்கும் காப்பீடு வந்தாச்சு--இன்ஷூரன்ஸ்

உடலில் எந்த நேரத்தில் எந்த பாகம் பழுதாகி, இயல்பு வாழ்க்கை முடங்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அத்தகைய இக்கட்டான சூழலில் ஏற்ப...

உடலில் எந்த நேரத்தில் எந்த பாகம் பழுதாகி, இயல்பு வாழ்க்கை முடங்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அத்தகைய இக்கட்டான சூழலில் ஏற்படும் பொருளாதார பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உதவுகின்றன. பொது மருத்துவ காப்பீட்டை விட, முக்கிய நோய்களுக்கான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு பயன்கள் உள்ளன. குறிப்பாக இதயம், மூளை உள்ளிட்ட 12 வகையான முக்கிய நோய்களுக்கு, பிரத்யேக மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இது போன்ற காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்தால், சிகிச்சையின் போதே காப்பீடு செய்யப்பட்ட தொகை முழுவதுமாக மருத்துவமனைக்கு வழங்கப்படும். முன்னதாக பணம் செலுத்தி விட்டு, காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற காத்திருக்க தேவையில்லை. மேலும், காப்பீட்டு தொகை, இந்த வகையான செலவிற்குதான் பொருந்தும் என்ற கட்டுப்பாடு எதையும் நிறுவனங்கள் விதிப்பதில்லை. ஒரு சில நிறுவனங்கள், புறநோயாளியாக சிகிச்சை பெறும் செலவுடன், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான செலவுகளையும் வழங்கக் கூடிய மருத்துவ காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. பஜாஜ் அலையன்ஸ், அப்பல்லோ மூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட காப்பீட்டு திட்டத்தை வழங்குகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 3 லட்ச ரூபாய் வரையிலான காப்பீடு செய்து கொள்ளும் வசதி உள்ளது. ஓராண்டில் புறநோயாளியாக மேற்கொள்ளும் சிகிச்சை செலவுக்கான வரம்பு, 8,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஏற்கனவே உள்ள நோய்களுக்கு, காப்பீட்டு வசதி வழங்குவதற்கான காத்திருப்பு காலம், 2 ஆண்டுகள் மட்டுமே. இத்திட்டத்திற்கான ஓராண்டு பிரீமியத் தொகை,15 ஆயிரம் ரூபாய். ஒட்டுமொத்த நோய்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், ஆண்டுதோறும் அதிக அளவில் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். நல்ல நிதிவளமும், ஆரோக்கியமான பரம்பரையில் வந்தவர்களும், புறநோய் சிகிச்சையை உள்ளடக்கிய கூடிய சாதாரண மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்யலாம். அதே சமயம், குறைந்த பிரீமியம் தொகை என்பதற்காக, காப்பீட்டு வரம்பை குறைத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

“பேமிலி புளோட்டர்’ திட்டம் இதில், அதிக தொகையை பிரீமியமாக செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம், இத்திட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையை, குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. ஒரே கல்லில் பல மாங்காய் என்பது போல், ஒரே திட்டத்தில் குடும்பத்தினர் அனைவரும் பயன் பெறலாம். உதாரணமாக, மேக்ஸ் பூபா நிறுவனத்தின் “பேமிலி புளோட்டர்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், அதிகபட்சமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 13 பேர் காப்பீட்டு வசதியை பெறலாம். காப்பீடு கோராமல், தொடர்ந்து பல ஆண்டுகள் பிரீமியம் மட்டும் செலுத்தி வந்தால், மறு ஆண்டு பிரிமியத்தில் தள்ளுபடி வழங்கப்படும். அல்லது போனசாக, காப்பீட்டு தொகையின் வரம்பு உயர்த்தப்படும்.

“இன்டெம்னிட்டி’ திட்டம் மருத்துவ காப்பீட்டில், “இன்டெம்னிட்டி பாலிசி’ எனப்படும் உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் உள்ளது. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே முக்கிய நோய்களுக்கான பிரிவில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், எந்த தொகைக்கு காப்பீடு செய்திருந்தாலும், மருத்துவமனையில் செலவான தொகையை மட்டும் காப்பீட்டுதாரர் செலுத்தினால் போதும். இதில், பிரிமியம் தொகை, வழக்கமான காப்பீட்டு திட்டத்தை விட குறைவாகும். அதாவது, ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் “இன்டெம்னிட்டி பாலிசி’ திட்டத்திற்கான பிரிமியம் 550 ரூபாய் என்றால், அதே திட்டத்தில் வழக்கமான பயன்கள் பிரிவின் பிரிமியம் தொகை 622 ரூபாய் என்ற அளவில் இருக்கும். மேற்கண்ட திட்டங்களில் விருப்பமானவற்றை தேர்வு செய்வதுடன், மருத்துவ காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை கூர்ந்து படித்து, உரிய விளக்கங்களை முகவரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இதனால், பின்னாளில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கலாம்.


Related

உபயோகமான தகவல்கள் 3602218514011841138

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item