எதில் வேகம் வேண்டும்? அமுத மொழிகள்!
எதை எதை விரைந்து செய்வதில் வேகம் காட்ட வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். * தொழுகையை அதன் நேரத்தில் த...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_5323.html
எதை எதை விரைந்து செய்வதில் வேகம் காட்ட வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.
* தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதில் விரைந்து கொள்ளுங்கள்.
* கைப்பொருள் கைவிட்டுப் போவதற்கு முன் தானதர்மங்கள் கொடுப்பதில் விரைந்து கொள்ளுங்கள்.
* வயதும் காலமும் வீணாகும் முன் நன்மையான காரியங்களை செய்வதில் விரைந்து கொள்ளுங்கள்.
* வயதுவந்த பெண்மக்களைத் திருமணம் செய்து வைப்பதில் விரைந்து கொள்ளுங்கள்.
* மரணம் வரும்முன்பு மறுமைக்குஉரிய நற்செயல் ஆற்றுவதில் விரைந்து கொள்ளுங்கள்.
* மனசஞ்சலம் அடைவதற்கு முன் உங்களுக்கிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளை சமாதானம் மூலம் தீர்த்துக்கொள்வதில் விரைந்து கொள்ளுங்கள்.
* மரணத்திற்கு முன் பாவமன்னிப்பு தேடிக்கொள்வதில் விரைந்து கொள்ளுங்கள்.
* வாங்கிய கடனை திருப்பித்தருவதில் விரைந்து கொள்ளுங்கள்.
Post a Comment