சர்க்கரை வியாதிகளுக்கான உணவு--மருத்துவ டிப்ஸ்
1. ஓட்ஸ், பார்லி, கஞ்சி அடிக்கடி உண்ணல் வேண்டும். இரண்டுமே கெட்ட கொழுப்பை குறைக்கும். 2. பாவற்காய் தினமும் உண்ணல் நல்லது 3. தக்காளி -[ மரு...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_3218.html
1. ஓட்ஸ், பார்லி, கஞ்சி அடிக்கடி உண்ணல் வேண்டும். இரண்டுமே கெட்ட கொழுப்பை குறைக்கும்.
2. பாவற்காய் தினமும் உண்ணல் நல்லது
3. தக்காளி -[ மருத்துவர்கள் அஸ்பிரின் என்ற மாத்திரையை சர்க்கரை வியதிக்காரர்களை தினமும் எடுக்க சொல்லி பரிந்துரைப்பார். இந்த அஸ்பிரின் செய்யும் வேலையை தக்காளி செய்கின்றது.] ஆகவே தினமும் தக்காளியை பச்சையாக மூன்று வேலையும் உண்ணலாம்.
3. வெள்ளரிக்காயை தினமும் உண்ணல் வேண்டும்
4. வெந்தயகீரை, முருங்கை கீரை போன்ற கீரைகளை தினமும் மாறி மாறி உண்ணல் நல்ல பலனை தரும்.
5. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருதல் மிகுந்த பலனை தரும். வெந்தயத்துக்கு சர்க்கரையை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை உண்டு.
6. வெறும் வாயில் அடிக்கடி பட்டையை மென்று வருதலும் நல்ல மருத்துவம்.
7. புரோகோலி SALAD ஒரு அருமையான உணவு.
8. முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
9. காளானை தினமும் உட்கொள்ளல் வேண்டும்.
10. கோதுமை, ராகி, கம்பு, ரவை போன்றவற்றால் செய்த உணவுகள்
11. அரிசியில் சிவப்பரிசி அல்லது குத்தரிசி நல்லது.
12. சின்ன வெங்காயம் மிகச் சிறந்த மருந்து. பச்சையாக சாப்பாட்டோடு உண்ணல் வேண்டும்.
13. பாசிப்பயறிலான உணவுகள்
13. இரவில் படுக்கும் முன் பூண்டு பால் குடித்தல் நல்ல பலனை தரும்.
மேலே குறிப்பிட்டவற்றில் காளான், புரோகோலி, ஓட்ஸ், பார்லி,சின்ன வெங்காயம், பூண்டு பால் போன்றவை எல்லா வியாதிகளுக்கும் எதிராக போராடக் கூடியவை. ஆகவே அனைவருமே நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரை / கொலோஸ்டஃரோல் உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ளக் கூடாத உணவுகள்:
1. வேர் மரக்கறிகள் - முள்ளங்கி தவிர்ந்த எல்லா கிழங்குகளும் இதில் அடங்கும்.
2. கொழுப்பு கூடிய உணவுகள் (ஆடை அகற்ற படாத பால், தயிர் மற்றும் வெண்ணெய் என்பன அடங்கும்).
3. அரிசி உணவுகள்
4. சிவப்பிறைச்சி (RED MEAT)
5. நொறுக்குத் தீனிகள்
6. இனிப்பு பண்டங்கள்
எல்லாமே திரட்டிய தகவல்கள். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று இங்கு தந்து இருக்கிறேன். பயன் பெறுங்கள்! உங்களுக்கு தெரிந்த மற்றவர்களும் பயன் பெற உதவுங்கள்!
Post a Comment