நரையே என்னிடம் நெருங்காதே!---ஹெல்த் ஸ்பெஷல்

முடிக் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, மெலனின் அழிவை தடுத்து, நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்புத மூலிகை கர...

முடிக் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, மெலனின் அழிவை தடுத்து, நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்புத மூலிகை கரும்பூலா. முகம் பார்க்கும் கண்ணாடியில் நரைமுடிகளை பார்த்தவுடனேயே வயதாகிவிட்ட உணர்வும், சோர்வும் தோன்றிவிடுவதுண்டு. கரிய நிறமுடையவர்களை விட சிவந்த மற்றும் மாநிறமுடையவர்களுக்கு, வெள்ளை நிற முடி, விரைவில் ஏற்படுகிறது. இந்தியர்களுக்கு, 30 வயதுக்கு மேல், நரைக்கத் துவங்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது, 20 வயதிற்கு முன்பாகவே, சிலருக்கு நரை துவங்கி விடுகிறது. இது இளநரை என்று அழைக்கப்படுகிறது. மனித ரோமத்திலுள்ள மெலனின் என்னும் கரிய நிறப் பொருளானது ரோமத்திற்கு கறுப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இந்த மெலனின், முடியின் வேர்க் கால்களில் குறையத் துவங்குவதால், கறுப்பு நிறமற்ற முடி முளைக்கத் துவங்குகிறது. மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள், முடியின் அடியிலும், தோலிலும், கறுப்பு நிறமிகளை சேமித்து வைக்கின்றன. இந்த செல்களின் உற்பத்தி குறைந்து, மெலனின் அற்ற செல்கள் வளர்வதால், நரைமுடி தோன்ற ஆரம்பிக்கிறது. நரைமுடி, முதுமையின் அடையாளமாக கருதப்படுவதால், நரைக்க ஆரம்பித்ததும், வயோதிகத்தை நினைத்து, பயமும், சோர்வும் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, முடிக்குச் சாயம் பூசத் துவங்கி விடுகிறோம். அமோனியா, காரியம் கலந்த சாயங்கள், பல கெடுதல்களை ஏற்படுத்துகின்றன. நரைமுடியை வேருடன் பிடுங்குவதால், மெலனின் இல்லாத செல்கள், அருகிலுள்ள முடிகளின் வேர்க்கால்களில் சிதறி, அங்கு பெருகி, மீண்டும் நரைமுடியை அதிகப்படுத்துகின்றன. ஆகவே நரைமுடிகளை பிடுங்காமல், கீழ்பாகம் வரை, வெட்டி மறைத்துக் கொள்வது நல்லது. தைராய்டு குறைபாடு, பி12 வைட்டமின் குறைபாடு, வெண்படை போன்ற தோல் நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், புகைப்பழக்கம், புரதச்சத்து குறைபாடு, பரம்பரை ஆகியவை, நரை ஏற்படக் காரணங்களாக அமைகின்றன. தலையில் பொடுகு அதிகம் தோன்றினால், அவை வேர்க்கால்களை அடைத்து, மெலனின் உற்பத்தியை குறைத்து, நரையை அதிகப்படுத்துகின்றன. * தலையை அலசி குளிப்பதற்காக பயன்படுத்தும், சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் முடி அலசிகளிலுள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு, வேர்க் கால்களை சேதமடையச் செய்து, கறுப்பு நிறமிகளை அழித்து, நரைமுடிகளை அதிகப்படுத்துகின்றன. புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து குறைவினால், முடியின் கறுமை நிறம் மங்கி, செம்பட்டை நிறம் தோன்றுகிறது. நாளடைவில் இதுவே, நரைமுடிக்கு காரணமாக அமைகிறது. நரைமுடி அதிகரிப்பதற்கு, பி.சி.எல்., என்ற ஜீன்கள் காரணமாக இருப்பதாக, அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களை விட ஆண்களுக்கே, முடி மிக கறுப்பாக காணப்படுகிறது.கரும்பூலாவின் குணம்முடிக் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, மெலனின் அழிவை தடுத்து, நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்புத மூலிகை கரும்பூலா.இந்தச் செடியின் இலைகள் மற்றும் பழங்களில் உள்ள குளோஜிடோனால், பிட்டுலின் மற்றும் பிரிடெலின் வேதிப்பொருட்கள், நரைமுடிகளுக்கு காரணமான மெலனின் அழிவை தடுத்து, கறுப்பு நிறத்தைக் கூட்டி, இளநரை ஏற்படாமல் தடுக்கின்றன. கரும்பூலா பழம் மற்றும் இலைகள், நெல்லிக்காய், மருதோன்றி இலைகள், கறிவேப்பிலை இலைகள், அவுரி இலைகள் ஆகியவற்றை இடித்து, 500 மி.லி., சாறெடுத்துக் கொள்ள வேண்டும். கடுக்காய் தோலை, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 500 மி.லி., தேங்காய் எண்ணெயுடன் சாறு மற்றும் கடுக்காய் தோல் பொடியை கலந்து, கொதிக்க வைத்து, சாறு வற்றியதும் வடிகட்டி, சூடு ஆறியபின், மூடிய பாத்திரத்தில் எடுத்து வைத்து, 15 நாட்கள் சென்றதும், மீண்டும் ஒருமுறை வடிகட்டி, தலையில் தேய்த்து வர, நரைமுடி வராமல் தடுக்கும் மற்றும் இளநரை மாறும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 1387041234795762929

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item