செட் தோசை--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் இட்லி அரிசி - கால் கிலோ பச்சரிசி - கால் கிலோ உளுத்தம் பருப்பு - 100 கிராம் கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை ஆப்ப சோடா - ஒரு சி...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_2384.html
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - கால் கிலோ
பச்சரிசி - கால் கிலோ
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
அரிசியையும், உளுந்தையும் சேர்த்து, நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். அரைத்து, உப்பு போட்டு கரைத்து, இரவு முழுக்க புளிக்க விடவும். காலையில் கேசரி பவுடர், ஆப்ப சோடா போட்டு, நன்கு கலக்கவும். தவாவை அடுப்பில் வைத்து, காய்ந்ததும், உள்ளங்கை அளவுக்கு, கனமாக மாவை ஊற்றவும். எண்ணெயை விட்டு, இருபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
Post a Comment