பதல் பாஜி---சமையல் குறிப்புகள்
தேவையானவை: உருளைக்கிழங்கு – 500 கிராம் தக்காளி – 225 கிராம் சீரகம் – கால் டீகரண்டி கடுகு – கால் டீகரண்டி பச்சைமிளகாய் – 2 மிளகாய்ப்பொடி – 1...
தேவையானவை:
உருளைக்கிழங்கு – 500 கிராம் தக்காளி – 225 கிராம் சீரகம் – கால் டீகரண்டி கடுகு – கால் டீகரண்டி பச்சைமிளகாய் – 2 மிளகாய்ப்பொடி – 1 டீகரண்டி கரம் மசாலா – அரை டீகரண்டி தனியா-சீரகப்பொடி – 1டீகரண்டி மஞ்சள் பொடி – கால் டீகரண்டி உப்பு – தேவைக்கேற்ப கறிவேப்பிலை – ஒரு இணுக்கு பெருங்காயம் – ஒரு துண்டு சமையல் எண்ணெய் – 4 டீகரண்டி தேங்காய் துருவல் – 2 டீகரண்டி வெங்காயம் – 2
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, எட்டு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சூடேற்றியவுடன் அதில் சீரகம், கடுகு, பச்சை மிளகாய்த்துண்டு பெருங்காயம் ஆகியவற்றைப்போட்டு, பின் வெங்காயத் துண்டுகளையும் கொட்டி 2 நிமிடம் வேகவிடவும்.
அடுத்து, அதில் தக்காளி, உருளைக்கிழங்குத் துண்டுகள், மிளகாய்ப்பொடி தனியா-சீரகப்பொடி, கரம்மசாலா, மஞ்சள்ப் பொடி, கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல், உப்பு இவற்றையும் சேர்த்து இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி சுமார் 25 நிமிடங்கள் வேகவிடவும்.
Post a Comment