துவரம் பருப்பு தோசை--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 3 கப் துவரம் பருப்பு - 1 கப் பூண்டு - 10 பல் சின்ன வெங்காயம் - 4 சீரகம் - 1/...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_20.html
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 3 கப்
துவரம் பருப்பு - 1 கப்
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 4
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1 கப்
மிளகாய் வற்றல் - 10
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிதளவு
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
புழுங்கல் அரிசி, துவரம் பருப்பை ஊறவைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். (வெங்காயம், பூண்டு தோலுரித்துக் கொள்ளவும்). அரைத்த மாவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிச் சேர்த்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி தோசைகளாக சுட்டு எடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.
Post a Comment