நபி மருத்துவம் - ஜவ்வரிசி--உணவே மருந்து

இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்...

இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக "ஜவ்" என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள். பார்லி ரொட்டியுடன் சுரைக்காய், இறைச்சிக் குழம்பு சேர்த்து சாப்பிடுவது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று புகாரி, முஸ்லிம் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. பார்லி ரொட்டிக்கு குழம்பாக பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பெருமானார் அவர்கள் சாப்பிட்டதாக அபூதாவூத் ஹதீஸ் கூறுகிறது. பார்லி அரிசியை இடித்து அதைப் பாலில் கொதிக்க வைத்து, சுவைக்காக தேன் கலந்த ஒருவிதமான கஞ்சியை பெருமானார் வீட்டில் சமைப்பார்கள். இதற்கு அரபு மொழியில் "தல்வீணா" என்று பெயர். வீட்டில் யாராவது உடல் நலமின்றி இருந்தால் அவர்கள் பூரண குணம் பெறும்வரை "தல்வீனா" கஞ்சி தயாரித்துக் கொடுத்துக் கொண்டே இருப்பார்களாம். சிலரின் மரணத்தால் குடும்பத்தினருக்கு ஏற்படும் துக்கம், கவலை, அதிர்ச்சி, சோர்வு, பயம், கோழைத்தனம் நீங்கி தைரியத்தை உண்டாக்க "தல்வீனா" கஞ்சியைக் குடிக்க பெருமானார் அவர்கள் கூறி இருக்கின்றார்கள். முகத்தைத் தண்ணீரால் கழுவினால் எப்படி சுத்தமாகிறதோ அதேபோல் "தல்வீனா கஞ்சி" வயிற்றைச் சுத்தம் செய்கிறது என்று பெருமானார் கூறியதை ஹஜ;ரத் ஆயிஷா (ரலி) உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். போர்க்காலத்தில் அரபு ராணுவ வீரர்கள் பார்லியையும், பேரீச்சம்பழங்களையும் உடன் கொண்டு செல்வார்கள். அதைச் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடி ஊட்டச் சத்தும், புத்துணர்வும் கிடைக்கின்றது என்று அரேபியர்கள் கூறுகின்றனர். ஒரு பங்கு பார்லி, ஐந்து பங்கு தண்ணீர் ஆகிய இரண்டையும் கொதிக்க வைத்து அது கால் பாகமாகச் சுண்டிய பின் பயன்படுத்தலாம் என்று இப்னு கய்யூம் (ரஹ்) கூறியிருக்கிறார். சாதாரண ஜுரத்தைப் போக்க ஆங்கில மருந்துகளும், ஊசிகளும் குத்திக்கொள்ளும் முறை நம் பழக்கத்தில் வந்து விட்டது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஜுரம் ஏற்பட்டால் அவர்களுக்கு பார்லி அரிசிக் கஞ்சியைத்தான் தருவார்கள் என்று ஹஜ;ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதை ஜாதுல்மாத் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது. இறைவே தங்களான தவாரத். இஞ்சீல் ஜபூர் ஆகியவைகளில் ஜவ்வரிசியை பற்றி 21 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது. யுனானி மருத்துவம் ஒரு பங்கு ஜவ்வரிசியை 15 பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து அது மூன்றில் ஒரு பாகம் சுண்டிய பிறகு குடித்தால் சுமார் 100 வியாதிகள் குணமாகும். என்று ஃபிர்தௌஸ் ஹிக்மத் என்னும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. பார்லி நீரைக் குடிப்பதால் தொப்பை குறையும். இதன் மாவைப் பிசைந்து மோருடன் குடித்தால் பித்த வாந்தி, தண்ணீர்த்தாகம், நெஞ்செரிச்சல் ஆகியன குணமாகும். தலைப் பொடுகு, சொறி, சிரங்கு ஆகியவை குணமாக பார்லி அரிசி மாவைக் காடியில் கலந்து பூசலாம். மூட்டுவலி, நரம்புவலி குணமாக பார்லி அரிசி யுடன் வில்வப் பழத்தோலைச் சேர்த்து காயில் அரைத்துப் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்

Related

உணவே மருந்து 7418873883476662386

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item