நபி மருத்துவம் திராட்சை---உணவே மருந்து

திருக்குர் ஆனில் திராட்சையைப்பற்றி பதினோரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நபி பெருமானார் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்...

திருக்குர் ஆனில் திராட்சையைப்பற்றி பதினோரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நபி பெருமானார் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா (ரலி) கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள். உலர்ந்த திராட்சையை சாப்பிடுங்கள். இது மிகச் சிறந்த உணவாகும். அசதியைப் போக்கும். கோபத்தைத் தணிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். இதை சமையலில் சேர்த்தால் நல்ல மணம் தரும். இது சளியை வெளியேற்றும். முகத்தை கவர்ச்சிகர மாக்கும். சிவப்பு நிற உலர்ந்த திராட்சையின் 21 விதைகளை தினசரி சாப்பிடுபவர்களுக்கு கொடிய வியாதிகள் வராது. (அபூநயீம்) உங்கள் நலனுக்காக உலர்ந்த திராட்சைப் பழங்கள் உள்ளன. இது உடலை கவர்ச்சிகரமாக்கும். சளியை வெளியேற்றும். நரம்புகளுக்கு சக்தி தரும். பலவீனத்தைப் போக்கும். கவலையை மறக்கச் செய்து மனதில் சந்தோஷத்தை உண்டாக்கும். சுவாசத்தில் நல்ல வாசனையை உண்டாக்கும். எங்கள் நாட்டில் திராட்சை இருக்கின்றது. அதன் சாற்றை பிழிந்து நாம் குடிக்கலாமா? என்று நபி பெருமானிடம் ஹஷ்ரத் தாரிக்பின் சுவேத் ஹஜிரி (ரலி) என்பவர் கேட்டார். …குடிக்க வேண்டாம்† என்று அதற்கு பதில் கிடைத்தது. திராட்சை சாற்றை நாம் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகத் தருகிறோம் என்று அவர் மீண்டும் கூறியதற்கு, பதில் அளிக்கையில், இதில் வியாதியை குணமாக்கும் மருத்துவத்தன்மை ஏதுமில்லை. இது ஒரு வியாதியே ஆகும் என்று நபி பெருமானார் கூறினார். (முஸ்லிம்-அபூதாவத்திர்மிதீ) சாராயத்தை மருந்தாகப் பயன்படுத்துபவர்களுக்கு இறைவன் சுகம் அளிப்ப தில்லை. (அபூநவீம் பதஹுல் கபீர்) திராட்சைப் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று அண்ணல் நபி நாயகம் தெளிவாகக் கூறியுள்ளார். அதைப் பின்பற்றினால் திராட்சையால் பல நன்மைகளைப் பெறலாம். 100 கிராம் திராட்சைப் பழங்களில் 1.9 கிராம் புரோட்டீன், 1.05 கிராம் கொழுப்புச் சத்து, 83 மில்லி கிராம் கார்போ ஹைட்ரேட். 84 மில்லி கராம் கால்ஷியம், 18 மில்லி கிராம் பாஸ்பரஸ், 5 மில்லி கிராம் வைட்டமின் சி, 150 யூனிட் வைட்டமின் ஏ, அதன் அளவில் வைட்டமின் பி2, பி1 ஆகியவை கிடைப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தினசரி ஒருவர் 125 கிராம் முதல் 250 கிராம் வரை கிஷ்மிஷ் பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கிடைக்கும். இந்திய அரசின் அக்ரிகல்ச்சுரல் கெமிஸ்ட் நிறுவனம் உலர்ந்த திராட்சையை ஆய்வு செய்தது. இதில் மனிதனுக்கு தேவைப்படும் 90 சதவீதம் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. உடலுக்குத் தேவையான தாது உப்புக்களைத் தவிர, அனைத்து வைட்டமின், குளுக்கோஸ், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்ஷியம், அக்சாலிக் மற்றும் டார்டாரிக் ஆசிட் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இதன் இலைகளிலும், தோலிலும் ஒருவிதமான எண்ணெய் கொழுப்புச்சத்தும், 18% டேனிக் ஆசிட்டும் இருக்கின்றது. இது உடலுக்குத் தீங்கு விளை விப்பதில்லை. இதை சர்க்கரை வியாதியினரும் பயன்படுத்தினாலும், இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிக்காது என்று கூறுகிறார்கள். திராட்சையைப் பதமாக உலர வைத்து விற்பனை செய்யப்படும் பெரிய திராட்சைக்கு மவீஜி முனேகா என்றும், சிறிய பழத்தை கிஷ்மிஷ் பழம் என்றும் அழைப்பார்கள். இது ஒரு நல்ல இரத்தச் சுத்தி மருந்தாகும். யுனானி மருத்துவக் களஞ்சியத்தில் உலர்ந்த திராட்சை, ஆகாஷவல்லி இரண்டை யும் சமஅளவில் கொதிக்க வைத்து குடித்தால் குடிப் பழக்கம் நீங்கும், அசுத்தமான இரத்தமும் சுத்தமாகும். குடியால் ஏற்பட்ட சகல பிரச்சினைகளும் குணமாகும் என்று கூறப்பட்டுள்ளது. 9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.

Related

உணவே மருந்து 6974349469897687842

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item