தொலைக்காட்சியை பராமரிக்கும் முறைகள்---உபயோகமான தகவல்கள்,

தொலைக்காட்சிக்கு வோல்டெஜ் ஸ்டெபிலைசர் மிக அவசியம். தொலைக்காட்சியை நிறுத்தும்போது முதலில் தொலைக்காட்சியில் உள்ள சுவிட்சை அணைத்து விட்ட...

தொலைக்காட்சிக்கு வோல்டெஜ் ஸ்டெபிலைசர் மிக அவசியம். தொலைக்காட்சியை நிறுத்தும்போது முதலில் தொலைக்காட்சியில் உள்ள சுவிட்சை அணைத்து விட்டுப் பிறகு மின் இணைப்பைத் துண்டிக்கும் சுவிட்சை அணைக்க வேண்டும். தொலைக்காட்சியை இயக்க விரும்பும்போது முதலில் மின் சப்ளை சுவிட்சைப் போட்டு விட்டுப் பிறகு தொலைக்காட்சி. சுவிட்சைப் போட வேண்டும். அதிக வெளிச்சம் உள்ள இடத்திலும் வெளிச்சம் மிகவும் குறைவாக உள்ள இடத்திலும் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. அறையிலுள்ள விளக்கு 40 முதல் 60 வாட் பல்புகளுக்கு மேற்பட்டதாக இருக்கக் கூடாது. சுவற்றை ஒட்டினாற் போல் தொலைக்காட்சியை வைக்கக் கூடாது. அரை அடி இடைவெளியாவது அவசியம். அப்போது தான் செட்டுக்குள் காற்றோட்டம் இருக்கும். அழகான காபினட்களில் சிலர் தொலைக்காட்சியை வைத்திருப்பார்கள். அதன் பின்புறம் திறந்தபடி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். தண்ணீர் டம்பளர் போன்றவற்றை தொலைக்காட்சி மேல் வைக்கக் கூடாது. ஷார்ட் சர்க்யூட் ஆகிவிடும். ரேடியோ, டேப்ரிகார்டரை கலர் டி,வி மீது வைக்கக் கூடாது. ஸ்பீக்கரின் காந்தம் தொலைக்காட்சியில் கலர்ப்புள்ளிகள் தோன்றச் செய்யும். ஆன் செய்த நிலையில் தொலைக்காட்சியை நகர்த்தக் கூடாது. தொலைக்காட்சி மேல் நட், ஸ்குரூ போன்றவற்றை வைக்கக் கூடாது. அவை தவறிப் பின் துளைகள் வழியாக உள்ளே விழுந்தால் தொலைக்காட்சி பழுதடையும். ரிமோட் கன்ட்ரோல் வைத்திருப்போர் அதையே பயன்படுத்தவும். புயல், மின்னல் ஏற்படும்போது தொலைக்காட்சி ஒயரின் இணைப்பை துண்டித்து விட வேண்டும். மின்சாரம் தடைபடும்போது உடனடியாக தொலைக்காட்சியை அணைத்து விட வேண்டும். தொலைக்காட்சியை துணி அல்லது அதற்குரிய கவரால் மூடும்போது தொலைக்காட்சியின் பின்பகுதி திறந்தபடி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் தொலைக்காட்சியை வைக்க வேண்டும். எப்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் 10 அடிகள் விலகி அமர்ந்து பார்ப்பது கண்களுக்குப் பாதுகாப்பானது. தொலைக்காட்சியை ஜன்னல் அருகில் வைப்பதை தவிர்ப்பதன் மூலம் மழை, இடி, மின்னல் ஆகியவற்றிலிருந்து தொலைக்காட்சியை காக்கலாம். தொலைக்காட்சியின் பிரதானப் பகுதியே பிக்சர் டியூப் தான். முறையாக பராமரிக்கும் பட்சத்தில் பிக்சர் டியூப் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். தொலைக்காட்சியும் அடிக்கடி பழுதாகாது.

Related

வீட்டுக்குறிப்புக்கள் 6100830408792439230

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item