Saturday, March 12, 2011

பழகிய பொருள்... அழகிய முகம்! தேகத்தை பொலிவாக்கும் தேங்காயின் அழகு சேவை

மூன்றே வழிகளில் சிகப்பழகு! தேகத்தை பொலிவாக்கும் தேங்காயின் அழகு சேவை ! சிலருக்கு முகம் இளமையாக இருக்கும். ஆனால், கைகள் சுருக்கம் விழுந்து வயதான தோற்றத்தைத் தரும். அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இது. 1 துண்டு தேங்காயுடன், ஒரு பாதாம்பருப்பை சேர்த்து நன்றாக அரைத்து கைகளில் பூசி கழுவுங்கள். தொடர்ந்து ஒரு வாரம் இப்படிச் செய்து வந்தாலே சுருக்கம் மறைந்து கைகள் வாழைத்தண்டு போல் மினுமினுக்கும். தேமலும் படையுமாக படையெடுத்து வந்து தொல்லை பண்ணுகிறதா? சூப்பர் வைத்தியம் இருக்கிறது இந்த தேங்காய் பேஸ்ட்டில்... கருஞ்சீரகம் & 1 டீஸ்பூன், கொப்பரை தேங்காய் & 1 துண்டு... இரண்டையும் அரைத்து தேமல், படை இருக்கும் இடங்களில் ‘பத்து’ மாதிரி போட்டு, காய்ந்ததும் அலசுங்கள். தொடர்ந்து இப்படி ஒரு வாரம் போட்டு வர, தேமலும் படையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். இன்றைய இளசுகளின் மாபெரும் பிரச்னையான இளநரையை, வராமலேயே தடுத்துவிடும், இந்த ‘ஹோம் மேட்’ ஷாம்பு! நெல்லிமுள்ளி, செம்பருத்தி இலை, மருதாணி இலை... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, பொடி செய்யுங்கள். அதிலிருந்து 4 டீஸ்பூன் எடுத்து, இதனுடன் தேங்காய்ப் பால் & 2 டீஸ்பூன், கொஞ்சம் டீ டிகாஷன் (பேஸ்ட் ஆகும் அளவுக்கு) கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள். வாரம் ஒருமுறை இதுபோல குளித்து வந்தால், இளநரை கிட்டவே வராது. திடீரென்று முன்புற முடி கொட்டி, வழுக்கையாகி கவலைப்படுகிறீர்களா? இதற்கும் தீர்வு இருக்கிறது தேங்காயில். 2 டீஸ்பூன் தேங்காய்ப் பாலில் ஒரு சின்ன வெங்காயத்தை ஊறவைத்து, மை போல அரை யுங்கள். இந்த விழுதை முடி கொட்டிய பகுதியில் பத்து போல பூசி, நன்றாக தேய்த்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வாருங்கள். விரைவிலேயே வழுக் கையை மறைத்தபடி, முடி முளைக்கத் தொடங்கிவிடும். நுனி முடியில் பிளவு ஏற்பட் டால், ஒட்டுமொத்த கூந்தலின் வளர்ச்சியும் பாதிப்படையும். இந்தப் பிளவைப் போக்கி, முடி வளர இதோ, ஒரு எளிய வழி... தேங்காய்ப் பால் & அரை கப், பொன்னாங்கண்ணி கீரை ஜூஸ் & அரை கப்... இரண்டையும் கலந்து 3 டீஸ்பூன் பயத்தமாவை சேர்த்து தலைக்கு ‘பேக்‘ போட்டு 10 நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் இரண்டு முறை உபயோகித்தால், நுனி பிளவு மறைந்து முடி வளரும். தூக்கமில்லாமல் திருகுவலியால் அவதிப்படும் பச்சிளங்குழந்தை களுக்குத் தூக்கம் தரும் வள்ளலாகவும் இருக்கிறது தேங்காய். தேங்காய்ப் பாலுடன் பயத்த மாவை கலந்து குழந்தையின் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவி வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டுங்கள். பிறகு நன்றாக துவட்டி சாம்பிராணி போடுங் கள். இப்படி செய்தால், குழந்தை குறைந்தது ஆறு மணி நேரம் நிம்மதியாகத் தூங்கும். கே& ப ‘‘என் உடலில் வெயில் படும் இடங்களில் சருமத்தின் நிறம் கருத்திருக்கிறது. இந்தக் கருமையைப் போக்கி, சிகப்பழகு பெற டிப்ஸ் ப்ளீஸ்...’’ ‘‘வெயில் படும் இடங்களில் மட்டும் சருமம் கருத்திருப்பவர்கள் மட்டுமல்ல, கருப்பாகவும், மாநிறமாகவும் இருப்பவர்களும் சிகப்பழகு பெற எளிமையான வழிகள் இருக்கின்றன. தலையை கவனிப்பது முதல் வழி. தலையில் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால்தான் சருமத்தில் கருமை படராது. அதோடு, சருமத் தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பதுபோல பார்த்துக் கொள்வதும் அவசியம். இந்த இரண்டையும் ஈடுசெய்ய ஒரு ஸ்பெஷல் சீயக்காய் பவுடர் இருக்கிறது. சீயக்காய் & கால் கிலோ, பயறு & கால் கிலோ, வெந்தயம் & கால் கிலோ, புங்கங்கொட்டை & 100 கிராம், பூலான் கிழங்கு & 100 கிராம்... இவற்றை நன்றாக மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் அந்த ஸ்பெஷல் சீயக்காய் பவுடர். வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை ஒரேயடியாக ஓடிப் போகாமல், கருமையும் மறைய தொடங்கும். அடுத்ததாக கவனிக்கவேண்டியது, சருமம்! வெளியில் போவதற்குமுன் சிறிது தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது. வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால், நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக இதோ, இந்தக் குளியல் பவுடரை பயன்படுத்தினால், சருமம் மிளிரும். பயத்தம்பருப்பு & 100 கிராம், கடலைப்பருப்பு & 100 கிராம், பூலான்கிழங்கு & 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் & 50 கிராம், வெள்ளரி விதை & 100 கிராம், வெட்டிவேர் & 25 கிராம்... இவற்றை மிஷினில் அரைத்து, தினமும் பூசி குளியுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்தக் குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சை ஜூஸ் & 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் & 1 டீஸ்பூன் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும். முகத்தில் ஆங்காங்கே படர்ந்திருக்கும் கருமையை போக்க ஒரு இயற்கை ப்ளீச் சிகிச்சை இருக்கிறது. தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி, வெயிலில் நன்றாக உலர்த்துங்கள். இதை மஞ்சள் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசுங்கள். இது, முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகளை களைந்தெடுத்து முகத்தை பளிங்குபோல மாற்றிவிடும். உடம்பில் சூடு அதிகமாகும்போது, தோலின் கருமையும் அதிகமாகிவிடும். அதனால், கீரை, பச்சை காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.

சமையல் குறிப்புகள்! மல்லிகைப்பூ இட்லி செய்வது எப்படி?

‘‘மேற்புறத்தில் பூப்போல உரிந்து, வெள்ளை வெளேரென்று இருக்கும் மல்லிகைப்பூ இட்லி களை (குஷ்பூ இட்லி) பார்த்தாலே ஆசையாக இருக்கிறது. ஆனால், ஓட்டல்களில் பரிமாறப்படுவதுபோல் வீட்டில் செய்ய வரவில்லையே... அந்தப் பக்குவத்தை சொல்வீர்களா?’’ ‘‘மல்லிகைப்பூ இட்லிக்கான முயற்சியை, நீங்கள் அரிசி வாங்கு வதில் இருந்தே தொடங்கவேண்டும். புழுங்கலரிசி வாங்கும்போது, ஐ.ஆர்.20. ரக அரிசியைக் கேட்டு வாங்குங்கள். உளுத்தம்பருப்பில் ‘ஜாங்கிரி பருப்பு’ ரகம் என்று வாங்கவேண்டும். அரிசி 4 பங்கு; உளுத்தம்பருப்பு 1 பங்கு என்பதுதான் இட்லிக்கான சரியான அளவு. இரண்டையும் கழுவி, தனித்தனியே நல்ல தண்ணீரில் ஊறவையுங்கள். முதலில் அரிசியையும், பிறகு உளுந்தையும் தனித்தனியே அரைத்துக் கொள்ளுங்கள். உளுந்தை நன்கு தண்ணீர் தெளித்து, தெளித்து பொங்கப் பொங்க அரைக்க வேண்டும். பிறகு, இரண்டு மாவையும் கலந்து, உப்புப் போட்டு, வலதுகையின் ஐந்து விரலையும் நன்கு பிரிந்திருக்குமாறு வைத்து, மாவுக்குள் விட்டு, மாவை நன்கு அடித்துக் கலந்து வையுங்கள். தூக்கி ஊற்றினால், ஊற்றும்பதத்தில் மாவு இருப்பது சரியான பதம். அடுத்து, மாவை 6&லிருந்து 8 மணி நேரம் வரை புளிக்க விடுங்கள். புளித்தபின், இட்லிகளாக தட்டில் ஊற்ற வேண்டியதுதான்! குக்கர் தட்டு எனில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை விட, அலுமினியம் தட்டு சிறந்தது. அதில் எண்ணெயெல்லாம் தடவத் தேவையில்லை. முடிந்தால், துணி போட்டு ஊற்றலாம். இல்லையென்றாலும் அப்படியே குழியில் ஊற்றி வெந்ததும் ஒரு சிறு அன்னக் கரண்டியால் எடுக்க, இட்லி, பூப்போல அழகாக வரும். குக்கர் தட்டு இல்லாதவர்கள், சாதாரண இட்லி தட்டில் துணி போட்டும் ஊற்றி, எடுக்கலாம். டிப்ஸ்: ஒரு சிலர் புளித்த பிறகு கரண்டிவிட்டு மாவைக் கிளறுவார்கள். அப்படிச் செய்யவே கூடாது. மேலாக, கரண்டியால் மாவை எடுத்து ஊற்ற வேண்டும். மாவு நீர்த்துவிட்டாலோ, உளுந்து சற்று அதிகமாகி விட்டாலோ, அரை கப் ரவையை சேர்த்துக் கரைத்துக் கொள்ளுங்கள்.

சமையல் குறிப்புகள்! கட்டா

கட்டா தேவையானவை: கடலை மாவு & 1 கப், மிளகாய்த் தூள் & அரை டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன்,எண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவைக்கு. தாளிக்க: புளிக்காத தயிர் & ஒன்றரை கப், கடலை மாவு & 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் & 4, கடுகு & கால் டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், பெருங்காயம் & கால் டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது, எண்ணெய் & 3 டேபிள் ஸ்பூன், நெய் & 1 டீஸ்பூன். செய்முறை: ஒரு கப் கடலை மாவுடன் மிளகாய்த் தூள், சீரகம், மஞ்சள் தூள், எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். தனியாக 5 கப் அளவுக்கு தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். அடுத்து, கடலை மாவு கலவையிலிருந்து சிறிது எடுத்து, ஒரு அடி கனத்துக்கு நீளவாக்கில் கயிறு போல் திரட்டுங்கள். இதேபோல் எல்லா மாவையும் செய்து, கொதிக்கும் தண்ணீரில் போடுங்கள். நடுத்தர தீயில் 10 நிமிடம் நன்கு வேகவிடுங்கள். வெந்ததும், தண்ணீரில் இருந்து தனியே எடுத்து ஆற விட்டு, ஒரு அங்குலத் துண்டுகளாக அவற்றை வெட்டுங்கள். தயிருடன் 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு, எண்ணெய், நெய் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கிளறி, தயிர் கரைசலை யும் சேர்த்துக் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருங்கள். கொதிக்கும்போது வேகவைத்த கடலை மாவு துண்டுகளைச் சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். இதை சப்பாத்திக்கு சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள், அடுத்து உங்கள் வீட்டில் தினம்தினம் ‘இந்த சைட் டிஷ்தான் வேண்டும்’ என்று அடம் பிடிப்பார்கள்.

சமையல் குறிப்புகள்! பாட்டியா சப்பாத்தி

பாட்டியா சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு & 1 கப், சீரகம் & 1 டீஸ்பூன், நெய் & 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், கொத்துமல்லி தழை & சிறிதளவு, உப்பு & தேவைக்கு, மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், நெய் & 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி வையுங்கள். கொத்துமல்லியைப் பொடியாக நறுக்குங்கள். பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, மெல்லிய சப்பாத்தியாகத் தேய்த்து வையுங்கள். அதன்மேல் சிறிது மிளகுத்தூள், சீரகம், கொத்து மல்லி, நெய் தூவி சுருட்டுங்கள். சுருட்டியதை அப்படியே முறுக்கித் தட்டுங்கள். மீண்டும் மெல்லியதாகத் தேய்த்து, தோசைக்கல்லில் நெய் சேர்த்து சுட்டு எடுத்தால், அதுதான் பாட்டியா சப்பாத்தி!

சமையல் குறிப்புகள்! ராஜஸ்தான் அல்வா!

கோதுமை மாவு அல்வா தேவையானவை: கோதுமை மாவு & 1 கப், நெய் & கால் கப், சர்க்கரை & அரை கப், மிளகு & 1 டீஸ்பூன், பாதாம் & 3, முந்திரி & 5, ஏலக்காய் தூள் & அரை டீஸ்பூன். செய்முறை: பாதாம், முந்திரியை மெல்லியதாகச் சீவிக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, பிறகு கோதுமை மாவைச் சேர்த்து, சிறிய தீயில், நிறம் மாறி, வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். மற்றொரு அடுப்பில் சர்க்கரையை அரை கப் தண்ணீரில் சேர்த்து, சர்க்கரைக் கரையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு, இந்த சர்க்கரைக் கரைசலை வறுபட்ட மாவில் சேர்த்து, தீயைக் கூட்டி, நன்கு கிளறிவிடுங்கள். அடுத்து, சீவிய பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறி இறக்குங்கள். அல்வாவை சுவைத்துப் பாருங்கள், சொக்கிப் போவீர்கள்!

கிராமத்து கைமணம்! முந்திரிக் கொத்து

முந்திரிக் கொத்து ‘‘இருநூறு கிராம் பயத்தம்பருப்பை சிவக்க வறுத்து, நைஸாக அரையுங்கள். இருநூறு கிராம் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து, கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி, சூடாக இருக்கும்போதே, மாவில் ஊற்றிக் கிளறுங்கள். ஒரு மூடி தேங்காய்த் துருவலை வதக்கி மாவில் சேருங்கள். வாசனைக்கு ஏலத்தூள், வறுத்துப் பொடித்த முந்திரி கொஞ்சம், வறுத்த எள் சிறிதளவு & இவை மூன்றையும் மாவில் கலந்து, நன்கு பிசைந்து, கோலி அளவு உருண்டைகளாக உருட்டுங்கள். 200 கிராம் மைதா, 50 கிராம் பச்சரிசி மாவு, துளி உப்பு, துளி சோடா மாவு, இரண்டு டீஸ்பூன் நெய், சிறிது தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்தில் கரையுங்கள். வடை சட்டியில் தேவையான எண்ணெயைக் காயவைத்து, பருப்பு உருண்டைகளை மூன்று, மூன்றாக, மைதா மாவுக் கலவையில் முக்கியெடுத்து, எண்ணெயில் போட்டு வேகவையுங்கள். இது பத்து நாட்கள்வரை கெடாது. சுவையாகவும் இருக்கும். கல்யாணப் பெண்களுக்கு சீர் கொடுக்கும் பலகாரம் இது!’’ வாயில் நீர் ஊறவைக்கிற முந்திரிக்கொத்து, சாப்பிடறதுக்கும் அருமையான ஸ்வீட்!’’ ‘‘தென்மாவட்டங்கள்ல பிரபலமானது. கல்யாணச் சீரில் முக்கியமான அயிட்டமான இதைச் செய்றதுக்கு ஆகற செலவும் கம்மி... பார்க்கும்போது நிறையவும் இருக்கும்!’’

கிராமத்து கைமணம்! துவரைக் குழம்பு

கிராமத்து கைமணம்! வாய்க்கு ருசியான , சூப்பர் டேஸ்ட்டுல ஒரு குழம்பு காத்திருக்கு. படிங்க... செய்யுங்க... பாராட்டுப் பெறுங்க! துவரைக் குழம்பு இந்த சீஸன்ல எக்கச்சக்கமா கிடைக்கற துவரைக் காய்ல செய்யற குழம்பு இது. துவரைக் காயை வாங்கிவந்து, உரிச்சு பயறா ஒரு கப் எடுத்து வச்சுக்குங்க. பதினஞ்சு சின்ன வெங்காயத்தையும் பத்துப் பல்லு பூண்டையும் தோலுரிச்சு, ரெண்டா நறுக்கி வச்சுக்குங்க. நாலு தக்காளிப் பழத்தை பொடியா நறுக்கி வச்சுக்குங்க. எலுமிச்சங்காயளவு புளியை ரெண்டு கப் தண்ணியில கரைச்சு வச்சுக்குங்க. ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் சோம்பை எடுத்து, எண்ணெய் விடாம வறுத்துப் பொடிச்சு வச்சுக்குங்க. கடாயில மூணு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வச்சு, கொஞ்சம் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, வெந்தயம் போட்டு தாளிச்சு, வெங்காயம், பூண்டை வதக்கிக்குங்க. உரிச்சு வச்சிருக்கற துவரையோட தக்காளி, ரெண்டரை ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் தனியாத் தூள், கால் டீஸ்பூன் மஞ்சத்தூள், தேவையான உப்பு சேத்து, தக்காளி கரையற வரைக்கும் நல்லா வதக்குங்க. ரெடியா வச்சிருக்கற புளித் தண்ணியை, வதக்குன கலவையில ஊத்தி, பத்து நிமிஷம் கொதிக்க விடுங்க. குழம்புல பச்சை வாடை போனதும், பொடிச்சு வச்சிருக்கற பொடியத் தூவி, ரெண்டு பல்லு பூண்டை நசுக்கிப் போட்டு, ஒரு நிமிஷம் கிளறி இறக்குங்க.

கிராமத்து கைமணம்! கலவைப் பருப்பு வடை

கிராமத்து கைமணம்! வாய்க்கு ருசியான ரெண்டு கிராமத்துச் சிற்றுண்டிகளை இங்கே கொடுத்து இருக்கேன். படிங்க... செய்யுங்க... பாராட்டுப் பெறுங்க! கலவைப் பருப்பு வடை ஒரு கை கடலைப் பருப்பு, ஒரு கை பாசிப்பருப்பு, ஒரு கை துவரம் பருப்பு எடுத்துக்குங்க. இதோட மூணு கை உளுத்தம்பருப்பைப் போட்டு, கழுவி, ஒரு மணி நேரம் ஊற வைங்க. அப்புறம், தண்ணி சேர்க்காம, கெட்டியா கரகரனு இதை அரைச்செடுங்க. பெரிய வெங்காயம்&3, பச்ச மிளகா&5, ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் கொத்துமல்லி, கறிவேப்பிலை... எல்லாத்தையும், அரைச்சு வெச்சிருக்கற பருப்புக் கலவையில சேர்த்து, தேவையான அளவு உப்பு, சீரகம் சேர்த்துப் பிசைஞ்சுக்குங்க. கடாயில எண்ணெயைக் காயவச்சு, இந்த மாவை சின்னதா வடை போலத் தட்டி, நடுவுல துளையிட்டு, எண்ணெய் கொள்ளுமளவுக்குப் போட்டு, நடுத்தரமாத் தீயை எரிய விட்டு, மொறுமொறுனு வேகவிட்டெடுங்க. பசங்களுக்கு, இந்த மாவிலேயே கேரட், கோஸ், பீன்ஸ்னு பொடியா நறுக்கின காய்கறிகளைச் சேத்து, வடையா தட்டிப் போட்டு கலர்ஃபுல்லா கொடுத்தா, விரும்பி சாப்பிடுவாங்க.

கிராமத்து கைமணம்! கீரை போண்டா

கிராமத்து கைமணம்! வாய்க்கு ருசியான ரெண்டு கிராமத்துச் சிற்றுண்டிகளை இங்கே கொடுத்து இருக்கேன். படிங்க... செய்யுங்க... பாராட்டுப் பெறுங்க! கீரை போண்டா சுலபமா கிடைக்கிற முளைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, முருங்கைக் கீரை... இதுல ஏதாவது ஒண்ணை, ஒரு கட்டு எடுத்துக்குங்க. மண்ணு போக ரெண்டு தடவை அலசிக் கழுவிட்டு, பொடியா நறுக்கிக்குங்க. ஒரு பெரிய வெங்காயத்தையும் மூணு பச்சை மிளகாயையும் ஒரு துண்டு இஞ்சியையும் பொடியா நறுக்கி வச்சுக்குங்க. ஒரு கப் கடலை மாவுல கால் டீஸ்பூன் சோடா உப்பு, சூடான எண்ணெய் ரெண்டு கரண்டி சேர்த்து, நறுக்கி வச்சிருக்கற வெங்காயம், மிளகாயையும் போட்டு கொஞ்சமா தண்ணி விட்டு, வடை மாவு பதத்துல கலந்து வச்சுக்குங்க. கடாயில எண்ணெயைக் காய வச்சு, கலந்து வச்சிருக்கற மாவைச் சின்னச் சின்ன உருண்டைகளா உருட்டிப் போட்டு, நல்லா செவக்க வேகவிட்டு எடுத்துடுங்க. டூ&இன்&ஒன் டிபன் இது. மதிய சாப்பாட்டுக்கு சைட் டிஷ்&ஆவும் வச்சுக்கலாம். சாயங்காலத்து டிபனாவும் சாப்பிடலாம். இதையே, சீடை சைஸ§க்கு உருட்டிப் போட்டு வேகவிட்டு, எடுத்து ‘கீரை பால்ஸ்’னு குழந்தைகளுக்குக் குடுத்துப் பாருங்க. போட்டி போட்டு சாப்பிடுவாங்க.

டிப்ஸ் ! சுலபமான கை வைத்தியம்...சீதபேதி, ரத்தக் கடுப்புக்கு

எளிதாகக் கிடைக்கும் மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலந்து உட்கொண்டால் சீதபேதி, ரத்தக் கடுப்பு தீரும். இப்பருப்புடன் கறிவேப்பிலை, சுண்டை வத்தல் ஆகிய வற்றைப் பொடி செய்து, தயிரில் சேர்த்து சாப்பிட்டால் மூலநோய் கட்டுப்படும். வீட்டுவேலை செய்ய முடியவில்லையா? உடல் மிகவும் சோர்வாக உள்ளதா? பேரீச்சம் பழங்களை தேனில் ஊறப்போடுங்கள். இரவு தூங்குவதற்கு முன் இதைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடியுங்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஆகிவிடுவீர்கள்.

விதம்விதமான இருமல்களுக்கு, சுலபமான கை வைத்தியம்...

டிப்ஸ் விதம்விதமான இருமல்களுக்கு, சுலபமான கை வைத்தியம்... இஞ்சிச் சாறு, வெங் காயச் சாறு, எலுமிச்சைப் பழச்சாறு இவை மூன்றையும் சமமாக சேர்த்து, சாப்பிட்டு வந்தால், சளி இருமல் மூன்றே நாட்களில் சரியாகிவிடும். பசும்பாலை சுண்டக் காய்ச்சி, அதில், பனங் கற்கண்டுடன் 10 மிளகையும் தூள் செய்து போட்டுச் சாப்பிட்டு வந்தால், உஷ்ண இருமல் ஊருக்குப் போய் விடும். கறந்த பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு சாப்பிட்டு வந்தால், வறட்டு இருமல் ஓடிப் போய்விடும். மூட்டு வலியும் இடுப்பு வலியும் பாடாய்ப் படுத்துகிறதா? அரை லிட்டர் வேப்ப எண்ணெயில், சிறிதளவு நொச்சி இலையைப் போட்டு கொதிக்கவைத்து, ஆறிய பின், வலி உள்ள இடங்களில் தேய்த்து வர, நல்ல குணம் கிடைக்கும். காலையில் எழுந்ததும் காலைக் கடன் கழிக்க முடியாமல் சிரமப்படு கிறவர்கள் நெல்லிக்காய் சாறு பிழிந்து பாலில் கலந்து உட்கொண்டால் எல்லாம் சுலபமாக முடியும்.

பழகிய பொருள்... அழகிய முகம்! வெந்தயக் கீரையின் சுந்தர ஜாலம்!

வெந்தயக் கீரையின் சுந்தர ஜாலம்! வெந்தயக் கீரையின் சுவையும் மணமும் உங்களுக்கு தெரியும். அழகையும் குளிர்ச்சியையும் அது அள்ளித் தரும் என்பது தெரியுமா? தழையத் தழைய கூந்தலுடன் வளைய வரும் பெண்களை பார்க்கும் போது, பொறாமையாக இருக்கிறதா? கவலையை விடுங்கள். தலைமுடி யின் வளர்ச்சியைத் தூண்டும் அற்புத மருந்து வெந்தயக் கீரையில் இருக்கு! 2 கட்டு வெந்தயக் கீரை எடுத்து, காம்பை நீக்கிவிட்டு கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை சீடைக்கு உருட்டுவதுபோல உருட்டி, 2 நாள் வெயிலில் காய வையுங்கள் (உருண்டை உடைந்தாலும் பரவாயில்லை). கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி, மிதமான சூட்டில் இறக்கி அதில் இந்த உருண்டைகளைப் போடுங்கள். 10 நாட்கள் நன்றாக ஊறவிட்டு, வடிகட்டுங்கள். இந்த தைலத்தை தினமும் தலைக்குத் தேய்த்துக்கொள்ளுங்கள். உடம்பு உஷ்ணம் குறைந்து தலைமுடி நீண்டு வளரத்தொடங்கும். தோலை பளபளப்பாக்கவும் இந்தத் தைலம் உதவும். இதனுடன், 5 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து உச்சி முதல் பாதம் வரை சூடு பரக்க தேய்த்து, ஐந்து நிமிடம் கழித்து பயத்தமாவு போட்டுக் குளித்தால்... தோலின் வறட்சி நீங்கி, பளபளவென மின்னும். உடம்புக்கு அது குளுமையும் தரும். சிலருக்கு மூக்கின் மேல் சொரசொரப்பும், கரும் புள்ளிகளும் தோன்றி முக அழகைக் கெடுத்துவிடும். இதற்கும் தீர்வு இருக்கிறது வெந்தயக் கீரையில். சிறிது வெந்தயக் கீரையுடன் தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை மூக்கின் மேல் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இப்படிச் செய்துவந்தால், புள்ளிகளும் சொரசொரப்பும் காணாமல் போய் மூக்குத்தி இல்லாமலே மூக்கு டாலடிக்கும். முகத்தில் கரும்புள்ளியும், அம்மை தழும்பும் மாறாத வடுக்களை ஏற்படுத்திவிடும். இந்த வடுக்களுக்கு ‘குட்பை’ சொல்ல வைக்கிறது வெந்தயக் கீரை. வெந்தயக் கீரையை அரைத்து விழுதாக்கி, ஒரு துணியில் கட்டிவிடுங்கள். சாறு இறங்கிவிடும். இந்தச் சாறு ஒரு டீஸ்பூனுடன், 2 சொட்டு தேன் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் மசாஜ் செய்து, கழுவுங்கள். சில தடவை இப்படி செய்தாலே, இருந்த இடமே தெரியாமல் வடு மறைந்துவிடும். கண் இமைகளில் முடி உதிர்ந்தால் அழகான கண்களும் ‘டல்’லாக தெரியும். முடி கொட்டுவதை நிறுத்தி படபடக்கும் இமைகளைத் தருகிற ‘பளிச்‘ டிப்ஸ் இது. வெந்தயக் கீரையை அரைத்து ஜூஸாக்குங்கள். இந்த ஜூஸில் பஞ்சைத் தோய்த்து இமைகளின் மேல் தடவுங்கள். 5 நிமிடங்கள் கழித்து ‘ஜில்’ தண்ணீரில் கழுவி விடுங்கள். முடி உதிர்வது நின்று கருகருவென இமை முடிகள் வளரத் துவங்கும். பொம்மையின் கண்கள் போன்ற அழகான கண்கள் கிடைக்கும். கே & ப "எனக்கு 50 வயது. மாநிறமாக இருப்பேன். ஆனால், இப்போது கண்களின் கீழ் கருவளையமும், இரண்டு கன்னங்களிலும் அடை போல கருமையும், கண்ணாடி போடுவதால் மூக்கின் இரு பக்கமும் தழும்புகளும் வந்து ரொம்ப கறுப்பாக தெரிகிறேன். மீண்டும் முகம் பழைய பிரகாசத்தைப் பெற ஆலோசனை கூறுங்கள்." "பொதுவாகவே, ஐம்பது வயதை நெருங்கும்போது, தோல் வறண்டுவிடும். அந்த சமயத்தில், உடம்பை எண்ணெய்ப் பசையுடன் வைத்திருப்பது மிக அவசியம். உங்கள் முகம், மாசு மரு இல்லாத பளிங்கு போல் பிரகாசிக்க இதோ சில சிகிச்சை முறைகள்... கசகசா 50 கிராம், வெள்ளரி விதை 100 கிராம் இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். அரை கிலோ நல்லெண்ணெயில் இந்த விழுதைப் போட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடுங்கள். எண்ணெய் தீயாத அளவுக்கு பார்த்து கிளறி இறக்கி மூடி வையுங்கள். 3 வாரம் கழித்து எண்ணெய் நன்றாக தெளிந்துவிடும். இந்த எண்ணெயை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் முகம் பளிச்சென்று ஆகும். தோல் மிருதுவாகி, கண்ணின் கருவளையமும் மறைந்துவிடும். உலர்ந்த பொன் ஆவாரம்பூவை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடர் ஒரு டீஸ்பூனுடன், கடலை மாவு அரை டீஸ்பூன் கலந்து முகத்துக்கு ‘பேக்’ போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் இதைச் செய்துவர, 15 நாட்களில் கன்னத்தில் ஏற்பட்ட கருமையும், புள்ளிகளும் மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும். இரவு தூங்கப் போகும் முன், 1 டீஸ்பூன் முல்தானிமட்டி பவுடரை பாலில் கலந்து, கண்ணாடியினால் ஏற்பட்ட தழும்பு பகுதியில் தடவுங்கள். காலையில் முகத்தை கழுவுங்கள். இரண்டே வாரத்தில் கறுப்புத் தடம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். மிருதுத்தன்மையை கொடுப்பதில் கீரை ஜூஸ§க்கு ஈடு இணையில்லை. துளசி, வெந்தயகீரை, கற்பூரவல்லி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து, வாரம் ஒரு முறை 5, 6 இலை களை கைகளால் கசக்கி, அந்த சாறை முகத்தில் தடவுங்கள். முகம் மிருதுவாகி, பிரகாசிக்கும்."

பழகிய பொருள்... அழகிய முகம்! தங்க ஒளி தருதே... தக்காளி பழமே!

தங்க ஒளி தருதே... தக்காளி பழமே! சாம்பார், சட்னி, தொக்கு என சமையல் வெரைட்டிகளில் கைகொடுக்கும் ‘" தக்காளி," ஒரு பியூட்டீஷியனும் கூட! குறைந்த செலவில், நிறைந்த அழகை வாரித் தரவல்லது தக்காளி! ஒட்டிப்போன கன்னங்களை "புஸ்புஸ்" ஆக்குகிறது இந்தத் தக்காளி கூழ். தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுங்கள். முதலில், முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழைப் பூசி, 10 நிமிடம் கழித்து . வாரம் இரு முறை இப்படிச் செய்து வர, ‘குஷ்பு’ கன்னங்கள் கிடைக்கும். நாற்பது வயதை நெருங்கும்போதே முகத்தில் சில வரிகளும் நம் முகவரி தேடி வந்துவிடும். அந்த முதுமை வரிகளை ஓட ஓட விரட்டும் சக்தி தக்காளியில் உண்டு. தக்காளி விழுது, பாதாம் விழுது... தலா அரை டீஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவர, சுருக்கம் இருந்த சுவடுகூடத் தெரியாது. கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல், கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனவா? ரிலாக்ஸ் ப்ளீஸ்... உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது, இந்தத் தக்காளி பேஸ்ட். உருளைக்கிழங்கு துருவல் சாறு & 1 டீஸ்பூன், தக்காளி விழுது & அரை டீஸ்பூன் இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும். ரொம்ப நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்துபோய் முகம் பொலிவிழந்து விடும். அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இந்த தக்காளி ஃபேஷியல் ஸ்க்ரப். ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள் ளுங்கள். இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சிலருக்கு முகத்தில் மிருதுத் தன்மை மாறி, முரடு தட்டிப் போய்விடும். அவர்களுக்கான டிப்ஸ் இது. ஒரு தக்காளியை கூழாக்குங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்துகொள்ளுங்கள். இதை முகத்துக்குப் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். முகம் மிருதுவாகி, தங்கம் போல் ஒளிவீசும். கண்ணுக்குக் கீழ் கருவளையம் விழுந்து சோக ராணியாக வலம் வருகிற உங்களை உற்சாக தேவதையாக்குவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான். ஒரு வெள்ளரித் துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக்கொள்ளுங்கள். இமைகளின்மேல் இந்தக் கலவையைப் பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே, கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும். கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டியதுபோல் கருவளையம் இருக்கிறதா? கவலை வேண்டாம்! இருக்கவே இருக்கிறது தக்காளி பேஸ்ட். தக்காளி சாறு & அரை டீஸ்பூன், தேன் & அரை டீஸ்பூன், சமையல் சோடா & ஒரு சிட்டிகை... இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி, 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். வாரம் மூன்று முறை இப்படிச் செய்து வாருங்களேன். சங்குக் கழுத்துக்கு அர்த்தமே உங்கள் கழுத்துதான் என்றாகி விடும்! கே & ப ‘‘ நெற்றியில் பொரிப்பொரியாக இருக்கிறது. மஞ்சள், வியர்க்குரு பவுடர் என்று எல்லாம் போட்டுப் பார்த்துவிட்டேன். கொஞ்சமும் குறையவில்லை. இப்போது கன்னங்களிலும் அது பரவிவிட்டது. இதைப் போக்க வழி சொல்லுங்களேன்...’’ ‘‘முதலில், இது ஏன் ஏற்படுகிறதுஎன்று சொல்கிறேன். தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம், பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது... இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். -இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு. ரோஜா இதழ்களை சந்தன மனையில் வைத்து இழையுங்கள். அதே அளவு சந்தனம் சேர்த்துக் குழையுங்கள். பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால், பொரிகள் மறையத் தொடங்கும். இதோடு, கீழே உள்ள சிகிச்சையையும் தொடர்ந்து செய்யுங்கள். கசகசா & 2 டீஸ்பூனுடன், 10 கருந்துளசி இலைகளை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். கொதிநீரில் வெட்டிவேரை போட்டு வையுங்கள். மெல்லிய ஆர்கண்டி துணியை ‘ஜில்’ தண்ணீரில் நனைத்து, பிழிந்து, நெற்றியில் வைத்து, அதன்மேல் இந்த விழுதை ‘பத்து’ போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து வெட்டிவேர் தண்ணீரால் கழுவுங்கள். இப்படி, வாரம் ஒரு முறை செய்யுங்கள். இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா, பொரிகளை அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும். இந்த சிகிச்சைகளை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தாலே, துருத்தி நிற்கும் பொரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். இந்த சிகிச்சையின்போது முகத்துக்கு ‘க்ரீம்" போடு வதைத் தவிர்ப்பது நல்லது. கூடுதல் டிப்ஸ்: கூந்தலுக்கு இறுக்கமாக ‘க்ளிப்’ போடாதீர்கள். சுத்தமான சீப்பால் நெற்றியில் படாதவாறு வாரிக் கொள்ளுங்கள். குளிர்ந்த தண்ணீரால் மட்டுமே முகம் கழுவுங்கள்.’’

சமையல் குறிப்புகள்! ஒரு சூப்பர் யோசனை! ஒரு அசத்தல் ஐடியா!

பருப்பு ஊறப் போடாமலே, திடீர் வடை செய்ய ஒரு அசத்தல் ஐடியா! ஒரு ஆழாக்கு பொட்டுக் கடலையை மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி அரைக்கவும். அத்துடன் அரை ஆழாக்கு வறுத்த நிலக்கடலையைச் சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையில் உப்பு, காரப் பொடி, தண்ணீர் சேர்த்து பிசைந்து வடை தட்டினால், குறைந்த நேரத்தில் சுவையான மொறுமொறுவென்று வாயில் கரையும் வடைகள் தயார்! தோசை மிளகாய்ப்பொடி, ஊறுகாய்க்கான மிளகாய்ப்பொடி ஆகியவற்றுக்கு காய்ந்த மிளகாய் போட்டு மிக்ஸியில் அரைக்கும்போது சரியாக அரைபடாது. முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும். பிறகு அதனுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து அரைக்கலாம். பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ் கலந்து பஜ்ஜி சுட்டால், சுவையும் கலரும் வித்தியாசமாக இருக்கும். மசாலா மணத்துடன் கட்லெட் போன்ற ருசியுடன் இருப்பதால், தக்காளி சாஸையே தொட்டுக் கொள்ளவும் செய்யலாம். பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கும்போது, குழைந்து விடாமல் பருப்பு இதழ் இதழாக இருக்க ஒரு சூப்பர் யோசனை! மூடியுள்ள ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு, இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மூடியால் மூடி, குக்கரில் வேக வைத்தால்... பருப்பு அட்டகாசமாக வெந்திருக்கும்! ------------------------------------------------------------------------------------------------ தே பழம்... அதிக ஜூஸ்! ஒரு சாத்துக்குடி பிழிந்தால் அரை கிளாஸ் ஜூஸ்தான் வருகிறதா? விடுங்கள், கவலையை! சாத்துக்குடியை தோல் உரித்து, சுளையெடுத்து, கொட்டை நீக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுங்கள். இரண்டு மடங்கு ஜூஸ் கிடைக்கும். குறிப்பு: சாத்துக்குடியை நான்காக வெட்டிக்கொண்டால், தோலுரிப்பதும், கொட்டைகளை நீக்குவதும் எளிது. மிக்ஸியில் பழச்சுளைகள், கொஞ்சம் ஐஸ்கட்டிகள், மூன்று ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பெரிய துளை கள் கொண்ட வடிகட்டியில் ஒட்ட வடிகட்டி னால், நார்ச்சத்து வீணாவதும் குறையும். மொச்சை, ராஜ்மா, சன்னா போன்ற வற்றை ஊறவைக்கும்போதே சிறிது சமையல் சோடாவையும் சேர்த்துக் கொள்ளுங் கள். ஊறிய பின் தண்ணீரைக் கொட்டிவிட்டு, பயறு களை நன்றாகக் கழுவி, பின் வேக வைத்தால் மிகவும் மிருதுவாக இருக்கும். சீக்கிரமாகவும் வேகும். வேகவைக்கும்போது சோடா சேர்த்தால்தான் சத்து கெடும். ஊற வைக்கும்போது சோடா சேர்த்து, பின் கழுவி விடுவதால் எந்த சத்தும் சேதமடையாது. குறிப்பு: வேகவைக்கும்போது சோடா சேர்க்கும் பழக்கம் உள்ளவர்கள், இனிமேல் மேற்கூறிய முறையைப் பின்பற்றலாம். வட இந்தியாவில் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். ஐஸ்கிரீம் பரிமாறும் கிண்ணங்களை ஃப்ரீஸரில் ஐந்து நிமிடம் வைத்துவிட்டு, பின்னர் ஐஸ்கிரீம் நிரப்பிக் கொடுத்தால், சீக்கிரமாக உருகிவிடாமல் இருக்கும். காராபூந்தி, காரசேவு, ஓமப்பொடி, மிக்ஸர், முறுக்கு இவைகள் மிஞ்சினாலோ, நமுத்துப் போனாலோ, தூளாக இருந்தாலோ, ஐந்து நிமிடம் வெந்நீரில் போட்டு, பின் கட்டித் தயிரில் போட்டு, கொத்து மல்லித் தழையைப் போட்டு, தயிர் பச்சடியாகச் செய்து சாப்பிடலாம். டெலிபோன் வைத்திருப்பவர்கள், அதைத் தினமும் ஒரு துணியில் சிறிது டெட்டால் ஊற்றித் துடைத்து வையுங்கள். கிருமிகள் பரவாமல் இருக்கும். மிக்ஸி ஜாரில் ஏலக்காய், இலவங்கம் போன்ற பொருட்களைப் போட்டு அரைத்த பின்பு, அதை என்னதான் தண்ணீர் ஊற்றி, சோப் பவுடர் போட்டு அலம்பினாலும், அந்த வாசனை இருந்துகொண்டேதான் இருக்கும். அதைப் போக்க, மிக்ஸி ஜாரில் கொஞ்சம் பிரெட் துண்டுகளைப் போட்டுப் பொடித்து எடுத்தால், ஜாரில் ஏலக்காய், இலவங்கம் வாசனை அடிக்காது! முகப்பவுடர் பூசப் பயன்படும் பஃப் பழையதாகிவிட்டதா? தூர எறிந்துவிடாதீர்கள்! அதைச் சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் டைனிங் டேபிள், டீப்பாய், கண்ணாடி, ஷ¨ போன்றவற்றைத் துடைக்கப் பயன்படுத்தலாம்.

Friday, March 11, 2011

சமையல் குறிப்புகள்! கலப்பு வெஜிடபிள் குழம்பு

பல்வேறு வகையான காய்கறிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் `மிக்ஸ்டு வெஜிடபிள் குழம்பை' தயாரித்து ருசியுங்கள். தேவைப்படும் பொருட்கள்: * கேரட்- 150 கிராம். * பீன்ஸ்- 150 கிராம். * பச்சைக் கடலை- 150 கிராம். * காலிபிளவர்- 200 கிராம். * ரிபைண்ட் ஆயில்- 50 மி.லி. * சீரகம்- அரை தேக்கரண்டி. * கறிமசால் வகை- ஒரு தேக்கரண்டி. * பெ.வெங்காயம்- 200 கிராம். * இஞ்சி- இரண்டு துண்டு. * பூண்டு- ஒன்று. * தக்காளி- இரண்டு. * மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி. * மிளகாய்த்தூள்- ஒரு தேக்கரண்டி. * உப்பு- தேவைக்கு. * கறிமசால் தூள்- அரை தேக்கரண்டி. * மல்லி இலை- சிறிதளவு. * நறுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி. * நறுக்கிய ப.மிளகாய்- ஒரு தேக்கரண்டி. செய்முறை: - கேரட், பீன்ஸ் ஆகியவைகளை ஒரு செ.மீட்டர் அளவிற்கு துண்டுகளாக நறுக்குங்கள். காலிபிளவரை ஒவ்வொரு பூவாக அடர்த்தி எடுங்கள். - பெ.வெங்காயத்தை அரையுங்கள். இஞ்சி, பூண்டுவையும் அரைத்துவையுங்கள். தக்காளியையும் அரையுங்கள். மல்லிஇலையை நறுக்கி வையுங்கள். - கெட்டியான பாத்திரத்தில் எண்ணையை சூடாக்குங்கள். அதில் சீரகம், கறிமசால் இரண்டையும் வறுக்கவும். அதில் பெ.வெங்காயத்தை கொட்டி பொன்னிறம் ஆகும்வரை வறுக்கவும். அதில் இஞ்சி, பூண்டு அரைப்பையும் சேர்த்துக் கிளறுங்கள். தக்காளி அரைப்பையும் சேர்த்து மூன்று நிமிடங்கள் கிளறுங்கள். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போன்றவைகளையும் சேருங்கள். கேரட், பீன்ஸ், பச்சைக்கடலை, காலிபிளவர் ஆகியவைகளை ஒன்றாக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். கொதித்ததும் தீயை லேசாக எரியவிட்டு மூடிவைத்து வேகவிடுங்கள். அத்தோடு உப்பும், கறிமசால் தூளும் சேருங்கள். எல்லாவற்றையும் கிளறி இறக்குங்கள். நறுக்கிய மல்லிஇலை, மிளகாய் ஆகியவைகளைச் சேர்த்து அலங்கரியுங்கள்.

வாசகிகள் கைமணம்! அவல் லெமன் கிச்சடி

தேவையானவை: அவல் & ஒன்றரை கப், வறுத்த நிலக்கடலை & 2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள், கறுப்பு எள், மஞ்சள்தூள் & தலா அரை டீஸ்பூன், சாம்பார்தூள் & 2 டீஸ்பூன், தனியாதூள் & 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) & முக்கால் கப், தேங்காய் துருவல் & 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு & 3 டேபிள்ஸ்பூன், நன்கு பழுத்த தக்காளி & 5, நறுக்கிய பச்சை மிளகாய் & ஒன்றரை டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன், உப்பு & தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு & தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை & ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: அவலை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ரவை போலப் பொடித்துக்கொள்ளவும். நிலக்கடலையைத் தோல் நீக்கி, கரகரப்பாகப் பொடிக்கவும். எள்ளையும் தேங்காய் துருவலையும் வெறும் வாணலியில் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறிது நேரம் வெந்நீரில் போட்டெடுத்து, தோலை உரித்து ஜூஸ் எடுக்கவும். அதனுடன் வெல்லத்தூள், தனியாதூள், சாம்பார்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, பொடித்த அவலையும் கலக்கவும். அரை மணி நேரம் இந்தக் கலவையை ஊறவைக்கவும். தக்காளி ஜூஸ§டன் தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். மீதி எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அத்துடன் ஊறவைத்த அவல் கலவை சேர்த்துக் கிளறவும். உதிர், உதிராக வரும்போது, மல்லித்தழை சேர்த்து இறக்கவும். எலுமிச்சம்பழச் சாறைக் கலந்து பரிமாறவும். அவல் லெமன் கிச்சடி: ஒரு டீஸ்பூன் தனியா, 2 காய்ந்த மிளகாய், கால் டீஸ்பூன் வெந்தயம் மூன்றையும் வறுத்து, கரகரவென்று பொடித்து, இறக்குவதற்கு முன் தூவினால் வாசம் பிரமாதமாக இருக்கும்.

வாசகிகள் கைமணம்! வெஜிடபிள் முகலாய்

தேவையானவை: கோஸ், உருளைக் கிழங்கு, கேரட், நூல்கோல், குடமிளகாய் (எல்லாமே பொடியாக நறுக்கியது), பச்சைப் பட்டாணி சேர்ந்த கலவை & 2 கப், பச்சை மிளகாய் & 4, தயிர், தேங்காய் துருவல் & தலா 1 கப், சீரகம், கசகசா & தலா 2 டீஸ்பூன், பட்டை &1 , இலை & சிறிது, இஞ்சி & பூண்டு விழுது, மல்லித்தழை & சிறிது, மிளகாய்தூள் & 1 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு & 10, பாதாம்பருப்பு & 5, மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய், நெய் & தேவைக்கு. செய்முறை: காய்கறிகளை உப்பு, மஞ்சள்தூள், தயிர் போட்டு பிசறி, அரை மணி நேரம் ஊறவிடவும். தேங்காய், சீரகம், மிளகாய், கசகசா, முந்திரி, பாதாம் இவற்றை மைய அரைக்கவும். வாணலி யில் எண்ணெய் காய விட்டு பட்டை, இலை, சோம்பு, கிராம்பு இவற்றை சற்றுத் தட்டிப் போட்டு, 2 டீஸ்பூன் நெய் விடவும். பின் காய்கறிக் கலவை, மிளகாய்தூள் போட்டு மூடி, சிறு தீயில் வேகவிடவும். தயிர் பிரிந்து வந்ததும் அரைத்த விழுதை போட்டுக் கிளறி, சிறு தீயில் மூடி வைக்கவும். நல்ல பதம் வந்தவுடன் இறக்கி மல்லித்தழை போடவும். சாதம், சப்பாத்தி, தோசை என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும் இந்த கிரேவி. வெஜிடபிள் முகலாய்: பாதாம், முந்திரி, உருளைக்கிழங்கு சேர்க்காதவர்கள் இன்னும் சில பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

வாசகிகள் கைமணம்! நெல்லிக்காய் போளி

தேவையானவை: மைதா மாவு -& ஒரு கப், நெல்லிக்காய் & 8, கடலைப்பருப்பு & அரை கப், தேங்காய் துருவல் & 1 கப், பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு & தலா 10, ஏலக்காய் தூள் & சிறிதளவு, நெய் & கால் கப், கேசரி பவுடர் & ஒரு சிட்டிகை, வெல்லம் (பொடித்தது) & ஒரு கப். செய்முறை: மைதா மாவை 1 ஸ்பூன் நெய் விட்டு, கேசரி பவுடர் சேர்த்து, போளி மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும். நெல்லிக்காயை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்து, ஆறியவுடன் எடுத்து கொட்டை நீக்கவும். அதன் பிறகு, நெல்லிக்காயை தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு, கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பை சிவக்க வறுத்து, ஊறவைத்து வேகவிட்டு, எடுத்துக்கொள்ளவும். அந்தப் பருப்புடன், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பின்பு நெல்லிக்காய் அரைத்த விழுது, கடலைப்பருப்பு&தேங்காய் விழுது, வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாக பூரணம் தயார் செய்து, ஏலப்பொடி போட்டு கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, மைதா மாவை சிறிய வட்டமாக இட்டு, பூரணம் வைத்து மூடி போளியாக தட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கல்லில் நெய் விட்டு, போளிகளை சுட்டெடுக்கவும். நெல்லிக்காய் போளி: நெல்லிக்காயை குக்கரில் வைத்து, ஒரு விசில் விட்டு இறக்கினால் ஈஸியாக மசிக்கலாம். சத்தும் வீணாகாது.

சமையல் குறிப்புகள்! முட்டை கட்லெட்

தேவையான பொருட்கள்: முட்டை - 5 மிளகாய்தூள் - 1 கரண்டி மசாலாதூள் - 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு - அரைக்கிலோ வெங்காயம் - 1 தேங்காய்பால் - அரை கப் மிளகுதூள் - 1 தேக்கரண்டி மைதா - 2 தேக்கரண்டி எண்ணெய் - 250 கிராம் செய்முறை: முட்டை, உருளைக்கிழங்கை ஆகியவற்றை வேகவைத்து தோல் எடுக்க வேண்டும். முட்டையை இரண்டாக வெட்ட வேண்டும். ஒரு முட்டையை சிறிது உப்பு மிளகு போட்டு கலக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்க வேண்டும். உருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்து அதனுடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். அதனை கையில் வட்டமாகத் தட்டி நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் நனைத்து எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும்.

சமையல் குறிப்புகள்! எள்ளுப் பொடி

உடம்பில் சதை போட வேண்டும் என்று நினைப்பவர்கள் சாப்பிட வேண்டிய எள்ளுப் பொடி

எள்ளுப்பொடிக்குத் தேவையான பொருள்கள்:

எள்ளு - 500 கிராம்

மிளகாய் வற்றல் - 10 அல்லது 12

உப்பு ஒன்றரை மேசைக்கரண்டி - அல்லது

அவரவர் தேவைப்படி

பெருங்காயப் பொடி - ஒன்றரைத் தேக்கரண்டி

கறுப்பு எள்ளாக இருந்தால் வேலை சற்றுக் கடினமாகும். கறுப்பு எள்ளைத் தண்ணீரில் நன்றாய்க் களைந்து தூசுதும்புகளை நீக்கிய பின் ஒரு வடிகட்டியில் தண்ணீர் போக வடியவைக்க வேண்டும். நீர் முற்றாக வடிந்த பிறகு அதைத் தரையில் கொட்டி ஒரு கெட்டித் துணியால் நன்றாய்த் தேய்க்க வேண்டும். அதன் மேலுள்ள கறுப்பு அப்போது பெருமளவு நீங்கும். (ஒருகால் அது உடலுக்குக் கேடு செய்யுமோ என்னமோ. அதனால்தான் வெளித்தோல் போகத் தேய்க்கச் சொல்லுகிறார்கள் என்று தோன்றுகிறது.) பிறகு அதை இரும்புக் கடாயில் படபடவென்று பொரிகிற வரை வறுக்க வேண்டும். வெள்ளை எள்ளாக இருந்தால் இந்தச் “சிங்கிநாதம்” தேவை யில்லை. களைந்து, தூசு போக்கி, வடிகட்டிவிட்டு அப்படியே கடாயில் கொட்டி வறுக்கலாம். தரையில் கொட்டித் தேய்த்துக்கொண்டிருக்கத் தேவை யில்லை.

பிறகு மிளகாயை இரண்டு முட்டை (சிறு கரண்டி) நல்லெண்ணெய்யில் வறுக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் உப்பையும் பெருங்காயப் பொடியையும் சேர்த்து மின் அம்மியில் பொடிக்க வேண்டும்.

சோற்றில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். (நெய்யைவிடவும் எண்ணைய் பெரும் பாலோர்க்கு அதிகச் சுவையாக இருக்கும்.) இதனை இட்டிலி, தோசைகளுக்கும் எண்ணெய்யில் கலந்து இட்டிலி-மிளகாய்ப்பொடிபோல் தொட்டுக்கொள்ளவும் செய்யலாம்.

உடம்பு அதிகப் பருமனும் இல்லாமல், ஒல்லிக்குச்சியாகவும் இல்லாமல் நிதானமாக இருப்பவர்கள் கொள்ளுப்பொடி, எள்ளுப்பொடி இரண்டையும் ஒரு சேர உட்கொண்டால் உடம்பு பருக்கவும் செய்யாமல், இளைக்கவும் செய்யாமல் அப்படியே நிலைக்கும்தானே!

சமையல் குறிப்புகள்! எலுமிச்சை ரசம்

தேவையான பொருட்கள்

1 பழுத்த பெரிய தக்காளி ஒன்று

1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு அல்லது புளிப்புத் தேவையான அளவுக்கு பிழிந்து கொள்ளலாம்.

1/4 தேக்கரண்டி மிளகு

1/4 தேக்கரண்டி சீரகம் (கறுப்பாக இருப்பது தான் சீரகம், பச்சையாக இருப்பதன் பெயர் சோம்பு)

5 பற்கள் பூண்டு

1/2 தேக்கரண்டி கடையில் விற்கும் ரசப்பொடி

1 பச்சை மிளகாய்

1 கோப்பை பருப்புத் தண்ணீர் (இருந்தால் சுவையாக இருக்கும்)

கறிவேப்பிலை, கொத்து மல்லி

தேவையான அளவு உப்பு

தாளிக்க

அரை தேக்கரண்டி கடுகு, உளுத்தம்பருப்பு,

ஒரு சிட்டிகை பெருங்காயம்

ஒரு தேக்கரண்டி நெய்

செய்யும் முறை

பருப்புத் தண்ணீரில் தக்காளி, பூண்டு போன்றவற்றை நசுக்கி போடவும்

ரசப்பொடி, நசுக்கிய மிளகு ஜீரகம், நசுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி, உப்பு போன்றவற்றை பருப்புத்தண்ணீரில் போட்டு கரைத்துக்கொள்ளவும்

அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதி வருவதற்கு முன்னர் சிறிது நுரை பொங்கும் போது அடுப்பை நிறுத்திவிட்டு, கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, எலுமிச்சைச் சாறை ஊற்றவும்.

எலுமிச்சை ரசம் தயார்.

எப்போதும் இளமையாக இருக்க உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள்

இளமைக்கு 21 எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே... 1. தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் மூன்றாண்டு களை அதிகரிகëகும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள். இருதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்' ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து. 2. உஙëகள் உணவில் வாரத்தில் இருமுறை மீனë இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணை வகை மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய `ஒமேகா 3 பேட்டி ஆசிட்', எண்ணை செறிந்த மீன் களில் அதிகம் உள்ளது. 3. சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடை வெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள். 4. தினசரி நான்கு `கப்' காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேனë பேர்வழி எனëறு காபியையே துறக்க வேண்டாம். அளவாக காபி பருகுவது, சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. 5. தினந்தோறும் 5 வகை பழஙëகள், காய்கறிகள் சாப்பìடுவது ஆரோக்கிய வாழëவுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள `ஆண்டிஆக்ஸிடன்ட்கள்' கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும்; நோய்த்தொற்றுக்கு எதிராக இருக்கும். மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரைச் சத்தையும் கொண்டுள்ளன. 6. வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்கவேண்டாம். சமையல் செய்யும் போதுமட்டும் உப்பை சேர்க்கவேண்டும். பிரெட், `பேக்கிங் உணவு' வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள். 7. மொத்தம் 7 வகையான நிறங் களைக் கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை' கொண்டிருக்கின்றன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும். 8. தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம். 9. சராசரியாக பெண்கள் 9 வகை மாவுச்சத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிட வேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக்கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாமë. 10. சாதாரணமாக குளிர்பானஙëகளில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கியக் காரணம். `டயட்' குளிர்பானங்களுக்கு மாறலாம்; ஜுஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம். 11. காலை உணவும், இரவு உணவும் 11 மணியைத் தாண்ட வேண்டாம். அதிக பசியின்போது நீங்கள் அதிகமாகச் சாப்பிட்டு விடுவீர்கள். 12. பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கìராம் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இரும்புச் சத்து செறìந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள். 13. சாதாரணமாக நாம் நமது ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம். 14. மதுபானம் அருநëதும் வழக்கம் உள்ளவர்கள் 14 `ïனிட்' மது அருந்தலாம். அதாவது அரைகப். 15. நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்முன்பு 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மெல்கிறோம். 16. ஆண்களுக்குத் தினசரி 16 சதவீத புரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம். 17. நாம் அனைத்து விதமான சத்துகளையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 விதமான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். 18. அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை நல்ல ஆதாரங்கள். 19. மொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து. 20. உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள்தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும். 21. பால் சார்ந்த உணவு வகைகளில் 21, ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

பெண்கள் என்றும் இளமையாக இருக்க சித்தா பியூட்டி டிப்ஸ்!

மணம் தரும் கோரைக் கிழங்கு!

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லையா? என்று இறைவனுக்கே சந்தேகம் வந்ததற்கு காரணம் அந்தக் காலப் பெண்கள் கோரைக்கிழங்கு மாவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்ததுதானோ என்னவோ... கோரைக் கிழங்கு மாவை தலையிலும், உடலிலும் தேய்த்துக் குளித்து வந்தால் நீங்கள் இருக்கும் இடம் மணமணக்கும் போங்கள். தவிர இந்தக் கிழங்கில் உள்ள `டெர்பீன்கள்' சேர்த்து தயாரிக்கப்பட்ட வாசனை எண்ணெய் காய்ச்சலையும் போக்கக்கூடியது.

தினம் ஒரு நெல்லி!

தோல் சுருக்கம் இல்லாமல் என்றும் இளமையுடன் வாழ, நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வாருங்கள் போதும்.

``அழகாக இருக்க விரும்பாத பெண்களே கிடையாது. அப்படிப்பட்ட அழகை எந்த சைடு எஃபெக்ட்டும் இல்லாமல், செலவும் அதிகம் ஆகாமல் பெற முடியும்''

சருமத்தில் தோழி!

சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, சொறி, சிரங்கு போன்ற எல்லா வகை சரும பிரச்னைகளுக்கும் பெஸ்ட் தோழி பறங்கிப்பட்டைதான்!

சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி பறங்கிப்பட்டை சூரணத்தை 40 நாட்கள் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மேலே சொன்ன சரும பிரச்னைகள் எல்லாம் தலை தெறிக்க ஓடி விடும். சருமத்திலும் நல்ல நிறம் கொடுக்க ஆரம்பிக்கும்.

முடி செழித்து வளர...

பெயரிலேயே தன் குணத்தை சொல்லும் `பொடுதலை' தான் நல்ல முடி வளர்ச்சிக்கு ஏற்ற மூலிகை. பொடுதலையின் இலைச்சாறுடன் தேங்காயெண்ணெய் கலந்து காய்ச்சவும். இதை பொடுகு உள்ளவர்கள் தலைக்குத் தேய்த்து வர பொடுகு நீங்கி தலைமுடி செழித்து வளரும். தவிர பெரும்பாலும் முக அழகும், முதுகு அழகும் கெட்டுப் போவதே பொடுகினால்தானே... ஸோ, பொடுதலையை பயன்படுத்தி கூந்தலை வாருங்கள். கூடவே முகத்தையும், முதுகையும் பொடுகு பாதிப்பில்லாமல் அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

அழகுராணி சோற்றுக் கற்றாழை!

சித்தர்களால் `குமரி' என்று செல்லமாக அழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை உண்மையிலேயே கடவுள் பெண்களுக்குக் கொடுத்த ஒரு அழகு வரம் என்றே சொல்லலாம்... ஃபிரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

ஆஹோ ஓஹோ பச்சிலை!

ஒரு இலையை கசக்கினாலே வீடு முழுவதும் மணம் வீசும் திருநீற்றுப் பச்சிலையிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணெயை (Bascillicum oil) தொடர்ந்து முகத்தில் தடவி வர முகப்பரு மற்றும் அதைக் கிள்ளினால் வரும் கரும்புள்ளிகள் எல்லாமே மறைந்துவிடும்.

செலவேயில்லாமல் ஸ்லிம்மாக்கும் அருகம்புல்!

சுத்தம் செய்யப்பட்ட அறுகம்புல்லை இடித்து சாறு பிழிந்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலிலுள்ள நச்சு மற்றும் கெட்ட நீர் வெளியேறி விடும். ரத்தம் சுத்தமாகும். உடம்பிலுள்ள தேவையற்ற ஊளைச்சதையெல்லாம் குறைய ஆரம்பிக்கும்.

தேங்காய் எண்ணெயையும், அறுகம்புல் சாற்றையும் சமஅளவு எடுத்து தைலமாக காய்ச்சி அதை உடலெங்கும் பூசி அரைமணி நேரம் கழித்து பயற்றம் பருப்பு மாவால் தேய்த்துக் குளியுங்கள். இப்படியே தொடர்ந்து செய்து வர உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அறுகம்புல் சாற்றில்சிறிதளவு மஞ்சள் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பித்த வெடிப்புகளில் தடவி வர பாதங்கள் பஞ்சு போல் `மெத்'தாகி விடும்.

எனர்ஜிகிடைக்க பாதம் மாதுளம் ஜூஸ்

மனிதனின் உணர்ச்சி பல வகைப்படும். நாம் வாழும் இந்த நாட்களில் நமது வாழ்வு முறை உணர்ச்சிகளை பிரதானபடுத்தியே உள்ளது. ஒவ்வொரு வகையான உணர்ச்சியில் இருந்து நம் உடலில் ஒவ்வொரு விதமான சக்தி வெளியாகிறது. நாம் இழந்த சக்தியை திரும்ப பெறுவதற்கு பல விதமான உணவு வகைகள். ஜூஸ் வகைகளும் உள்ளன. அந்த விதத்தில் நீங்கள் தாம்பத்தியங்களில் ஈடுபடுவதற்க்கு முன் எந்தவிதமான ஜூஸ் குடித்தால் உங்களுக்கு எனர்ஜி கிடைக்கும் என்பதை ஆராய்ந்து தயாரிக்கப்படும் ஜூஸ் தான் பாதமதுளம். இந்த ஜூஸ்ஸை எப்படி தயார் செய்வது பார்ப்போம். சுண்ட காய்ச்சி பாலுடன் குங்குமப்பூ, சர்க்கரையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்புஅரைத்து வைத்த பாதாமை சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்க வைக்கவும். நன்றாக ஆறிய பின்பு அதனுடன் மாதுளை விதையை சேர்த்து கலக்கிய பின்பு அதை குடித்து விட்டு தயாராகுங்கள். பாலில் கால்சியமும், சர்க்கரையில் எனர்ஜியும் உள்ளது. மேலும் பாதாமில் கூடுதல் சக்தியும், உங்களது தோல் பளபளப்பாகவும் செய்கிறது மாதுளை உங்களது மனதை இதப்படுத்தி, உங்களது உடலையும், மனதையும் எளிதாக இணைக்கிறது. இந்த பாத மதுளத்தை நீங்கள் மட்டும் பருக வேண்டாம். உங்கள் பாட்னருக்கும் கொடுங்கள். பின்பு சொல்லுங்கள்.

Thursday, March 10, 2011

வேலை வாய்ப்புக்கு சில வழிகாட்டும் குறிப்புக்கள்!

சுஜிதா, ப்ளஸ்டூ எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கிறாள். அவள் முகத்தில் இருந்த சோகம், அவளது தோழி அருணாவை திடுக்கிட வைத்தது. ‘‘நீதான் கிளாஸ் ஃபர்ஸ்ட் வர்றவளாச்சே சுஜி... ஏன் ரிசல்ட்டைப் பத்தி இவ்வளவு கவலைப்படற?’’ ‘‘எனக்கு ரிசல்ட் பத்தி கவலை இல்லே. மேலே படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலை வீட்டிலே இருக்கு. நல்ல மார்க் வாங்கிட்டு காலேஜ் போக முடியாதேங்கிற வருத்தம்தான்! ப்ளஸ்டூ படிச்சவளுக்கு எங்கே நல்ல வேலை கிடைக்கும்?’’ ‘‘கவலைப்படாதே, சுஜி! நிச்சயமா உன்னோட நாலெட்ஜுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும். வேலையைப் பார்த்துட்டேக்கூட நீ படிப்பைத் தொடரலாம்’’ என்றாள் அருணா. அருணா சொன்ன வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்கிறார், ‘ஸ்கோப்’ இண்டர்நேஷனலின் மனிதவள மேம்பாடு (பிஸி) எக்ஸிக்யூடிவ் வைஸ் பிரஸிடெண்ட், சந்திரசேகர் பிங்காலி. தனது கம்பெனியின் பெயரிலேயே ‘வாய்ப்பை’ வைத்திருக்கும் ‘ஸ்கோப்’ எந்த விதமான வாய்ப்புகளை வழங்குகிறது? ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியின் ஒரு பகுதிதான் எங்களது ஸ்கோப் இண்டர்நேஷனல். இங்கே, ஐ.டி. ப்ரொடக்ஷன் (சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட்), ஐ.டி. மெயின்டெனன்ஸ் (பராமரிப்பு), ஐ.டி. சப்போர்ட் சென்டர், ஹோல்சேல் மற்றும் கன்ஸ்யூமர் பாங்கிங், மனிதவள மேம்பாடு, நிதித்துறை (ஃபினான்ஸ்) ஆகிய ஏழு வித்தியாசமான துறைகளைக் கொண்டது எங்கள் நிறுவனம். அதனால் எந்த விதமான படிப்புப் படித்திருந்தாலும் எங்களால் வேலை வாய்ப்புக் கொடுக்க முடியும். இவர்களது ஸ்கோப் இண்டர்நேஷனல் கால் சென்டரா? ‘ஸ்கோப்’ கால் சென்டர் இல்லை. நாங்கள் இதை ஷேர்ட் சர்வீஸ் சென்டர்’ (ஷிலீணீக்ஷீமீபீ ஷிமீக்ஷீஸ்வீநீமீ சிமீஸீtக்ஷீமீ) என்று சொல்லுவோம். ஏனென்றால், பல்வேறு துறைகளுக்கு, சப்போர்டிவான வேலைகளை நிறைய விதமான தொடர்புகள் மூலம் செய்து கொடுக்கிறோம். ஸ்கோப்பில் எந்தத் தகுதி அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள்? ப்ளஸ் டூ முதல் இன்ஜினீயரிங், சி.ஏ., போஸ்ட் கிராஜுவேட் என்று எந்தத் துறை படிப்பாக இருந்தாலும், ஸ்கோப்பிற்கு வரலாம். குறிப்பாக, ப்ளஸ்டூ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுத்து, அவர்களைப் பட்டதாரிகளாக மாற்றுகிறோம். அவர்களுக்கு, தகுதியும், திறமையும் இருந்தால், அவர்களுக்கு அதற்கு மேலேயும் படிப்பதற்கான வசதிகளைச் செய்து தருகிறோம். அவர்களது படிப்பும், அனுபவமும் அதிகரிக்க அதிகரிக்க, அதற்கேற்றாற் போல் அவர்களது பதவியும், சம்பளமும் உயர்ந்து கொண்டே இருக்கும். ஸ்கோப்பின் சம்பளம் எந்த வகையில் ஈர்க்கிறது? ப்ளஸ் டூ முடித்த, அனுபவம் இல்லாதவர்களுக்கே ரூ.7,000/_லிருந்து சம்பளத்தை ஆரம்பிக்கிறோம். மற்றவர்களுக்கு, மார்க்கெட் சர்வே எடுத்து எங்களைப் போன்ற கம்பெனிகள் எவ்வளவு கொடுக்கிறார்களோ, அதைப்போல் நாங்களும் ஃபிக்ஸ் செய்கிறோம். ஆனால் ஸ்கோப்பிற்கு, ஒருவர் மிகவும் தேவையானவர் எனில், தகுதியும், அனுபவமும் அதிகமென்றால் மார்க்கெட்டில் இருப்பதைவிட மிக அதிகமாகவே கொடுப்போம். இங்கே வேலையில் சேர வயது வரம்பு என்ன? வயது வரம்பு இல்லை என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் ஸ்பெஷாலிடியே 18 வயதிலிருந்து ஆட்களைத் தேர்வு செய்கிறோம். சமீபத்தில், பாங்கிங்கில் 25 வருட அனுபவமுள்ள, 62 வயதான ஒருவரைத் தேர்வு செய்தோம். அதனால் வயது அதிகம் என்பது ஸ்கோப்பைப் பொறுத்தவரை ஒரு தகுதிக் குறைவு இல்லை. ஸ்கோப்பில் ‘கேரியர் க்ரோத்’ என்கிற பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை எப்படி கொடுக்கிறார்கள்? ‘கேரியர் க்ரோத்’தை மிகவும் கவனத்துடன் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். வேலை செய்பவர்களின் திறமையைக் கண்டு பிடித்து, பதவி உயர்வு, சம்பளம் எல்லாவற்றையும் அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு தருகிறோம். மேலும் வெளிநாடு போக விருப்பமுள்ளவர்களுக்கு, 56 நாடுகளில் உள்ள எங்கள் கிளைகளில் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம். கடந்த வருடம் மட்டுமே 64 பேருக்கு வெளிநாடுகளில் நிரந்தர வேலையே கொடுத்திருக்கிறோம். பொதுவாகவே பீ.பி.ஓ., சாஃப்ட்வேர் கம்பெனிகளில், வேலையிலிருந்து ரிலாக்ஸ் செய்ய வாய்ப்புகள் இருக்கும். ஸ்கோப்பில் எந்த விதமாக ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்ளலாம்? ஸ்கோப்பில், என்கேஜ்மெண்ட் மேனேஜர் என்ற ஒருவர் தனியாகவே இருக்கிறார். ஸ்கோப்பில் பணி புரிபவர்கள் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ள பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். சமீபத்தில்கூட, அனுஹாசன், பாஸ்கி ஆகியோரை வரவழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். பொழுது போக்க, புதியவைகளைக் கற்றுக் கொள்ள என்று இதுபோல பல வாய்ப்புகள் இங்கே உண்டு. பீ.பி.ஓ.க்களில் வேலைச் சுமை, அதிக நேரம் வேலை இருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு. ஸ்கோபில் எப்படிப்பட்ட வேலைச்சூழல் இருக்கிறது? இது பொதுவான கருத்துதானே தவிர, உண்மை இல்லை. ஸ்கோப்பைப் பொறுத்தவரை வாரத்தில் 5 நாட்கள் வேலை. இதில் முக்கியமான விஷயம், குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட வேலையை முடிப்பவர்களுக்கு ‘ஸ்மார்ட் ஒர்க்_ஸ்மார்ட் ரிவார்டு’ என்றும் கொடுக்கிறோம். அதிக நேரம் வேலை செய்வது என்பது எங்களைப் பொறுத்தவரை திறமைக் குறைவுதான். அதனால் வேலை நேரம் அதிகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. திறமைக்கேற்ற வேலை அதற்கேற்ற சம்பளம் என்று இன்றைய இளைஞர்கள் கனவு நனவாகும் சூழல் ஸ்கோப்பில் இருப்பது இளைய சமுதாயத்தை நிச்சயம் ஊக்கப்படுத்தும்.

பூக்களால் குணமாகும் சில நோய்கள்:

தாழம்பூ சர்பத் செய்து மாதம் இருமுறை சாப்பிட அம்மை நோய் வராமல் தடுக்கலாம். ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். சுறுசுறுப்பபாகவும் இருக்கலாம். வாழைப்பூவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும். ஒத்த நந்தியாவட்டையை கண்களின் மீது வைத்து வந்தால் கண் எரிச்சல் குணமாகும். குளிர்ச்சியடையும். மருதோன்றி பூவை இரண்டு நாள் இரவில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். தாமரை இதழை தினமும் ஒன்று சாப்பிட்டால் பேசும் திறன் அதிகரிக்கும். தென்னம்பூவை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் உள்ரணம் குணமடையும். ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம்கூடும். செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியடையும். மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுக்கடுப்பு குணமாகும். வில்வப் பூக்களை புளி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர குடல் வலிமைபெறும். உலர்ந்த மாம்பூ, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட உஷ்ணபேதி குணமாகும்.

உடல் அழகிற்கு சில இயற்கை குறிப்புகள் கைமேல் பலன் கிடைக்கும்.

முகச்சுருக்கம் : முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவிவர மறைந்துவிடும். முகம் அழகுபெற : துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக் காயவிட்டு குளித்துவரவும். உடல் மினுமினுக்க : நீல புஷ்ப தைலம் தேய்த்துக் குளித்துவர உடல் குளிர்ச்சி பெறும். உடம்பும் மினுமினுப்படையும். உடல் உஷ்ணத்தைக் குறைக்க : மல்லிகைப்பூவை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. முடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர : கருவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வர பயன் விரைவில். கண்கள் குளிர்ச்சியடைய : வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும். படர்தாமரை நீங்க : சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி, ஊறிய பின் கழுவினால் விரைவில் குணமுண்டாகும். வழுக்கை மறைந்து முடிவளர : அல்லி இதழ்களை சந்தனத்துடன் அரைத்து வழுக்கைக்கு தடவி 2 மணி நேரம் காயவிட்டு குளிக்கவேண்டும். நரைமுடி கருப்பாக : தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வரவும். முடி உதிர்வது நிற்க : காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர விரைவில் குணமாகும். கூந்தல் மிருதுவாக : சீத்தாப்பழக் கொட்டையை காய வைத்துப் பொடியாக்கி சீயக்காய்த் தூளுடன் கலந்து தேய்த்துக் குளிக்கவும்.

சித்த மருத்துவ குறிப்புகள் சில டிப்ஸ்!.. .

மலேரியா காய்ச்சல் தீர : மிளகு, சீரகம் சேர்த்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டுவரவும். டைபாய்டு தீர : புன்னைப்பூவை உலர்த்தி பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை சாப்பிட குணமாகும். குளிர் காய்ச்சல் தீர : முருங்கைப்பட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிடவும். இதயப் படபடப்பு குறைய : மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை இரு வேளை அரைகிராம் நாவில் சுவைக்கவும். (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்). மாரடைப்பு : தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட விரைவில் குணமாகும். தொடர் வயிற்றுப் போக்கு : பப்பாளிப்பழம் சாப்பிட்டால் சரியாகிவிடும். நுரையீரல் பலப்பட : தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும். திக்குவாய் சரியாக : இலந்தை இலைச் சாறு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். மலச்சிக்கல் தீர : அகத்தி கீரையை வாரம் ஒரு நாள் சமைத்து உண்ணவேண்டும். ஈறு பலமடைய : மாசிக்காயை தூளாக்கி நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளித்தால் பலப்படும். இரத்தக்குழாயில் அடைப்பு நீங்க : தினம் ஒரு கப் தயிர் சாப்பிடவேண்டும். தேவையற்ற கொழுப்பு குறைய : பூண்டு, வெங்காயம் இவற்றை அடிக்கடி உணவில் அதிகமாக சேர்த்து வரலாம். எடை கூடாமல் தடுக்க : தேநீரில் எலுமிச்சம் பழசாறு கலந்து காலையில் குடித்துவர எடை கூடாமல் தடுக்கும். உதட்டில் வெடிப்பு : அத்திக்காயை உட்கொண்டால் வெடிப்பு குணமாகும்.

சமையல் குறிப்புகள்! சட்டினி வகைகள்

அ) தனித் தேங்காய்ச் சட்டினி - பச்சை மிளகாயுடன்.

தமிழக மக்களின் மிகப் பரவலான காலை உணவாகிய இட்டிலியைப் பற்றி நினைத்ததுமே ஞாபகம் வருவது சட்டினியும் சாம்பாரும்தானே? முதலில் தேங்காய்ச் சட்டினியைப் பார்ப்போம்:

தேவைப்படும் பொருள்கள்:

முற்றலான தேங்காய் - ஒன்று

பச்சை மிளகாய் - 5 அல்லது 6 (அல்லது தேவைக்கேற்ப)

உப்பு - 1 தேக்கரண்டி ( “ பெருப்க்காயப் பொடி / கரைசல் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 / 4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள்

எண்ணெய் - தாளிக்கச் சிறிதளவு

முதலில் தேங்காயைத் துருவிக்கொள்ளவும். இந்தத் துருவல், பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து மசிக்கவும். மின் அம்மியியில் முதலில் பச்சடி மிளகாயைப் போட்டு அதன் மேல் தேங்காய்த் துருவலைப் போடுவது நல்லது. இல்லாவிட்டால், மிளகாய் மசியாது. சிலர் புளிச்சுவைக்காக ஒரு கோலியளவு புளி சேர்த்து அரைப்பார்கள். புளி ஆகாதவர்கள் - அல்லது வேண்டாம் என்று நினைப்பவர்கள் - சட்டினியை அரைத்து முடித்த பிறகு அதில் தேவைக்கேற்ப எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து கொள்ளலாம். அல்லது தயிரும் சேர்க்கலாம். சில பச்சை மிளகாய்கள் அதிகமாய்க் காரும். அப்போது சட்டினியில் தயிரைச் சேர்ப்பது காரம் குறைய உதவும். கடைசியாகக் கறிவேப்பிலைகளைக் கிள்ளிப் போடவும். தேங்காய்ச் சட்டினியை அதிக நேரம் பாதுகாக்க முடியாது. ·ப்ரிட்ஜில் கூட ரொம்ப நேரத்துக்குச் சுவை குன்றாமல் இருக்காது. எனவே 3, 4 மணி நேரத்துக்குள் செலவழிப்பது நல்லது.

ஆ) தனித் தேங்காய்ச் சட்டினி - காய்ந்த மிளகாயுடன்

பச்சை மிளகாய் போட்டுச் செய்யும் தேங்காய்ச் சட்டினியைப் பொன்ற அதே செய்முறைதான். ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில், மிளகாய் வற்றலை முதலில் சிறிது எண்ணெய்யில் வறுத்துக்கொண்டு பின்னர் தேங்கயுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

இ) உடைத்தகடலை (பொட்டுக்கடலை) -தேங்காய்ச் சட்டினி

தேவைப்படும் பொருள்கள்:

நன்கு முற்றிய தேங்காயின் துருவல் - 1 கிண்ணம்

உடைத்த கடலை - 1 கிண்ணம்

பச்சை மிளகாய் அல்லது வற்றல் மிளகாய்- 10 (அல்லது தேவைப்படி)

கடுகு - முக்கால் தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 4 ஆர்க்குகள்

பெருங்காயப்பொடி அல்லது கரைசல் - ஒன்றரை அல்லது 2 தே. க.

தாளிக் எண்ணெய் - சிறிதளவு

உடைத்த கடலையைச் சிறிது எண்ணெய்யில் சற்றே வறுத்துக்கொள்ளவும். அப்போதுதான் அதன் பச்சை வாசனை போகும். (அதைத் தண்ணீரில் களைந்து நீரை வடித்துவிட்டு வறுப்பது இன்னும் நல்லது. ஏனெனில், உடைத்த கடலையில் - அது நாள்பட்டதாயின், ஒரு மக்கல் வாசனை வரும். களைந்தால் அது போய் விடும்.)

முன்னம் கூறிய சட்டினிகளைப் போன்றே இதையும் அரைக்கவும்.

(ஈ) கடலைப்பருப்பு-தேங்காய்ச் சட்டினி

தேவைப்படும் பொருள்களும் முன்ன்ம் சொன்ன அதே அளவுகளின் படியே. ஆனால், கடலைப் பருப்பு, உடைத்த கடலையைக் காட்டிலும் திடமானதால் மேலும் ஒன்றிரண்டு பச்சை மிளகாய்களையோ அல்லது மிளகாய் வற்றல்களையோ அத்துடன் சேர்த்து அரைக்க வேண்டும். புளி அல்லது அலுமிச்சம்பழச் சாறு சேர்ப்பதெல்லாமும் கூட முன் சொன்ன சட்டினிகளைப் போலவே தான். எனினும் கடலைப் பருப்பு-தேங்காய்ச் சட்டினி பிற சட்டினிகளைக் காட்டிலும் சற்றே அதிக நேரத்துக்குக் கெடாமல் இருக்கும்.

(உ) மாங்காய்ச் சட்டினி

தேவைப்படுபவை:

தோல் சீவப்பட்ட மாங்காயின் துருவல் - ஒரு கிண்ணம்

தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம்

மிளகாய் வற்றல் - 8 அல்ல்து 10

பெருங்காயப் பொடி - 1 தே. க.

உப்பு - 2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

இவற்றைத் தண்ணீர் சேர்க்காமல் மின் அம்மியில் மசித்துக் கடுகு மட்டும் தாளிக்கவும்.


சமையல் குறிப்புகள்! கொங்கு தக்காளி ரசம்

தேவையான பொருள்கள் : எண்ணெய் - 25 மில்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 2 பிரியாணி −இலை - 1, மிளகு - 8, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, பருப்புப் பொடி - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பருப்புத் தண்ணீர் - 1 கப், மல்லித் தழை- சிறிது. செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். நன்றாகக் காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய பின் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். நன்றாக வதங்கிய பின் அதில், பருப்புப் பொடி மற்றும் பருப்புத் தண்ணீரைச் சேர்த்து மிதமான வெப்பத்தில் கொதிக்க விடவும். இதில் பருப்புப் பொடி என்பது கடலைப் பருப்பை இலேசாக வறுத்து அரைத்து வைத்த பொடி. திடீர் ரசம் செய்ய இது கைவசம் இருப்பது நல்லது! சூப் போலவும் அருந்தலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். கொதித்தபின் நறுக்கிய மல்லித் தழையைச் சேர்த்தால், கொங்கு தக்காளி ரசம் தயார்.

சமையல் குறிப்புகள்! கத்திரி உருளை மசாலா

தேவையான பொருள்கள் : கத்திரிக்காய் - 2, உருளைக்கிழங்கு - 2, முந்திரி - 50 கிராம், மஞ்சள் தூள் - சிறிது, பச்சை மிளகாய் - 5, சீரகம் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், பிஸ்தா - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - சிறிது. செய்முறை : முந்திரி 30 கிராம் நன்றாக ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கைச் சதுரமாக வெட்டிக் கொள்ளவும். கத்திரிக்காயையும் சிறிதாக வெட்டி அதனை எண்ணெயில் சிறிது நேரம் வறுத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் நன்றாக எண்ணெய் ஊற்றி அதில் சிறிது சீரகத்தைச் சேர்த்து, பொ¡¢ந்த பின் அரைத்த முந்திரியை அதில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைக்கவும். மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு போடவும். பின்னர் பொரித்த காய்கறிகளைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதனுடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்னர் பாதாம், பிஸ்தா மற்றும் மீதமுள்ள முந்திரி ஆகியவற்றைப் பொன்னிறமாகப் பொரித்து அதனுடன் சேர்த்தால் கத்திரி உருளை மசாலா ரெடி.

சமையல் குறிப்புகள்! வாழைப்பூ உருண்டைக் குழம்பு

தேவையான பொருள்கள் : எண்ணெய் - சிறிது, பச்சை மிளகாய் (அரைத்தது) - 1 டேபிள் ஸ்பூன், தக்காளி (அரைத்தது) - 1 கப், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், தேங்காய் முந்திரி(அரைத்தது) - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - சிறிது, மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன், மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன், புளித் தண்ணீர் - அரை கப் தேவையானவை : கடலைப் பருப்பு -150 கிராம், பெரிய வெங்காயம் - 1, இஞ்சி - சிறிது, பச்சை மிளகாய் (சிறிதாக நறுக்கியது) - 2, சீரகம், சோம்பு - 5 கிராம், பூண்டு - 2 பற்கள், வாழைப்பூ (சிறிதாக நறுக்கியது) - 100 கிராம் செய்முறை : கடலைப் பருப்பை ஊற வைத்து, அதில் சிறிதாக நறுக்கிய பொரிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றுடன் சோம்பு, சீரகம் மற்றும் வாழைப்பூ சிறிதாக நறுக்கியது சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அதனை சிறிது அரைத்து உருண்டைகளாகப் பிடித்து, இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவைக்க வேண்டும். ஒரு கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு அதில் பச்சை மிளகாய், தக்காளி அரைத்ததைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதங்கியபின் அதில் சிறிது மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அதில் புளித்தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொதிக்கவிடவும். தேவையான உப்பு, வேகவைத்த உருண்டையைச் சேர்த்து உருண்டை உடையாமல் நன்றாகக் கலக்கி இறக்கினால் வாழைப்பூ உருண்டைக் குழம்பு தயார்!

சமையல் குறிப்புகள்! மல்லிப் பூண்டு ரொட்டி

தேவையான பொருள்கள் : அரிசி மாவு - 1/4 கிலோ, பூண்டு - 15, பச்சை மிளகாய் - 4, பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிது. செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். சிறிதாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, நீர் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். பின்னர் ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி அந்த மாவை அதில் வைத்து மெல்லியதாகத் தட்டவும். தோசைக் கல்லில் இட்டுச் சுடவும்.

Wednesday, March 9, 2011

சமையல் குறிப்புகள்! மசாலா பப்பட்

தேவையானவை: மைதா மாவு & ஒரு கப், கடலை மாவு & அரை கப், இஞ்சி&பூண்டு விழுது & அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் & அரை டீஸ்பூன், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், நெய் & 2 டீஸ்பூன், அரிசி மாவு & 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா &அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை & ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் & தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, இஞ்சி&பூண்டு விழுது, மசாலா தூள், மிளகாய்தூள், கீரை, மல்லித்தழை, புதினா ஆகியவற்றுடன் நெய், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவுபோல் பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் வைத்து அரிசி மாவை இருபுறமும் தேய்த்து மெல்லிசாகத் திரட்டவும். மிதமான தீயில் எண்ணெயைக் காயவைத்து அதில் போட்டு, எடுத்து பரிமாறவும். மாலை நேரத்தில் செய்து சாப்பிட மிகவும் உகந்த சுவையான சிற்றுண்டி இது!

சமையல் குறிப்புகள்! நீர்க்கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கல் அரிசி & 2 கப், துவரம்பருப்பு & 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் & 1 மூடி, காய்ந்த மிளகாய்- & 3 அல்லது 4, உப்பு, பெருங்காயம் & தேவை யான அளவு. தாளிக்க: தேங்காய் எண்ணெய் & 3 ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை & தலா தேவையான அளவு. செய்முறை: அரிசியையும் துவரம்பருப்பையும் 2 மணி நேரம் ஊறவைத்து, மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் ஒரு எலுமிச்சம் பழ அளவு எடுத்து 2 கப் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து தனியாக வைத்துக்கொள்ள வும். மீதி மாவை சிறு சிறு உருண்டை களாக உருட்டி வைத்துக்கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, அதில் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்த பிறகு, உருட்டி வைத்திருக்கும் கொழுக்கட்டைகளை அதில் மெதுவாகப் போடவும். 10 நிமிடம் நன்றாக வெந்தபிறகு கொழுக்கட்டைகள் மேலே மிதந்து வரும். அப்படியே இறக்கி, பருப்புக் கஞ்சியுடன் சேர்த்தே கொழுக்கட்டைகளைச் சூடாகப் பரிமா-றவும். மீண்டும் சாப்பிடத் தோன்றும் இந்த நீர்க்கொழுக்கட்டை, உடம்புக்கு எந்த ஊறும் விளைவிக்காத, சுவையான எளிமையான பழங்காலத்து சிற்றுண்டி! நீர்க்கொழுக்கட்டை: அரைத்த கலவையை வேகவைப்பதற்கு பதிலாக, முதலில் திட்டமாக தண்ணீர் வைத்து, கொதித்ததும் கொழுக்கட்டைகளைப் போடவேண்டும். எல்லாம் வெந்து மேலே மிதந்து வந்தபிறகு, கரைத்த அரிசி&பருப்புக் கலவையைச் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டும் இறக்கலாம்.

சமையல் குறிப்புகள்! சோயாவடை

தேவையானவை: சோயா பீன்ஸ் & ஒரு கப், பிரெட் & 2 ஸ்லைஸ், பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் & அரை கப், பச்சைமிளகாய் & 3, இஞ்சி&பூண்டு விழுது & ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, எண்ணெய் & தேவையான அளவு. செய்முறை: பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். முதலில் சோயாவை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பாதி வெந்தபிறகு, இறக்கி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். ஒரு நிமிடம் அரைத்தால் போதும். இரண்டு பிரெட் துண்டுகளை பாலில் அல்லது தண்ணீரில் நனைத்து, மிக்ஸியில் போட்டு (?) மீண்டும் அரை நிமிடம் அரைத்-தெடுக்கவும். கடைசியில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி&பூண்டு விழுது, உப்பு, மிளகுத் தூள், எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, சிறு சிறு வடைகளாகத் தட்டி குழிவான நான்&-ஸ்டிக் தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி, ‘ஷேலோ ஃப்ரை’ செய்து (அதிக எண்ணெய் தேவைப்படாத ஃப்ரை இது. இருபுறமும் திருப்பி, நன்கு வேக வைக்கவும்) எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம். சோயா வடை: பிரெட் துண்டுகளுக்கு பதில் உருளைக்கிழங்கை வேகவைத்து, மசித்துச் சேர்த்தும் வடை செய்யலாம்.

கீரைகளின் மகத்துவம்!

கீரையின் மகத்துவம் கீரைகளில் நம் உடலுக்குத் தேவையான சக்தியை அதிகரிக்கும் வைட்டமீன்கள் அதிகம். சத்து அதிகம் மிக்க சில கீரை வகைகளைப் பார்ப்போம். அகத்திக்கீரை: அகத்திக்கீரை ஜீரண சக்தியைத்தரும். மலச்சிக்கலைப் போக்கும்.அரிசி களைந்த தண்ணீரில் சின்ன வெங்காயம், சீரகப்பொடி, தேவையான அளவு உப்புடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்துச் சாப்பிடலாம்.அகத்திக்கீரையுடன் தேவையான அளவு உப்பு, வர மிளகாய், அரிந்த வெங்காயம் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம். அரைக்கீரை: புரதம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த கீரை அரைக்கீரையாகும். காய்ச்சலால் எற்படும் உடல் நடுக்கம், கபரோகம், வாதநோய் ஆகிய நோய்களை அரைக்கீரை சரி செய்கிறது. ரத்தத்தை விருத்தி செய்து சோர்வைப்போக்கி உடல்நலத்தை சீராக்கும். தாது விருத்தியைத் தந்து உடலின் சக்தியைப் பெருக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. சிறுகீரை: பெயரில் தான் சிறுகீரையே தவிர பலன்கள் அதிகம். இக்கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விலகும். காச நோய் குணமாகும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும். பெண்களின் மேனி எழிலுக்கு ஒரு வரப்பிரசாதம் இக்கீரை. உடல் நலிவுக்கு மருந்து சாப்பிடும்போது மட்டும் சிறுகீரை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். தூதுவளைக்கீரை: தூதுவளை இலை முட்களுடன் இருக்கும். அவைகளில் உள்ள முட்களை நீக்கி உபயோகிக்க வேண்டும். இதைப்பச்சடியில் சேர்க்கலாம். கூட்டாகவும் வைக்கலாம். துவையல் செய்தும் சாப்பிடலாம். விந்து நஷ்டம், மேலிழைப்பு, காசநோய், காதுமந்தம் ஆகியவற்றுக்கு தூதுவளை கை கண்ட மருந்து. புதினாக்கீரை: சிறுநீரகங்களை பலப்படுத்தக்கூடிய கீரை புதினாக்கீரை. புதினாக்கீரையை துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட, பசி எடுத்து சாதம் அதிக அளவில் உள்ளே போகும். புளிச்சகீரை: நுரையீரலை வலுப்படுத்தி சுவாசத்தை சீர் செய்யும் கீரை புளிச்சகீரை. புளிப்பு ருசியுடைய இந்தக்கீரைக்கு சுக்காங் கீரை என்ற பெயரும் உண்டு. தேகத்திற்கு மிக்க வலுவைத் தரும். போகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். தீராத பித்தத்தை போக்கும். ரத்த பேதியை சரி செய்யும். பெண்களுக்கு வரும் மார்புப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இந்த புளிச்ச கீரைக்கு உண்டு. பொன்னாங்கண்ணிக் கீரை: உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர, கண்களைப்பற்றிய ரோகம் நீங்கும். உஷ்ணமண்டல ரோகம், தேகச்சூடு, முலரோகம் போகும். மணத்தக்காளிக்கீரை: நாவில் உள்ள புண் நீங்கும். உடலின் உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் சக்தி இந்தக்கீரைக்கு உண்டு. முருங்கைக்கீரை: அக்கினி மந்தம், உட்சூடு, கண்தோஷம் யாவும் நீங்கும். உடல் சூட்டை தணித்து சமப்படுத்தும். பித்த சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும். உடலுக்கு நல்ல பலம் தரும். தாய்ப்பாலை சுரப்பிக்கும். தாதுவை விருத்தி செய்யும். முளைக்கீரை: ரத்த அழுத்த நோய்க்கு முளைக்கீரை சாப்பிடுவது நல்லது. முடக்கத்தான் கீரை: இருமலுக்கு அருமருந்து. வல்லாரைக்கீரை மூளைத் திறனைப் பெருக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போக்கும்.

சமையல் குறிப்புகள்! முருங்கை இலை சூப்

தேவைப்படும் பொருட்கள்: * முருங்கை இலை- 2 கப் * கேரட் துருவல் - அரைகப் * தேங்காய் துருவல்- அரைகப் * பெரிய வெங்காயம்- 2 * இஞ்சி துண்டுகள்- 3 * பூண்டு- 1 * மல்லி இலை- ஒரு பிடி * உப்பு- தேவைக்கு * மிளகு தூள்- ஒரு தேக்கரண்டி * சீரகம்- ஒரு தேக்கரண்டி * நெய்- 2 தேக்கரண்டி * காயத்தூள்- சிறிதளவு செய்முறை: முருங்கை இலையை நார் இல்லாத அளவுக்கு சுத்தமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தையும், இஞ்சியையும் சிறிதாக நறுக்கவும். மல்லி இலையையும் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். நெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம். கேரட் துருவல், தேங்காய் துருவல், பெ.வெங்காயம், இஞ்சி, பூண்டு, மல்லி இலை போன்றவைகளை ஒன்றாக்கி அதில் ஐந்து கப் தண்ணீர் விட்டு கொதிக்கவையுங்கள். வெந்து வரும்போது தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வாணலியை சூடாக்கி நெய் அல்லது தேங்காய் எண்ணையை ஊற்றி சூடாக்குங்கள். சூடானதும் சீரகம், முருங்கை இலையைக் கொட்டி லேசாக வதக்குங்கள். அதையும், வேகவைத்த பொருட்களையும் ஒன்றாக்கி மிக்சியில் போட்டு ஓடவிடுங்கள். அதில் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் சூப்பையும் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள். அத்துடன் மிளகுதூள், காயத்தூள், உப்பு போன்றவைகளைச் சேர்த்து சூட்டோடு ருசியுங்கள்.

மூலிகைகள் கீரைகள்! பொன்னாங்கண்ணிக் கீரை

சாதாரணமாக பொன்னாங்கண்ணி யின் காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும் எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. இந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக் கள், கார்போஹைட்ரேட், கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. கால்ஷியம் அதிக அளவில் கலந்திருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் இந்தக் கீரை ரொம்பவே உதவும். 'பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந் தால், பகலிலும் நட்சத்திரத்தைப் பார்க்க லாம்' என்பார்கள். காரணம், இதில் வைட்டமின்ஏ இருப்பதால், அந்த அளவுக் குக் கண் பார்வையைக் கூர்மையாக்கும் வல்லமையைக் கொண்டது இது. இதை வெவ்வேறு விதமாக உட்கொள் வதன் மூலம், நமது உடம்பின் எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும். இந்தக் கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்துச் சமைத்து, சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும். மாறாக, பருப்பும் நெய்யும் கலந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும். இதன் சாற்றுடன் சம அளவு கீழாநெல்லிச் சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கண் சம்பந்தமான நோய்கள் விலகும். உடல் உஷ்ணம் குறையும். ரத்தம் விருத்தியாகும். இதன் பெயருக்கேற்றாற் போல, நமது தோலின் மினுமினுப்புத் தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் இந்தக் கீரைக்கு உண்டு. இவ்வளவு மகத்துவங்கள் அடங்கிய இந்தக் கீரையை, 'கீரைகளின் ராஜா' என்று தயங்காமல் சொல்லலாம்!

Tuesday, March 8, 2011

அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் மூலிகைகளில் தீர்வு உண்டு.

நாமெல்லாம் சீண்டாத மூலிகைகளை வெளிநாடுகளில் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். நமக்கோ, அவற்றின் அருமை தெரியாமல் அலட்சியப்படுத்துகிறோம். சுலபமாகவும், செலவில்லாமலும் கிடைக்கிற எத்தனையோ மூலிகைகள் அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தருபவை. தலை முதல் கால் வரை உண்டாகிற அத்தனை அழகுப் பிரச்னைகளுக்கும் மூலிகைகளில் தீர்வு உண்டு. அப்படி சிலவற்றைப் பார்க்கலாமா? கூந்தல் முடி உதிர்வைத் தடுக்க... கரிசாலை இலை, நெல்லி முள்ளி (உலர்ந்த நெல்லிக்காய்), அதிமதுரம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தலையில் தடவிக் குளிப்பதால் முடி உதிர்வைத் தடுக்கும். கரிசாலை சாறு 750 மி.லி., நெல்லிக்காய் சாறு 750 மி.லி., நல்லெண்ணெய் 750 மி.லி., பசும்பால் 3 லிட்டர் ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அத்துடன் 50 கிராம் அதிமதுரத்தைப் பொடி செய்து கலந்து காய்ச்சவும். சாறு வற்றி நல்ல வாசனை வரும் சமயம் இறக்கி, வடிகட்டி ஆற விடவும். இதைத் தினசரி தலைக்குத் தடவி வந்தால், முடி உதிர்வது நிற்கும். பொடுகு நீங்க... தேங்காய் எண்ணெய் 250 மி.லி., அருகம்புல் சாறு 50 மி.லி., கரிசலாங்கண்ணி சாறு 50 மி.லி., தேங்காய்ப் பால் 100 மி.லி., அதிமதுரம் 15 கிராம் எடுத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் அருகம்புல் சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு கலந்து காய்ச்சவும். அது பாதியாக வற்றியதும், அதில் தேங்காய்ப் பால் கலந்து காய்யச்சவும். தண்ணீர் வற்றி, எண்ணெய் பிரியும் நேரம், அதிமதுரத்தைப் பொடி செய்து போட்டு, சிவந்ததும் இறக்கி வைக்கவும். பொடுகு உள்ளவர்கள் இந்த எண்ணெயைத் தலைக்குத் தடவி வந்தால், குணம் தெரியும். வாரம் இரண்டு முறை இந்த எண்ணெயை உபயோகித்து தலைக்கு எண்ணெய் குளியலும் செய்யலாம். பொடுதளை என்கிற மூலிகையை இடித்துச் சாறு எடுக்கவும். அதே அளவு நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி, சாறு வற்றியதும் வடிகட்டி வைத்து, தலைக்குத் தடவி வந்தாலும் பொடுகு நீங்கும். செம்பட்டை மறைய... கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தினமும் தடவி வர, செம்பட்டை மறையும். நரை நீங்க... கரிசாலை சாறும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் ஒன்றாகக் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊறிய பிறகு குளித்து வருவது நரையைப் போக்கும். வழுக்கை நீங்க... அதிமதுரத்தைப் பொடி செய்து, எருமைப்பால் விட்டு விழுதாக அரைத்து, இன்னும் கொஞ்சம் எருமைப் பாலில் கலந்து வழுக்கை விழுந்த இடங்களில் தேய்த்துக் குளிக்க சரியாகும். சருமம் பருக்கள் போக... சீரகம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துப் பசும்பால் விட்டு அரைத்து, பருக்களின் மேல் தடவி, ஒரு மணி நேரம் ஊறிக் கழுவி வந்தால் பருக்கள் மறையும். கருந்துளசியை அரைத்துப் பருக்கள் மேல் பற்றுப் போட, பருக்கள் உடையும். கரும்புள்ளிகள் அகல... எலுமிச்சை சாற்றில் தயிர் கலந்து குழைத்தால் கிரீமை போல் வரும். அதை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிட, கரும்புள்ளிகள் மறையும். தாமரைக் கிழங்கு, அதிமதுரம், அல்லிக் கிழங்கு, அருகம்புல், வெட்டிவேர், சடாமஞ்சில், மரமஞ்சள் இவை எல்லாம் தலா 30கிராம் எடுத்துப் பொடியாக்கி, தண்ணீரில் குழைத்துக் கரும்புள்ளிகளின் மேல் தடவினால், கரும் புள்ளிகள் சரியாகும். சரும நிறம் அதிகரிக்க.. . ஊற வைத்த கொண்டைக் கடலையைக் கைப்பிடியளவு எடுத்து பால் விட்டு அரைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் காயவிட்டு, பிறகு மஞ்சள் தூளும், எலுமிச்சை சாறும் கலந்த கலவை உபயோகித்துக் கழுவி வந்தால், நிறம் கூடும். நன்னாரி வேர், ஆலம்பட்டை, ஆவாரம் பூ மூன்றும் சம அளவு எடுத்து 100 மி.லி. தண்ணீரில் போட்டுப் பாதியாக வற்ற விட்டு, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். அதையே சருமத்திலும் தடவலாம். தொடர்ந்து இப்படிச் செய்துவர, சருமம் பொன்னிறம் பெறும். சுருக்கங்கள் மறைய... காய்ச்சிய பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் கிளிசரின் விட்டு, ஒரு மணி நேரம் வைக்கவும். இரவு படுக்கும் முன்பாக இதை முகத்தில் தடவி உலர விடவும். காலையில் குளிர்ந்த தண்ணீரால் முகம் கழுவிட, சுருக்கங்கள் மறைந்து, இளமை திரும்பும். கருவளையங்கள் மறைய... வெள்ளரிக்காயைத் துருவி சாறு எடுத்து, பஞ்சில் நனைத்துக் குளிர வைத்து, கண்களின் மேல் வைத்துக் கொண்டு, இருட்டான அறையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும். அடிக்கடி இப்படிச் செய்துவர, கருவளையங்கள் காணாமல் போகும். உதடுகள் பளபளக்க... முட்டையின் வெண் கரு, பாதாம் பவுடர், பாலாடை மூன்றையும் கலந்து உதடுகளின் மேல் தடவி, காய்ந்ததும் வெந்நீரில் கழுவி விட்டு, தேங்காய் எண்ணெய் தடவலாம். வியர்வை நாற்றம் போக... ஆவாரம் பூவைக் காய வைத்து, சம அளவு பயத்தம் மாவு கலந்து, தினம் சோப்புக்குப் பதில் உடலுக்குத் தேய்த்துக் குளித்து வரலாம். நகங்கள் பளபளக்க... பாலைக் கொதிக்க வைத்து, இளம் சூடாக இருக்கும்போது, அதில் நகங்கள் நனையுமாறு வைத்திருந்து, பிறகு பஞ்சினால் துடைத்து விடலாம். இதனால் நகங்களில் அழுக்கும், கறைகளும் மறைந்து பளபளப்புக் கூடும். கைகள் அழகாக... பாலாடை மற்றும் முட்டையின் வெண்கரு இரண்டையும் சேர்த்து கைகள் முழுக்கத் தடவி சிறிது நேரம் காயவிட்டு, பயத்தம் மாவால் தேய்த்துக் கழுவலாம். பாதங்கள் பளபளப்பு பெற... வேப்பிலை, மருதாணி இலை இரண்டும் சம அளவு எடுத்து, ஒரு துண்டு மஞ்சளுடன் சேர்த்து பால்விட்டு அரைத்து வெடிப்புகளின் மேல் திக்காகத் தடவி நன்கு காய விட்டு வெந்நீரில் கழுவிட, பாத வெடிப்புகள் மறைந்து மென்மையாகும். அரச மரத்தின் அடிப்பகுதியைக் கீறினால் பால் வரும். அதை வெடிப்புகளின் மேல் தடவி வர, பாதங்கள் பட்டுப் போலாகும்.

சமையல் குறிப்புகள்! ரசம் சுவையாக இருக்க

ரசம் சுவையாக இருக்க என்ன அளவுகளில் பொருட்களைச் சேர்த்து ரசப் பொடி அரைக்க வேண்டும். மூலப் பொருட்களை வறுக்கும் பக்குவத்தையும் சொல்லவும்? ரசத்துக்கு முக்கியத் தேவை வாசனையும் ருசியும்! துவரம் பருப்பு-1 டம்ளர், மிளகு- ¾ டம்ளர், சீரகம்-¼ டம்ளர், கறிவேப்பிலை-1 கப், பெருங்காயம் சிறிய நெல்லிக்காய் அளவு. வெறும் கடாயில் முதலில் மிளகை வறுத்துக் கொண்டு, து.பருப்பு, சீரகம் என ஒவ்வொன்றாய் வறுத்துக் கொள்ளவும். பெருங்காயத்தை கறிவேப்பிலையுடன் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த ரசப் பொடி ஒரு வாரம் வரை அதன் தன்மை மாறாதிருக்கும். ரசத்தை முடிந்த வரை ஈயப் பாத்திரத்தில் வைத்தால், ரசம் வாசனையாக நன்றாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்! தவலை வடை எப்படிச் செய்வது?

தவலை வடை சரியாக வரவில்லை. விள்ள முடியாமல் கெட்டியாகி விடுகிறது. சரியான பக்குவம் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். தவலை வடைக்கான காம்பினேஷன் சரியாகப் போட்டு சரியான பக்குவத்தில் அரைத்து சுட்டாலே போதும்... இதோ தவலை வடை செய்ய தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு-1 கப், கடலைப் பருப்பு-¾ கப், பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி தலா-¼ கப், புழுங்கல் அரிசி-½ கப், உப்பு, மிளகாய் வற்றல்-6 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் பெருங்காயப் பொடி, நறுக்கிய இஞ்சி, 2 பச்சை மிளகாய், பல்பல்லாக நறுக்கிய தேங்காய் ஆகியவற்றைப் போட்டுக் கலந்து கொள்ளவும். மாவு பக்குவம் : கரகரவென அரைத்த மாவைக் கரண்டியில் எடுத்தால், விழுவது போல் பக்குவம் இருக்க வேண்டும். கடாயில் எண்ணெயை மிதமாகக் காயவிட்டு, ஒரு கையில் ஜல்லிக் கரண்டியைப் பிடித்துக் கொண்டு, குழிக்கரண்டியில் மாவை எடுத்து ஜல்லிக் கரண்டியில் போட்டு, லேசாக பிரஸ் செய்யவும். பின்னர் ஜல்லிக் கரண்டியை எண்ணெய் மீது லேசாகச் சாய்த்து மாவை எண்ணெயில் விட்டு வேக வைத்து எடுக்கவும். தவலை வடை மேலாக முறுமுறுப்பாகவும், உள்ளே சாஃப்ட்டாகவும் இருக்கும்.

சமையல் குறிப்புகள்! போளி, பூரணம் கெட்டியாக எப்படிச் செய்வது?

எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து செய்தாலும் போளி, பூரணம் கெட்டியாக வருவதில்லை. சற்று நீர்த்து விடுகிறது. எப்படிச் செய்தால் பூரணம் கெட்டியாக இருக்கும்? இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஒரு டம்ளர் கடலைப் பருப்பை மெத்தென்று அமுங்கும்படி வேக வைக்கவும். வெந்த பருப்பில் 2 கப் தேங்காய்த் துருவல், 300 கிராம் வெல்லம் இரண்டையும் சேர்த்து கெட்டியாகத் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அரைத்த விழுதை, கனமான கடாயில் போட்டு அடிபிடிக்காமல் கிளறி, உருட்டும் பதத்தில் பூரணம் தயார் செய்தால், கெட்டியாக வரும்

சமையல் குறிப்புகள்! கத்தரிக்காய் கொத்ஸ§ எப்படிச் செய்வது?

கத்தரிக்காய் கொத்ஸ§ எப்படிச் செய்வது? ½ கிலோ கத்தரிக்காய், ¼ கிலோ வெங்காயம், ஐந்து பச்சை மிளகாய் இவைகளைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப் பருப்பு தாளித்து, வெங்காயம், கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் பொடி போட்டு வதக்கவும். கத்தரிக்காய் வெந்ததும், நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். ஒரு டீஸ்பூன் பொட்டுக் கடலை, ஒரு டீஸ்பூன் தனியா, காய்ந்த மிளகாய் நான்கு. இவற்றை மிக்ஸியில் பொடித்து மேலாகத் தூவலாம்.

பாட்டி வைத்தியம்! மூட்டுவலிக்கு மருந்து

"எனக்கு ஒரே மூட்டுவலி பாட்டி.. இருக்க இருக்க மூட்டுக்கு மூட்டு வலி அதிகமாகிக்கிட்டே இருக்கு... வீக்கமும் அதிகமாகிக்கிட்டே இருக்கு...என்ன செய்யிறதுன்னே தெரியல... நீங்க ஏதாவது மருந்து சொல்லுவீங்கன்னுதான் வந்தேன்...."

மூட்டுவலி வேதனை பற்றிய புலம்பலைக்கேட்ட பாட்டி, 'இப்ப ஒனக்கு வயசு 50.. 51 இருக்குமா...'

'ஆமா பாட்டி.. 50 முடியப்போவுது..'

"..ம்.. 48.. 50.. வயச நெருங்கினாலே உடம்புக்குள்ள எல்லா வலியும் ஒண்ணொண்ணா வர ஆரம்பிச்சிடும். ஆனா இந்த காலத்து பசங்களுக்கு சின்னவயசுலயே எல்லாம் வர ஆரம்பிச்சிருது... இப்ப ஒனக்கு மூட்டு வலி..."

'வாத நீரு கப நீரோட கலந்து மூட்டுல இறங்குறதாலதான் இந்த மூட்டுவலி வருது...'

"இந்த கோளாரு இருக்கும்போது குளிர்ந்த காத்து அடிச்சாக்கூட வலி அதிகமா தெரியும். பருவநிலை மாறுற காலத்துலயும், இந்த மூட்டுவலி அதிகமாகும்..மலச்சிக்கல் இல்லாம வயித்த சுத்தமா வச்சிக்கிறவங்களுக்கு மூட்டுவலி அதிகம் வாறதில்ல.. மாதவிடாய் ஒழுங்கா இல்லையின்னாலும் கண்டிப்பா மூட்டுவலி வரும்.

"நீ.. கற்பூரத் தைலத்த தொடந்து தேச்சிக்கிட்டே வா. அதோட ...

கருஞ்சீரகம் - 10 கிராம்

கார்கோல் - 10 கிராம்

கோஷ்டம் - 10 கிராம்

தேவதாரம் - 10 கிராம்

ராமிச்சம் - 10 கிராம் இவைகள எடுத்து பொடியாக்கி வச்சிக்கிட்டு, கற்பூரவள்ளி இலை, குப்பைமேனி இலை, வேலிப்பருத்தி இலை, அமிர்தவல்லி இலை இவைகள தனித்தனியா வகைக்கு 100 மி.லி. சாறு எடுத்து 1 லிட்டர் தேங்காய் எண்ணெய், 1 லிட்டர் நல்லெண்ணெய் சேத்து எடுத்து வச்சிருக்குற சாறு, இடிச்சபொடியையும் போட்டு நல்லா காய்ச்சி, அடியில களி மாதிரி வரும். திரும்பவும் காச்சிக்கிட்டே இருந்தா மணல் மாதிரி வரும். அத அப்படியே இறக்கி எண்ணெய வடிகட்டி அதுல 5 கிராம் பச்சைக் கற்பூரம் போட்டு பாட்டில்ல அடச்சி வச்சிக்கிட்டு காலையிலயும், சாயந்திரமும் மூட்டுவலி இருக்குற இடத்துல பூசிக்கிட்டு வந்தா மூட்டுவலி கொறயும்.."

எளிதா செரிக்கிற சாப்பாட்ட சாப்பிடு... மூட்டு வலி நம்ம கைப் பக்குவத்திலயே வராதபடிக்கு பாத்துக்கலாம்... மலச்சிக்கல் இல்லாம பாத்துக்க. வாயுவ உண்டாக்குற பதார்த்தங்கள ஒதுக்கிடு.. ஏன்னா வயசு ஆயிக்கிட்டே இருக்குல்லயா...

பாட்டி சொன்னதைக் கேட்டுக்கொண்ட பேச்சி, லேசான ஏக்கத்துடன், தனது இளமைக்கால கதைகளைப் பேசத் தொடங்கினார்.

Sunday, March 6, 2011

சிம்பிளான அழகு குறிப்புகள்-9

புதினா, தக்காளி, தயிர், உருளைக் கிழக்கு, தேங்காய்ப்பால்... இவையெல்லாம் சாப்பிடுவதற்கில்லை... இதில் சிம்பிளான அழகு குறிப்புகளும் உண்டு. இந்த ரெசிபிக்களை தொடர்ந்து உபயோகப்படுத்தி வர சாதாரண முகமும் சூப்பராகும்! 1. ஒரு டேபிள் ஸ்பூன் பொடித்த ஓட் ஸ§டன், சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து முகம் கழுவிப் பாருங்கள். களையிழந்த முகத்துக்கும் ஒரு ஜொலிப்பு கிடைக்கும். இந்த ரெசிபியை வாரம் ஒருமுறை போட்டுக்கலாம். 2. சிறிது புதினாவுடன் தயிர் கலந்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். முகத்தில் தடவி பத்து நிமிடத்துக்குப் பிறகு கழுவினால் முகத்திலுள்ள கருப்புத் திட்டுகள் மாயமாக மறையும். 3. ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து குழைத்து எடுத்து கிண்ணத்தில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் உரைய வைத்து எடுத்துக்கணும். இந்த ஐஸ் தக்காளியை லைட்டாக முகத்தில் தேய்த்துத் தடவி, சிறிது நேரத்துக்கு பிறகு முகம் கழுவினால் முகத்தில் ஒரு கூடை மூன்லைட்தான்! 4. வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் அப்பிக்கொண்டு சில நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் முகச் சுருக்கங்கள் மறையும். 5. எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன், தேன் ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு டேபிள் ஸ்பூன்... இந்தக் கலவையை முகத்தில் தடவி, கழுவிப் பாருங்களேன். வெயிலால் ஏற்பட்ட கருப்புத் திட்டுகள் வெளுக்கத் தொடங்கும். 6. முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து அதில் சிறிது தேன் கலந்துக்கணும். இதை முகத்தில் தடவி, சிறிது நேரத்துக்குப் பிறகு கழுவினால் முகத்துக்கு புதுப் பொலிவு கிடைக்கும். 7.முகத்தில் சொரசொரப்பாக காணப்படும் கரும்புள்ளிகள்தான் முகச்சருமத்தின் எதிரி. கரகரப்பாக அரைத்த அரிசிமாவு ரெண்டு டேபிள் ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர்... இதை முகத்தில் தடவி லேசாக தேய்த்தபிறகு முகம் கழுவினால் சருமம் மென்மையாகும். 8. முகத்தில் அதிகம் பருக்கள் இருந்தால் தினமும் தயிரை முகத்தில் தடவி, இருபது நிமிடம் கழித்து முகம் கழுவினால் பருக்கள் குறையத் தொடங்கும். 9. ஒரு டீஸ்பூன் முல்தாணி மெட்டியில் ரெண்டு டீஸ்பூன் உருளைக்கிழங்குச் சாறு கலந்து முகத்தில் தடவிக்கொண்டு சிறிது நேரத்துக்குப் பிறகு முகம் கழுவினால் சுத்தமான சருமம் கிடைக்கும்.