மசாலா இட்லி--சமையல் குறிப்புகள்
மசாலா இட்லி தேவையான பொருட்கள் இட்லி- 8 பட்டை, சோம்பு,ஏலக்காய்- சிறிதளவு இஞ்சி- 1 துண்டு கறிவேப்பிலை- 1 இணுக்கு தேங்காய்- 1/4 டம்ளர் தாளிக்...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_9915.html
மசாலா இட்லி
தேவையான பொருட்கள்
இட்லி- 8
பட்டை, சோம்பு,ஏலக்காய்- சிறிதளவு
இஞ்சி- 1 துண்டு
கறிவேப்பிலை- 1 இணுக்கு
தேங்காய்- 1/4 டம்ளர்
தாளிக்க:
நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு
செய்முறை
1. இட்லிக்களை ஓரளவு பெரிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. மிக்ஸியில் தேங்காய், கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி, பச்சைமிளகாய் இஞ்சி, பட்டை சோம்பு மசாலாப் பொருட்களைச் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.
3. தாளிக்கத் தேவையானவற்றைத் தாளித்துக் கொண்டு அரைத்தக் கலவையைப் பச்சை வாடை போக வதக்கவும். இதனுடன் நறுக்கிய இட்லித்துண்டுகளைச் சேர்த்து வதக்கி எடுக்க சுவையான மசாலா இட்லி தயார். மசாலா சேர்க்கப் பிடிக்காதவர்கள் கொத்தமல்லி, கறிவேப்பில்லை தூக்கலாகச் சேர்த்து இதே முறையில் செய்து கொத்தமல்லி இட்லியாக அமர்க்களப்படுத்தலாம். பச்சை நிறத்தில் அசத்தும் இந்த இட்லிக்கு போட்டா போட்டி தான் போங்கள்.
இனி இட்லி மீந்தால் உப்புமா கிண்டவோ, வேறு என்ன செய்யலாம் என்றோ யோசிக்க மாட்டேங்க தானே? காய்கறி(சில்லி) இட்லி, மிளகாய்ப்பொடி இட்லி, மசாலா இட்லி, கொத்தமல்லி இட்லி, தயிர் இட்லி என்று வித விதமா செய்து குடும்பத்தினரையும் விருந்தினரையும் அசத்திடுங்கள்.
Post a Comment