இணையத்தில் கிடைக்கும் இலவச நூல்கள்---கணிணிக்குறிப்புக்கள்--கணிணிக்குறிப்புக்கள்

இணையத்தில் கிடைக்கும் இலவச நூல்கள் எலக்ட்ரானிக் புக் என்று சொல்லக் கூடிய இ–புக் நூல்கள் மாணவர்களிடமும் விஷயங்களை அறிந்து கொள...

இணையத்தில் கிடைக்கும் இலவச நூல்கள்

எலக்ட்ரானிக் புக் என்று சொல்லக் கூடிய இ–புக் நூல்கள் மாணவர்களிடமும் விஷயங்களை அறிந்து கொள்ள விரும்பும் மற்றவர்களிடமும் பிரபலமாகி வருகின்றன. இ–புக் படிப்பதில் என்ன லாபம் என்றால் இவற்றில் பெரும்பாலானவை இலவசமாகக் கிடைக்கின்றன. சிடிக்களில் பதிந்து எடுத்துச் செல்வது எளிது. அதிலேயே குறிப்புகளையும் எழுதி வைக்கலாம். பல நூல்களில் உள்ள ஒரே விஷயத்தைத் தொகுத்து வைத்து படிக்கலாம். நமக்குத் தேவையான பக்கங்களை மட்டும் பிரிண்ட் எடுத்து படிக்கலாம். ஒரு சில பக்கங்களுக்காக ஒரு புத்தகத்தையே விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை. எத்தனை ஆண்டுகளானாலும் இந்த நூல்கள் கிழியவோ அழியவோ போவதில்லை. யாரும் வாங்கிச் சென்று திருப்பித் தரவில்லை என்ற பிரச்னையும் இல்லை. எளிதாக ஒரு பென் டிரைவில் காப்பி செய்து எடுத்துச் செல்லலாம். மேலும் இன்னொருவருக்கு இமெயில் மூலமாக அனுப்பவும் செய்திடலாம். இணையத்தில் பல இடங்களில் இத்தகைய நூல்கள் கிடைக்கின்றன. அவற்றில் கீழ்க்காணும் மூன்று தளங்கள் சிறப்பாக இயங்குகின்றன. முதல் தளம் www.freeebooks.net. இதில் உள்ள நூல்களில் எத்தனை நூல்களை வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டிய உதவியினைத் தந்து தேவையான பொருளில் உள்ள நூல்களைக் காட்டுகிறது. அடுத்த தளம் www.ebooklobby.com இந்த தளத்தில் நூல்கள் வகைப்படுத்தப்படுள்ளன. வர்த்தகம், கலை, கம்ப்யூட்டிங், கல்வியியல் என அத்தனை பிரிவுகளிலும் நூல்கள் உள்ளன. எந்த வகையில் நூல்களைத் தேடுகிறீர்களோ அதனை கிளிக் செய்து உங்களுக்கான நூல்களை எடுக்கலாம், படிக்கலாம். www.getfreeebooks.com இதுவும் இலவசமாக நூல்களைத் தரும் தளம். எத்தனை நூல்களை வேண்டுமானாலும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இணையம் முழுவதும் தேடிப் பார்த்து அனைத்து இ புக்குகளையும் இங்கு வெளியிட்டுள்ளனர். சில நூல்களை அவர்களே தயாரித்து வழங்குகின்றனர். நீங்கள் சிறப்பானது என்று எண்ணும் இ-புக் இந்த தளத்தில் இல்லையா? இந்த தளத்தின் அட்மினிஸ்ட்ரேட்டருக்கு இமெயில் மூலம் தெரிவித்தால் அவர் அதனைப் படித்துப் பார்த்து சேர்த்துவிடுவார். உங்கள் பாடலை ராக் இசையில் கேட்கலாம்: உங்களுக்கு ஆங்கிலத்தில் பாடல் எழுதத் தெரியுமா? தனித் திறமை ஒன்றும் தேவையில்லை. Happy Birthday to You My dear என்று எழுதினாலும் அது ஒரு பாடல் தான். இப்படி உங்கள் பிரியமானவருக்கு பாடல் எழுதி அதனை ராக் இசைப் பாடல்களைப் பாடுபவர்கள் பாடி அதனை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பினால் எப்படி இருக்கும்? இதற்கென ஒரு வேடிக்கையான இணையதளம் உள்ளது. இதன் முகவரி http://www.srse/p1/src/ sing/ ஸ்பீச் டு டெக்ஸ்ட் தொழில் நுட்பம் கேள்விப் பட்டிருப்பீர்கள். இது டெக்ஸ்ட் டு ஸ்பீச் என்ற வகையில் செயல்படுகிறது. உடன் இசையையும் சேர்க்கிறது. தற்போதைக்கு இந்த பாடல் தளத்தின் அகராதியில் 1,400 சொற்கள் மட்டுமே இருக்கிறது. நீங்கள் உங்கள் தோழி விஜயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதை எழுதி அதைப் பாடலாக அனுப்பச் சொன்னால் இந்த மாதிரி விஜயா என்ற சொல் இல்லை. இந்த சொல் உள்ள பாடல் ஏதாவது இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள் என்ற செய்தி உங்களுக்குக் காட்டப்படும். வேடிக்கையாக இருந்தாலும் இது ஒரு புது அனுபவம்தான். தளத்திற்குச் சென்று பார்த்து அனுபவியுங்கள். முதலில் உங்களுக்கே ஒரு கவிதை ஒன்றை எழுதி இதன் மூலம் அனுப்பிப் பாருங்கள். பின் உங்கள் தோழர்களுக்கு அனுப்புங்கள்.


Related

கணிணிக்குறிப்புக்கள் 7611117872304394108

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item