பொடித்து போட்ட எண்ணெய் கத்தரிக்காய் கறி நாலு பேருக்கான கறிக்கு தேவையானவை: குட்டி கத்தரிக்காய்: ஒருவருக்கு ஆறு - ஏழு என்ற கணக்கில் வாங...
நாலு பேருக்கான கறிக்கு தேவையானவை:
குட்டி கத்தரிக்காய்: ஒருவருக்கு ஆறு - ஏழு என்ற கணக்கில் வாங்கிக் கொள்ளவும் (நாலு பேருக்கு அரைக் கிலோ வரை வேண்டியிருக்கும்)
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை அளவுக்கு
பொடி உப்பு - மூன்று டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் / ரிபைன்ட் எண்ணெய் - இரண்டு பால் கரண்டி
பொடித்து போட:
முழு உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி விதை - 2 டேபிள்ஸ்பூன்
நீள வரமிளகாய் - 6
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
பொடித்து போட வேண்டிய பொருட்களை எல்லாம் சிவக்க வறுத்து ஆறவைத்து மிக்சியில் நன்கு பொடித்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயை அடிவரை நறுக்காமல் மேலிருந்து கீழாக குறுக்கில் நான்காகவோ, ஆறாகவோ பிளந்து கொள்ளுங்கள். பூச்சி புழு இருந்தால் அப்படியே விலக்கி விடுங்கள்.
இதை அடிகனமான இன்டாலியம் பிரஷர் பான் அல்லது வாணலியில் ஒரு பால் கரண்டி எண்ணெய்யில் ஒவ்வொன்றாக இறக்கி சிம்மில் (மிதமான தீ) வைத்து மெதுவாக திருப்பி விடவும்.
கத்தரிக்காய்கள் நன்கு வெந்ததும், மஞ்சள் பொடி, பொடி உப்பை தூவி மிக மெதுவாகத் திருப்பி விடவும்.
உப்பு நன்றாகக் கலந்து கொண்டதும், பொடித்ததை போட்டு கலந்து, மீதம் இருக்கும் ஒரு பால் கரண்டி எண்ணையை ஊற்றி திருப்பி விட்டு இரண்டு நிமிஷம் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
Post a Comment