இன்டர்நெட் பயன்பாட்டினைக் கணக்கிட---கணிணிக்குறிப்புக்கள்

இன்டர்நெட் பயன்பாட்டினைக் கணக்கிட பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இப்போது பலரிடம் வெகுவேகமாகப் பரவி வரும் பழக்க இணைப்பாக உள்ளது. இதனை வழங...

இன்டர்நெட் பயன்பாட்டினைக் கணக்கிட

பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இப்போது பலரிடம் வெகுவேகமாகப் பரவி வரும் பழக்க இணைப்பாக உள்ளது. இதனை வழங்கும் சேவை நிறுவனங்கள், இறக்கப்படும், ஏற்றப்படும் டேட்டா அடிப்படையில், குறிப்பிட்ட அளவு ஜிபி வரை ஒரு கட்டணம் என்றும் அதன் பின்னர், ஒவ்வொரு எம்பி டேட்டாவிற்கும் தனியாகக் கட்டணம் வாங்குகின்றனர். சில நிறுவனங்களின் திட்டங்களில் நமக்கு எப்படி இந்த அளவினை மேற்கொள்கிறார்கள் என்று காட்டப்படுவது இல்லை. இதனால், இணைய இணைப்பினைப் பயன் படுத்தினால், ஒரு மணிக்கு இவ்வளவு என, அந்த பயன்பாட்டு நேரத்திற்குமான கட்டணத்தினை மட்டும் செலுத்தும் திட்டத்தினைப் பலர் விரும்புகின்றனர். ஆனால் மணிக்கணக்கினாலான திட்டத்தினை சில நிறுவனங்கள் மட்டுமே அளித்து வருகின்றன. எது எப்படி இருந்தாலும் நம் இணைய பயன்பாட்டினை நாம் அளந்து பார்த்து அறிய முடியாதா என்ற கேள்விக்கு விடையாகச் சில புரோகிராம்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று BitMeter OS ஆகும். இதனை http://codebox. org.uk/bitmeterOs என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது ஓர் ஓப்பன் சோர்ஸ் புரோகிராம். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் ஓ.எஸ். ஆகிய சிஸ்டங்களில் இயங்கும் வகைகளில் கிடைக்கிறது. இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.
இதனைத் தரவிறக்கம் செய்த பின்னர், ஸிப் பைலை விரித்து, பைல்களை ஒரு போல்டரில் வைத்துக் கொள்ளவும். பின்னர் அப்ளிகேஷன் பைலை இயக்கி, இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்தவுடன், நமக்கு அது குறித்து ஒரு செய்தி கிடைக்கும். இதன் பின்னர், நாம் அறியாமலேயே இந்த புரோகிராம், கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கும். நீங்கள் எவ்வளவு டேட்டா அப்லோட் மற்றும் டவுண்லோட் செய்கிறீர்கள் என்ற கணக்கை எடுத்துக் கொண்டிருக்கும். இந்த டேட்டா எங்கிருந்து வந்தது என்ற தகவல் எதனையும் இந்த புரோகிராம் எடுத்துக் கொள்ளாது. எந்த நேரத்திலும், நீங்கள் இதனை இயக்கி, இதன் இணைய தளம் சென்று, உங்கள் இணையப் பயன் பாடு குறித்த தகவல்களைக் காணலாம். http://localhost:2605/ என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த தகவல்களைக் காணலாம். இங்கு கிடைக்கும் இன்டர்பேஸில் காட்டப்படும் மானிட்டரில், அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம், கிராபிகல் மற்றும் டிஜிட்டல் வடிவில் கிடைக்கின்றன. கீழாக வலது புறம் உள்ள கடிகாரத்தில் stopwatch பயன்பாட்டினை மேற்கொள்ளலாம். இதன் மூலம் குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்பட்டது என அறியலாம். History டேப்பில் கிளிக் செய்தால் நீங்கள் பயன் படுத்திய அளவினை மணி, நிமிடம், நொடி முதல் அறியலாம். டவுண்லோட் மற்றும் அப்லோட் பார் கிராப் மூலம் காட்டப்படுகிறது. Summary டேப் ஒரு மாதத்தில் நீங்கள் மேற் கொண்ட மொத்த இணைய அளவினைக் காட்டுகிறது. என்ற Query டேப்பின் மூலம், குறிப்பிட்ட கால அளவிலான டேட்டா எவ்வளவு என்று காணலாம்.
மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளைக் காட்டிலும் ஒரு சிறப்பான வசதி Alerts என்ற டேப்பில் தரப்பட்டுள்ளது. இதில் பல அளவுகளை நாம் வரையறை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட டேட்டா டவுண்லோட் அல்லது அப்லோட் மேற்கொள்ளப்பட்டவுடன் நம்மை எச்சரிக்கும்படி செட் செய்திடலாம். ஒரு மாதத்தில் பயன்பாடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என வரையறை செய்தால், அதற்கேற்ற வகையில் நாம் பயன்பாட்டினைக் காட்டும். Calculator என்ற டேப் மூலம் நாம் தரவிறக்கம் செய்திடும் பைல் இன்னும் எவ்வளவு நேரத்தில் முழுமையாக கம்ப்யூட்டரில் இறங்கும் என அறிந்து கொள்ளலாம். பிராட்பேண்ட் பயன்படுத்தும் அனை வரும் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டிய புரோகிராம் இது.

Related

கணிணிக்குறிப்புக்கள் 463230041282963284

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item