பெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது?--ஹெல்த் ஸ்பெஷல்

பெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது? பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு ...

பெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது?

பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது. அந்த காலத்தில் அண்டா அண்டாவா கூட்டு குடும்பத்தில் பெண்கள் சமைப்பார்கள், எல்லோரும் திடகாத்திரமாக தான் இருந்தார்கள். இந்த காலத்து பெண்கள் கொஞ்சம் நாளிலேயே முடியல மூட்டு வலி , கால் வலி இடுப்பு வலி என்கிறார்களே என்னவா இருக்கும் என்று சமைக்கும் போது தான் நிறைய யோசனை வரும், யோசிச்சேன் என் கருத்து இது. பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள். ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது. ஆனால் இப்போது இருகிற மார்டன் உலகில் நின்று கொண்டு தான் சமைக்கிறோம் அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி, கினற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி என்பது அதிலேயே எல்லாம் கிடைத்து விடுகிறது இந்த காலத்தில் துவைக்க அரைக்க சாமான் கழுவ என்று எல்லாத்துக்கும் மிஷின் வந்து விட்டது. இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் இருந்து எடுத்து காய போட சோம்பேறி தனமாக இருக்கிறது. சமையலறையிலேயே இரண்டு மணி நேரமானலும் நின்று கொண்டு சமைக்கிறோம். சில‌ பேர் தான் கிச்ச‌னில் சேர் போட்டு கொண்டு கொஞ்ச‌ம் நேர‌த்திற்கொருமுறை உட்கார்ந்து கொள்வார்க‌ள். ஆனால் வேலைக்கு போகும் பெண்க‌ள், அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா ச‌மைப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு நேர‌ம் இருக்காது. ரெஸ்ட் எடுத்து வேலை செய்ய‌. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்க‌ளை விட‌ வீட்டில் உள்ள‌ பெண்க‌ளுக்கு தான் வேலை அதிக‌ம். அப்ப‌டியே கிச்ச‌ன் மேடை கிட்ட‌ நின்று கொண்டே காய‌ ந‌ருக்காம‌ல் உட்கார்ந்து எல்லாம் ரெடியாக‌ க‌ட் செய்து வைத்து விட்டு பிற‌கு செய்ய‌லாம்.இஞ்சி பூண்டு நருக்கும் போது அதிக நேரம் எடுக்கும் அதற்கு உட்கார்ந்து பார்க்கலாம். இப‌ப்டி நின்று கொண்டு ச‌மைக்கும் போது சில‌ பேர் தாளிக்கும் போது ர‌ச‌ம் கொதிக்கும் போது, காய் வேகும் போது அப்ப‌டியே ச‌ட்டிய‌ உற்று பார்த்து கொண்டு இருக்காம‌ல் அந்த‌ நேர‌த்தில் சின்ன‌ சின்ன‌ உட‌ற்ப‌யிற்சி செய்து ந‌ம்மை ரிலாக்ஸ் செய்து கொள்ள‌லாம். ஓவ்வொரு உட‌ற்ப‌யிற்சியையும் 5 க‌வுண்ட் அள‌விற்கு செய்ய‌லாம். 1. கைக‌ளுக்கு உட‌ற் ப‌யிற்சி இர‌ண்டு கைக‌ளையும் ப‌க்க‌ வாட்டில் நீட்டி முன்னும் பின்னுமாக‌ சுழ‌ற்ற‌லாம்.இத‌னால் கை தோள்ப‌ட்டை வ‌லி கையில் உள்ள‌ ச‌தை குறைய‌ ந‌ல்ல‌து. 2. தோப்பு க‌ர‌ண‌ம் போடுவ‌து போல் இடுப்பில் கை வைத்து கொண்டு பாதி அள‌விற்கு உட்கார்ந்து எழுந்திரிக்க‌லாம். எல்லாம் ஒரு 5 க‌வுண்ட் அள‌விற்கு செய்ய‌லாம். இது மூட்டு வ‌லிக்கு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சி. 3. இடுப்பில் கை வைத்து கொண்டு நேராக‌ நின்று கொண்டு இட‌து வ‌ல‌து புற‌ங‌க‌ளில் சுழ‌ற்ற‌லாம். இது இடுப்பு வ‌லிக்கு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சி. 4. த‌லையை ம‌ட்டும் மேலும் கீழும், இட‌து வ‌ல‌து புற‌ங்க‌ளில் சுழ‌ற்ற‌லாம், இது க‌ழுத்து நல்ல‌ உட‌ற்ப‌யிற்சி. 5. உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காதவர்கள் அப்ப‌டியே ஒரே மூச்சா வேலை செய்யாம‌ல் இப்ப‌டி சின்ன‌ சின்ன‌ உட‌ற்ப‌யிசிக‌ளை செய்து கொண்டே வீட்டு வேலையை செய்ய‌லாம். 6. துணி துவைக்க கூட அடித்து துவைக்க எதிரில் கல் இருக்கும். துணி துவைக்க‌ வாஷிங் மிஷின் தான் ஆனால் சில‌ டோர் மேட்க‌ளை கையில் தான் துவைக்க‌ வேண்டி வ‌ரும் , அதை ந‌ல்ல‌ சோப்பு த‌ண்ணீரில் ஊற‌வைத்து விட்டு கீழே போட்டு நாலு மிதி மிதிச்சா அழுக்கும் போகும் கால் வ‌லிக்கும் ஒரு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சியாகுது. 7. குழந்தைகளை குளிக்க வைக்க கூட குருக்கு வலிகக் குனிந்து குளிக்க வைக்காமல் கீழே ஒரு சின்ன ஸ்டூல் போட்டு குளிக்கவைக்கலாம். 8.கம்பியுட்டர் முன் அரைமணி நேரத்துக்கு மேல் உட்காராதீர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். சேரில் உட்கார்ந்து கொண்டே செய்யும் உடற்பயிற்சிகளை செய்யலாம். 9. வாகணங்களில் செல்லும் போது கூட (ஓட்டுபவர்களை சொல்லல)ஐந்து நிமிடம் கண்களை மூடி கண்ணுக்கும் ரெஸ்ட் கொடுக்கலாம். 10. இரவு தூங்க போகும் போது, காலை எழுந்திரிக்கும் போது கூட எழுந்ததும் உட்கார்ந்து கொண்டு நேராக இரண்டு காலின் பெருவிரலை தொடவேண்டும் இப்படி செய்வதாலும் முதுகு வலி சரியாகும், (பிறகு முதுகுவலிக்கு ஈசியான உடற்பயிற்சிகளை போடுகிறேன்.) அதற்கு தகுந்த நலல் உணவும் சாப்பிட்டு கொள்வது நல்லது. வேலை பிஸியில் பெண்கள் காலையில் சாப்பிடும் டீ, டிபன் கூட மறந்து விடுகிறார்கள். இப்போது நிறைய பெண்களுக்கு சின்ன வயதிலேயே முதுகுவலி கால் வலி இடுப்புவலி, என்று வந்து விடுகிறது. தகுந்த உடற்பயிற்சியின் மூலம் இது போன்ற வலிகளை தவிர்த்து கொள்ளலாம். முடிந்தவர்கள், நான்கு முறை மாடிப்படி ஏறி இரங்கலாம். ஸ்கிப்பிங் ஆடலாம். நீந்துதல் உடற்பயிற்சி செய்யலாம். நீந்துதல் உடற்பயிற்சி மூலம் அதிகப்படியான முதுகுவலி, இடுப்புவலி ,கால் வலி கூட சரியாகும். மன அழுத்தத்தையும் குறைக்கலாம். முடிந்த அளவு நடைபயிற்சி செய்யுங்கள். தினம் ஒருமணி நேரம் நடப்பதன் மூலம் சர்க்கரை வியாதி பிரஷரை கூட கட்டு படுத்தலாம். டிஸ்கி: இதில் வெளிநாட்டில் சமைக்கும் ஆண்களுக்கும் இந்த டிப்ஸை பின்பற்றலாம்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 6873741275921261073

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item