போட்டோ பைல் மாற்ற---கணிணிக்குறிப்புக்கள்

போட்டோ பைல் மாற்ற டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்துவது பெருகி வரும் இந்நாளில், அவற்றைக் கையாள்வதிலும் பல தேவைகள் அதிகரிக்கின்றன. போட்டோக்...

போட்டோ பைல் மாற்ற
டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்துவது பெருகி வரும் இந்நாளில், அவற்றைக் கையாள்வதிலும் பல தேவைகள் அதிகரிக்கின்றன. போட்டோக்களின் அளவுகளை மாற்றவும், போட்டோ பைல்களின் பார்மட்களை மாற்றவும் விரும்புகிறோம். இவற்றை ஒவ்வொன்றாக படங்களுக்கான அப்ளிகேஷன்களில் திறந்து நம் விருப்பத்திற்கேற்ப மாறுதல் செய்திட நமக்கு அதிக நேரம் எடுக்கிறது. இந்த தேவையை வேகமாக நமக்கு நிறைவேற்றும் புரோகிராம் ஒன்றை அண்மையில் இணையத்தில் பார்க்க நேர்ந்தது. அதன் பெயர் Fast stone Photo Resizer. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, போட்டோக்களின் அளவு மற்றும் பார்மட்களை மிக எளிதாகவும், வேகமாகவும் மாற்றலாம். இது போல பல புரோகிராம்கள் இருந்தாலும், இதன் வேகம் குறிப்பிடத்தக்கதாகவும், செயல் திறன் நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. இதனை http://www.faststone.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் போட்டோக்களில் ஓரளவிற்கு எடிட்டிங் வேலையையும் மேற்கொள்ளலாம்; சுழற்றி வைக்கலாம். மேலே குறிப்பிட்ட தளம் சென்றவுடன், அந்த இணையப் பக்கத்தில், கீழாக Fast Stone Photo Resizer இருப்பதனைக் காணலாம். இதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளவும். டவுண்லோட் செய்தவுடன், டெஸ்க்டாப் திரையில் ஒரு ஐகான் காணப்படும். இதன் மீது கிளிக் செய்து, இந்த அப்ளிகேஷனைத் திறக்கவும். முகப்புப் பக்கத்திலேயே, நீங்கள் மாற்றம் மேற்கொள்ள விரும்பும் போட்டோ பைல்களைத் தேர்ந்தெடுக்க வசதி கிடைக்கும். போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து Add பட்டன் கிளிக் செய்தால் போதும். தேர்ந்தெடுத்து முடித்த பின்னர், அடுத்து இந்த படங்களில் என்ன மாற்றம் செய்திட விரும்புகிறீர்கள் என்று காட்ட வேண்டும். போட்டோக்களின் அளவினை மாற்ற விரும்பினால், Advanced Options பட்டன் கிளிக் செய்து, Resize பாக்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும். இது மேலாக இடது புறம் காணப்படும். இதில் Standard Size என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது நீங்கள் விரும்பும் அளவைக் குறிப்பிடலாம். அளவு குறித்த தேர்வை அமைத்த பின்னர், ஓகே பட்டனில் கிளிக் செய்திடலாம். அடுத்து, எந்த போல்டரில் அளவு மாற்றப்பட்ட படங்கள் சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனைக் காட்டவேண்டும். மீண்டும் Browse கிளிக் செய்தால் Browse For Folder என்ற விண்டோ திறக்கப்படும். இதில் போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும், குறிப்பிட்ட அளவில் மாற்றப்பட்டு சேவ் செய்யப்படும். இதே போல மொத்தமாகவும் பார்மட் மாற்றங்களை மேற்கொள்ளலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராமினைச் சோதனை செய்வதற்காக, 106 போட்டோக்களைத் தேர்ந்தெடுத்து அளவை மாற்றினேன். முதலில் இவற்றிற்கு 250 எம்பி இடம் தேவைப்பட்டது. அளவு மாற்றியவுடன் இவை எடுத்துக் கொண்ட இட அளவு 16.9 எம்.பி. எடுத்துக் கொண்ட நேரம் 9 நிமிடங்களே. இணையத்திற்கு அப்லோட் செய்து மாற்றியிருந்தால், நிச்சயம் அதிக நேரம் ஆகி இருக்கும். அடிக்கடி போட்டோக்களைக் கையாள்பவர்கள் இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தலாம்.

Related

கணிணிக்குறிப்புக்கள் 293816763445407685

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item