மட்டன் தோ பியாஸ்---சமையல் குறிப்புகள்
மட்டன் தோ பியாஸ் வித்தியாசமான ருசியில் சமைத்துச் சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏற்ற சைடு டிஷ், `மட்டன் தோ பியாஸ்.` நெய், தயிர், ஏலக்காய் என ச...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_4376.html
மட்டன் தோ பியாஸ்
வித்தியாசமான ருசியில் சமைத்துச் சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏற்ற சைடு டிஷ், `மட்டன் தோ பியாஸ்.` நெய், தயிர், ஏலக்காய் என சுவையும், மணமும் தரும் பொருட்களை மட்டனுடன் சேர்த்து செய்வதால் ருசிக்கு கியாரண்டி. செய்து சாப்பிடுங்களேன்...
தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 3/4 கப்
வெங்காயம் - 4 நறுக்கியது
பூண்டு - 2 (தட்டியது)
தயிர் - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
மசாலா:
பட்டை - 2 (சிறு துண்டு)
லவங்கம் - 6
மிளகு - 12
ப்ரவுன் ஏலக்காய் - 1
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
அலங்கரிக்க:
கறி மசாலா தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி - 225 கிராம் (உரித்து நறுக்கியது)
வெங்காயம் (நடுத்தரமானது) - 1 (நறுக்கி வறுத்தது)
செய்முறை
* மட்டனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கவும். எலுமிச்சம் பழச்சாறுடன், உப்பு கலந்து மட்டனில் தடவி 30 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
* கடாயில் நெய்யைக் காய வைத்து, காய்ந்ததும் மசாலாவின் முதல் நான்கு பொருட்களை வறுக்கவும்.
* இப்போது மட்டன், வெங்காயம், பூண்டு இவற்றை வறுத்து மீதமுள்ள மசாலாவைச் சேர்க்கவும்.
* மட்டனை வேக வைத்து குறைந்த தீயில் தயிரை சேர்த்து 5 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
* தேவையான நீர் சேர்த்து, மட்டன் நன்கு மசாலாவுடன் சேர்த்து, வேகும் வரை அடுப்பில் வைக்கவும், கறிமசாலா தூள் தூவவும்.
* வெங்காயம், தக்காளி வைத்து அலங்கரித்து சாப்பிடும் முன் சூடு செய்து பரிமாறவும்.
Post a Comment