முட்டை,கிரேவி--சமையல் குறிப்புகள்
முட்டை,கிரேவி தேவையானவை முட்டை - 4 வெங்காயம் - 2 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் தனியாதூள் - 1 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1ஸ்பூன் பட்டை...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_2883.html
முட்டை,கிரேவி
தேவையானவை
முட்டை - 4
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
தனியாதூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1ஸ்பூன்
பட்டை,லவங்கம் ,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - அரைமூடி
கசாகசா - 1 ஸ்பூன்
செய்முறை
எண்ணெய் காய வைத்து பட்டை,லவங்கம் தாளித்து,நறுக்கிய வெங்காயம் தக்காளி ,இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி தண்ணீர் சேர்த்து பச்சை மிளகாய் தேங்காய் , கசாகசா மூன்றும் அரைத்த விழுது சேர்த்து உப்பு,மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.இதில்முட்டையை உடைத்து ஊற்றி இருபுறமும் திருப்பி வேகவிடவும்
Post a Comment