மூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை

மூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை எ ல்ல...

மூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை

ல்லா வகை மாம்பழத்திலும் ஒரு கொட்டை இருக்கும். இந்த மாங் கொட்டையின் உள்ளே உள்ள பருப்பு சிறந்த ஒரு மருந்துப்பொருள். மாம்பழம் தின்றபின் கிடைக்கக்கூடிய மிகுதிக் கொட்டைகளை எல்லாம் வெயிலில் போட்டு நன்றாகக் காயவிட வேண்டும். எல்லாக் கொட்டைகளும் நன்றாகக் காய்ந்தபின் அவைகளை உடைத்து உள்ளே இருக்கும் பருப்புகளைக் கவனித்து சொத்தை, பூச்சி இல்லாதவைகளாக எடுத்து, அந்தப் பருப்பின் மேலுள்ள நீல நிறமான தோலையும் நீக்கிவிட்டு, சுத்தமா மாம்பருப்பை மட்டும் எடுத்து அதைப் பாக்கு அளவு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொண்டு, ஒரு இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய்விட்டு, நெய் காய்ந்தபின் அதில் அந்தப் பருப்பைப் போட்டு வறுக்க வேண்டும். பருப்பு பொன்னிறமாகச் சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு அதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவிடவேண்டும். நன்றாக ஆறியபின் அம்மியிலோ மிக்ஸியிலோ போட்டு, அதைப் பட்டுப் போல தூள் செய்து எடுத்து, அதை ஒரு வாயகன்ற சுத்தமான பாட்டிலில் போட்டு நன்றாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இநத்ப் பாட்டிலின் மேல் ‘மாங்கொட்டை சூரணம்’ என்று எழுதி ஒட்டிவிடவேண்டும். இது முற்கால பெரியவர்கள் கையாண்ட ஒரு முறை. நல்ல பலன் தரக்கூடியது. இது உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய கைகண்ட மருந்து. வீட்டில் ஏதாவது உஷ்ண சம்பந்தமான பதார்த்தங்களைச் செய்து சாப்பிட்டு விட்டால், அன்றைய சாப்பாட்டுடன் ஒரு டீ ஸ்பூன் அளவு இந்த மாங்கொட்டைச் சூரணத்தையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டால், உஷ்ண பதார்த்தம் ஒன்றும் செய்யாது. அதாவது கோழி, பப்பாளிப்பழம், பலாப்பழம், மாம்பழம் இன்னும் பலவிதமான உஷ்ண பதார்த்தங்களைச் சாப்பிட்ட அன்று மட்டும் இதைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு அதாவது மூன்று வயதிற்கு மேல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு அரைத் தேக்கரண்டி அளவு கொடுத்தால் போதுமானது. மூல வியாதியால் கஷ்டப்படுகிறவர்கள் இந்த மாங்கொட்டை சூரணத்தை ஐந்து நாள் காலை மாலை பாலில் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலக்கடுப்பு, இரத்தம் விழுதல், ஆசனக் கடுப்பு குணமாகும். ஐந்து நாள் விட்டு மறுபடி ஐந்து நாள் தொடர்ந்து மூலம் குணமாகும் வரை சாப்பிடலாம். இந்த மருந்தை சாப்பிடும்பொழுது அதிக காரம், அதிகப் புளி இவற்றை நீக்கிவிட்டு சாப்பிடவும். அத்துடன் அரைக் கீரை, முளைக்கீரை, பருப்புக் கீரை இவைகளில் ஒன்றைத் தாராளமாக சாப்பிட்டு வந்தால் மூலநோய் பூரணமாகக் குணமாகும். மூலச்சூடு, வயிற்றுப் போக்கு, கிராணி, வயிற்றுக் கிருமிகள் ஆகியவை குணமாக மாங்கொட்டை சூரணத்தில் ஒரு அளவு எடுத்துக்கொண்டு அந்த அளவு ஓமத் தூளும் ஓமத்தூள் அளவு சுக்குத்தூளும், சுக்குத்தூள் அளவு கசகசாத் தூளும் சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு வாயகன்ற கண்ணாடி சீசாவில் போட்டு நன்றாக மூடிவிட்டு அதன் மேல் ‘மாங்கொட்டை கூட்டுச் சூரணம்’ என்று எழுதி ஒட்டிவிட வேண்டும். மேலே சொன்ன நோய்கள் குணமாக ‘மாங்கொட்டை கூட்டு சூரண’த்தில் ஒரு பாக்களவு எடுத்து அத்துடன் பசு நெய் சேர்த்துக் கலக்கிச் சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு அரைப் பங்கு போதுமானது.


Related

மருத்துவ டிப்ஸ் 6617788269206660594

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item