முருங்கைக்காய் கூட்டு தேவையானவை: சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2...
முருங்கைக்காய் கூட்டு
தேவையானவை:
சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப்,
கடலைப்பருப்பு - கால் கப்,
பாசிப்பருப்பு - கால் கப்,
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
காய்ந்த மிளகாய் - 2,
சீரகம் - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பிறகு, தேங்காய்துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும். கடைசியாக வெந்த பருப்புகளை அதில் கொட்டி, தாளித்து இறக்கவும்.
Post a Comment