தலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Briyani--சமையல் குறிப்புகள்

தலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Briyani பொதுவாக அனைத்து வகை பிரியாணியிலும் வெங்காயம் + தக்காளியினை வெட்டி தான் சேர்ப்போம். ஆனால் இந்த ப...

தலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Briyani பொதுவாக அனைத்து வகை பிரியாணியிலும் வெங்காயம் + தக்காளியினை வெட்டி தான் சேர்ப்போம். ஆனால் இந்த பிரியாணியில் வெங்காயம் + தக்காளி + புதினா , கொத்தமல்லி என அனைத்தையுமே அரைத்து தான் சேர்ப்போம். சிக்கன் / மட்டனை குறைந்தது 2 - 3 மணி நேரம் மசாலாவில் ஊறவைத்து செய்வதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். இந்த பிரியாணியினை சீரக சம்பா அரிசியில் செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும். மிதமான தீயில் ,ஒவ்வொரு பொருள் சேர்த்த பிறகு நன்றாக வதக்கி செய்தால் கண்டிப்பாக இந்த பிரியாணி அருமையாக இருக்கும். நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி அனிஸ்... சமைக்க தேவைப்படும் நேரம் : 30 - 40 நிமிடங்கள் தேவையான பொருட்கள் : · சிக்கன் - 1/2 கிலோ · பஸ்மதி அரிசி - 3 கப் · சீரகம் தூள் - 1 மேஜை கரண்டி · தேங்காய் பால் - 2 கப் · உப்பு - தேவையான அளவு தனி தனியாக அரைத்து கொள்ள : · வெங்காயம் - 1 பெரியது · தக்காளி - 2 பெரியது · புதினா + கொத்தமல்லி - 1 கப் சுத்தம் செய்த இலைகள் இஞ்சி பூண்டு விழுது : (சுமார் 3 மேஜை கரண்டி) · இஞ்சி - 1 துண்டு · பூண்டு - 6 பல் · பட்டை - 1 · கிராம்பு - 2 · ஏலக்காய் - 1 சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க : · அரைத்த இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜை கரண்டி · மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி · தனியா தூள் - 1 தே.கரண்டி · மிளகாய் தூள் - 1 தே.கரண்டி · தயிர் - 1 கப் · எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி · உப்பு - தேவையான அளவு முதலில் தாளிக்க : · எண்ணெய் + நெய் - சிறிதளவு · பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பிரியாணி இலை · பச்சை மிளகாய் - 4 செய்முறை : · சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதினை அரைத்து கொள்ளவும். சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும். · சிக்கனை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைத்தால் நன்றாக இருக்கும். ( சுமார் 2 - 3 மணி நேரம் ஊறவைக்கலாம்.) · வெங்காயம் + தக்காளி + புதினா கொத்தமல்லியினை தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். · பாத்திரத்தில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கொள்ளவும். · இத்துடன் வெங்காயம் விழுதினை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும். · வெங்காயம் வதங்கியவுடன் அத்துடன் மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கிய பிறகு புதினா, கொத்தமல்லி விழுதினை சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வதக்கவும். · புதினா, கொத்தமல்லி நன்றாக வதங்கி வாசனை மற்றும் கலர் மாறிய பிறகு, சீரக தூள் சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும். · இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து 3 - 4 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். · அதன் பிறகு, அரைத்து வைத்துள்ள தக்காளியினை சேர்த்த் தட்டு போட்டு மூடி நன்றாக வேகவிடவும். · பாஸ்மதி அரிசியினை கழுவி சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். (அதற்கு மேல் ஊறவைக்க தேவையில்லை. ) · சிக்கன் வெந்த , எண்ணெய் பிரியும் பொழுது ஊறவைத்துள்ள அரிசியினை சேர்த்து கிளறிவிட்டு தட்டு போட்டு மூடி 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும். (கவனிக்க : தண்ணீர் சேர்க்கவில்லை. சிக்கன் க்ரேவியிலே அரிசியினை சேர்க்கின்றோம்.) · 2 - 3 நிமிடங்கள் கழித்து தேங்காய் பால் + 3 - 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு , தட்டி போடு மூடி வேகவிடவும். (பிரஸர் குக்கரில் செய்வது என்றால், 1 விசில் வரும் வரை வேகவிட்டால் போதும்.) · சுவையான பிரியாணி ரெடி. இதனை க்ரேவி, தயிர் பச்சடி, முட்டையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். கவனிக்க : அனைத்து பொருட்களை வதக்கும் பொழுதும் மிதமான தீயில் (Medium Flame) வைத்தே சமைக்க வேண்டும். கொடுத்துள்ள அளவு சரியாக இருக்கும். சிக்கனில் செய்வதினை விட மட்டனில் செய்தால் சுவையாக இருக்கும். அரிசியினை நிறைய நேரம் ஊறவைத்தால் சிக்கனுடன் சேர்த்து வறுக்கும் பொழுது உடைந்துவிடும் என்பதால் 10 நிமிடங்கள் ஊறினால் போதும்.

Related

சமையல் குறிப்புகள் 580312052071426694

Post a Comment

4 comments

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

நானும் தலப்பாகட்டு பிரியாணி செய்யும் போது தக்காளி வெங்காயம் அரைத்து செய்வேன். ஆனால் கொத்தமல்லி புதினா அப்படியே....

குறிப்பு அருமையா இருக்கு

வாழ்த்துக்கள்

வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துடலாமே :-)

MohamedAli said...

அன்புச்சகோதரி ஆமினா அவர்களுக்கு மிக்க நன்றிகள் பல!

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் ......... அனைவருக்கும் இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்
தோழரே .....நான் சென்னைவாசி இதுவரை தலப்பா கட்டு பிரியாணி சாப்பிட்டதில்லை .உங்கள் பதிவை கண்டு வீட்டிலையே சமைத்து பார்க்க
வேண்டும் ....செய்முறை விளக்க குறிப்புகள் பகிறுந்தமைக்கு மிக்க நன்றி ......
வஸ்ஸலாம் ...........

MohamedAli said...

அன்பிற்கினிய நண்பர் Nasar அவர்களுக்கு எனது பெட்டகம் வலைப்பூ கண்ணுற்று தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு நன்றிகள் பல! தொடர்ந்து அனைத்து பக்கங்களையும் சுவைத்து அவ்வப்போது கருத்துக்கள் தெரிவிக்க விழைகின்றேன். அன்புடன் A.S. முஹம்மது அலி

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item