கீரை வடை -- சமையல் குறிப்புகள்
கீரை வடை தேவையானவை: உளுத்தம்பருப்பு - கால் கிலோ, பொடியாக நறுக்கிய கீரை - ஒரு கப் (அரைக்கீரை முளைக்கீரை, சிறுகீரை இதில் ஏதேனும் ஒன்று), பொடி...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_9154.html
கீரை வடை
தேவையானவை:
உளுத்தம்பருப்பு - கால் கிலோ,
பொடியாக நறுக்கிய கீரை - ஒரு கப் (அரைக்கீரை முளைக்கீரை, சிறுகீரை இதில் ஏதேனும் ஒன்று),
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்),
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
உளுத்தம்பருப்பை ஊற வைத்து அரைக்கவும். அதனுடன் நறுக்கிய கீரை, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். பின் வடை சுடுவது போல் காய்ந்த எண்ணெயில் போட்டு, வெந்தவுடன் திருப்பிப் போட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும்.
Post a Comment