தக்காளி பருப்பு கூட்டு ..சமையல் குறிப்புகள்
தக்காளி பருப்பு கூட்டு பெங்களூர் தக்காளி - 4 சின்ன வெங்காயம் - 100 பாசிப்பருப்பு - 50 கிராம் பச்சைமிளகாய் - 3 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_8806.html
தக்காளி பருப்பு கூட்டு
பெங்களூர் தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 100
பாசிப்பருப்பு - 50 கிராம்
பச்சைமிளகாய் - 3
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மல்லி தழை - சிறிது
தாளிக்க:
எண்ணெய் - 5 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கவும்.
பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தண்ணீர் சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றி வெந்ததும் வேக வைத்த பருப்பை போட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்கவும் மல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான தக்காளி பருப்பு கூட்டு ரெடி
இது சப்பாத்தி, இட்லி, தோசைக்கு நல்ல காம்பினேஷன் சிறிது நெய் விட்டு சாதத்துக்கும் சாப்பிடலாம்
Post a Comment