முட்டை பக்கோடா--சமையல் குறிப்புகள்
முட்டை பக்கோடா தேவையான பொருட்கள் வேக வைத்த முட்டை - 4 கடலை மாவு - 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - அர...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_6683.html
முட்டை பக்கோடா
தேவையான பொருட்கள்
வேக வைத்த முட்டை - 4
கடலை மாவு - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
கொத்துமல்லி இலை - சிறிதளவு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - முக்கால் கப்
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. உப்பும் மிளகாய் பொடியும் கடலை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
2. தண்ணீரை கொஞ்ச கொஞ்சமாக கலந்து கலவையை கரைத்துக் கொள்ளவும்.
3. நறுக்கிய கொத்துமல்லி வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கலக்கவும்.
4. வேக வைத்த முட்டையை எட்டாக வெட்டிக் கொள்ளவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
6. முட்டையை எடுத்து கலவையில் நனைத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
7. முட்டை பக்கோடா தயார்.
Post a Comment