மட்டன் கீமா புலாவ்--சமையல் குறிப்புகள்
மட்டன் கீமா புலாவ் தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 2 கப் கொத்துக்கறி - 300 கிராம் தயிர் - 2 கப் வெங்காயம் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 டே...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_5450.html
மட்டன் கீமா புலாவ்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 2 கப்
கொத்துக்கறி - 300 கிராம்
தயிர் - 2 கப்
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் - 6
ஏலக்காய் - 8
மிளகு - 1/2 டீஸ்பூன்
பாதாம் - 1/4 கப்
பிஸ்தா - 1/4 கப்
காய்ந்த திராட்சை - 1/2 கப்
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
* ஒரு பாத்திரத்தில் 5 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், இஞ்சி-பூண்டு விழுது, பாதாம் பிஸ்தா, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கீமாவைச் சேர்த்து வதக்கவும்.
* இப்போது போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கறியை வேகவிடவும்.
* பிரஷர் போனதும் திறந்து பாசுமதி அரிசியைச் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.
* மட்டனும், அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவைப் பரிமாறவும்.
---------------------------------------------------------------------------------------
Post a Comment