ஸுன்னத் வல் ஜமாஅத் என்பவர்கள் யார்?--அமுத மொழிகள்

ஸுன்னத் வல் ஜமாஅத் என்பவர்கள் யார்? 'இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிந்தார்கள். எனக்குப் பின் என்னுடைய உம்மத்துகள் எழுபத்தி ...

ஸுன்னத் வல் ஜமாஅத் என்பவர்கள் யார்? 'இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிந்தார்கள். எனக்குப் பின் என்னுடைய உம்மத்துகள் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள். அதில் ஒரு கூட்டத்தார் மாத்திரம் சுவர்க்கவாசிகள். மற்றைய எழுபத்திரண்டு கூட்டத்தினரும் வழி தவறியவர்களாவார்கள்.' என நபிகள் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அருளிய போது, அண்மையில் இருந்த சஹாபாக்கள், ' யா ரசூலல்லாஹ் !! அந்த ஒரு கூட்டத்தினர் யார்? என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள்.' எனக் கேட்க, நபிகள் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், ' நானும் என்னுடைய சஹாபாக்களும் நடக்கின்ற வழியை பின்பற்றி நடப்பவர்கள்தான் அந்தக் கூட்டத்தினர்' எனக் கூறினார்கள். இந்தக் கூட்டத்தினரையே நாம் ஸுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரோடு அழைக்கின்றோம். இவர்களின் உறுதியான கொள்கைகளாவன: நபிகள் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் சொல், செயல், பழக்கவழக்கங்களை பின்பற்றியும், அவர்கள் சமூகத்தில் தங்களது அதிகமான காலத்தை கழித்த அவர்களின் தோழர்களான நான்கு கலிபாக்கள், சுவனபதியை கொண்டு நன்மாராயம் பெற்ற அஷ்ரத்துல் முபஷ்ஷிரீன்கள், சஹாபாக்கள், தீனுக்காக உயிர் தியாகம் செய்த ஷுஹதாக்கள், இன்னும் பன்னிரண்டு இமாம்கள் அவர்கள்: இமாம் அலி, இமாம் ஹசன், இமாம் ஹுசைன், இமாம் ஸெய்னுல் ஆப்தீன், இமாம் முஹம்மத் பாகிர், இமாம் ஜஃபர் ஸாதிக், இமாம் மூஸல் காஸிம், இமாம் மூஸர் ரிளா , இமாம் ஜவாதுத்தகிய்யி, இமாம் நஸியி, இமாம் அஸ்கரியி, இமாம் மஹ்தி (ரலியல்லாஹு அன்ஹுமா) இந்த பன்னிருவரை மட்டும் ஷியாக்கள் கொண்டாடுகின்றனர். மத்ஹபுக்குரிய இமாம்கள் அவர்கள்: இமாம் ஹனபி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் ஷாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் ஹன்பலி ரஹ்மதுல்லாஹி அலைஹி. இமாம் மாலிகி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இமாம் ஷாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மாணவராக இருந்தார்கள். அது போலவே இமாம் ஹன்பலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் ஷாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கல்வி பயின்று இருக்கிறார்கள். 'அஇம்மத்துல் முஜ்தஹதீன்' எனப்படுவோர் நான்கு இமாம்களும், அவர்களுக்கு அடுத்து வந்த சுயமாகச் சட்டம் இயற்றும் மார்க்க நிபுணர்களான கல்விக் கடல், இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி மற்றும் இமாம்களை போன்ற மேதைகள், அடுத்து விலாயத் பெற்ற கெளது, குதுபு, வலிமார்கள் இவர்கள் போன்று பெண் வலிமார்கள், இன்னும் இறையருள் பெற்ற ஞானவான்கள், உலமாக்கள், ஸித்தீக்கீன்கள், ஸாலிஹீன்கள், ஆரிபுகள், முதலானோர்ர்களும், அவர்கள் பின்பற்றிய வழியை பின்பற்றியும், அவர்களின் போதனைகளுக்கு உட்பட்டு, குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் ஆகிய இந்த நான்கு நியமனங்களை ஏற்றும் நேர்மையாக நடப்பவர்களே ஸுன்னத் வல் ஜமாஅத் எனப்படுபவர்கள். அல்லாஹ் நம்மை மகத்துவமிக்க இந்த சத்தியப் பாதையான ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலேயே இறுதி வரை இருக்கும் நஸீபை தந்தருவானாக! ஆமீன்!!

Related

அமுத மொழிகள் 3546336804913145927

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item