கத்திரிக்காய் கொத்சு--சமையல் குறிப்புகள்
தென்மாவட்ட கொத்சு இந்த கொத்சு தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்பு. தேவையானவை: கத்திரிக்காய் 6 சின்ன வெங்காயம் 10 புளி ஒரு எலுமிச்சை அளவு பெருங்...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_39.html
தென்மாவட்ட கொத்சு
இந்த கொத்சு தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்பு.
தேவையானவை:
கத்திரிக்காய் 6
சின்ன வெங்காயம் 10
புளி ஒரு எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,நல்லெண்ணைய் தேவையானது
---------
பொடி செய்ய:
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் 6
தனியா 1 டேபிள்ஸ்பூன்
-----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
----
செய்முறை:
கத்திரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து ஆறியபின் விழுதுபோல அரைத்துக்கொள்ளவேண்டும். அதே நெய்யில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
----
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணைய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து தேவையான உப்புடன் கொதிக்கவைக்கவேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்த கத்திரி விழுது,பொன்னிறமாக வதக்கிய வெங்காயம்,அரைத்த பொடி மூன்றையும் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தபின் நல்லெண்ணையில் பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை பொறித்து சேர்க்கவேண்டும்.
Post a Comment