சுக்கு காபி---சமையல் குறிப்புகள்
சுக்கு காபி தேவையான பொருட்கள் சுக்கு – 1 துண்டு மல்லி – 1 டீஸ்பூன் ஜாதிக்காய் – 1 சிறு துண்டு பனைவெல்லம் – 3 டீஸ்பூன் ஏலக்காய்ப்பொடி – 2...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_1788.html
சுக்கு காபி
தேவையான பொருட்கள்
சுக்கு – 1 துண்டு மல்லி – 1 டீஸ்பூன் ஜாதிக்காய் – 1 சிறு துண்டு பனைவெல்லம் – 3 டீஸ்பூன் ஏலக்காய்ப்பொடி – 2 சிட்டிகை
செய்முறை
சுக்கு, மல்லி, ஜாதிக்காய் மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். அப்பொடியை கொதிக்கும் நீரில் போட்டு மூடி சிறிது நேரம் வைக்கவும். பின் அதனை வடிகட்டி அதனுடன் பனை வெல்லம், ஏலக்காய்ப் பொடி சேர்த்து குளிர்காலமாக இருந்தால் சூடாக அருந்தவும். வெயில் காலமாக இருந்தால் குளிர்ச்சியாக அருந்தவும்.
சுக்கு காபியில் மல்லி உள்ளதால் இது உடல் சூட்டைத் தணிக்க வல்லது. சுக்கு ஜீரண சக்தியை தூண்ட வல்லது.
Post a Comment