கத்திரிக்காய் திரக்கல்---வாசகிகள் கைமணம்
கத்திரிக்காய் திரக்கல் தேவையானவை: கத்திரிக்காய் - 3, உருளைக்கிழங்கு, தக்காளி - தலா 2, வெங்காயம் - 1, காய்ந்த மிளகாய் - 10, கடுகு - அரை டீஸ...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_9504.html
கத்திரிக்காய் திரக்கல்
தேவையானவை: கத்திரிக்காய் - 3, உருளைக்கிழங்கு, தக்காளி - தலா 2, வெங்காயம் - 1, காய்ந்த மிளகாய் - 10, கடுகு - அரை டீஸ்பூன், சோம்பு, சீரகம், கசகசா - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லாக் காய்கறிகளையும் பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, கசகசா, தேங்காய்த்துருவல் இவற்றை விழுதாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும். எல்லாம் நன்றாக வதங்கியதும், அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். 2 நிமிடம் கழித்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து இறக்கவும்.
கத்திரிக்காய் திரக்கல்: கத்திரிக்காயை வதக்காமல், சுட்டு, மசித்துச் சேர்த்தால்.. ருசி கூடுதலாக இருக்கும்.
Post a Comment