இந்திய இளைஞனே ! பெட்டகம் சிந்தனை

இந்திய இளைஞனே ! கடுகி வரும் உலக மயம் தொழிலை விற்றுக் காசாக்கும் தனிமயம் பெட்டிக்குள்ளே அடங்குகின்ற கணினி மயம் உலக வங்கி அடுக்குகளில் வட்ட...

இந்திய இளைஞனே ! கடுகி வரும் உலக மயம் தொழிலை விற்றுக் காசாக்கும் தனிமயம் பெட்டிக்குள்ளே அடங்குகின்ற கணினி மயம் உலக வங்கி அடுக்குகளில் வட்டிமயம் பருத்திக் காட்டில் நடமலட்டு விதை மயம் சந்தை வேற்று நாட்டாரின் பொருள் மயம் நூறு கோடி மடங்குகளில் கடன் வாங்கி நாடு கடன் மயம் வான் மையம் கொண்டால் மழை கடல் மையம் கொண்டால் புயல் பூமி மையம் கொண்டால் பூகம்பம் நீ மையம் கொண்டால்...? சுதந்திரமாய் வாழலாம் - இனி நம்மைப் பிடித்துப் போக தூண்டில் வரை எதுவும் வராது. உற்சாகமாய் நீந்துகின்றன. தொட்டியில் அடைப்பட்ட மீன்கள்! இன்று அந்த மீனின் நிலையில் தான் நீ! உனக்கு மட்டும் தான் கோபம் வரும் என்பதில்லை. காற்றுக்கு கோபம் வந்தால் சூறாவளி. கடலுக்கு கோபம் வந்தால் கொந்தளிப்பு. பூமிக்கு கோபம் வந்தால் பூகம்பம். வானுக்கு கோபம் வந்தால் பேய்மழை. நீ உதவி கேட்டால் ஒருவரும் முன்வரமாட்டார்கள். நீ பசியோடு இருந்தால் கவளம் சோறும் கிடைக்காது. நீ நோயுற்றால் விலகிவிடும் சுற்றம். நீ உயிர் விட்டுவிட்டாலோ ஊர் கூடி உன்னை விசாரிக்கும் "இது தாண்டா உலகம்" வாழ்க்கை என்பது விளையாட்டா ஆடிச் செல்ல? நிழல் மரமா படுத்துத் தூங்கிப் போக? போர்க்களமா அதைப் போரிடுவதற்கு? காகிதமா அதைக் கிழித்துப் போட ? திரைப் படமா கண்டு பொழுதைப் போக்க...? வெற்றி உன்னிடம் இருந்தால் முயற்சியே முதலீடு கல்வி சிறக்க ஆசிரியரின் ஊக்குவிப்பே முதலீடு. உலகம் புதிதாய் பிறக்க இளைஞர்களே முதலீடு வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாற முன்னோர்களின் வார்த்தைகளே முதலீடு. இலட்சத்தில் ஒருவனாய் இராதே! இலட்சியப் பிறவியாய் இரு! முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழிவிடும். தவறி விழுந்தாலும் விதையாய் விழு! விருட்சமாய் எழலாம். தோல்வியைக் கண்டு சோம்பல் கொள்ளாதே! கீழே விழுவது மீண்டும் எழத்தான்! பயன்படுத்தாத வீட்டை பயன்படுத்திக் கொள்ளும் ஓட்டடை! என்பது நினைவிருக்கட்டும். வாழ்க்கை என்பது பேருந்து பயணமல்ல! அதன் படிக்கட்டுப் பயணம்! நகரப் பேருந்தில் நங்கையர் இருக்கைப் பயணம் போன்றது! எந்த நேரமும் பறி போகலாம்! மழை இல்லாத போது குடையும் ஒரு சுமைதான். மணம் இல்லாத போது பூவும் ஒரு சுமைதான். சுவாசம் இல்லாத போது காற்றும் ஒரு சுமைதான். அன்பு இல்லாத போது உறவுகளும் ஒரு சுமைதான். கனவுகள் இல்லாத போது தூக்கமும் ஒரு சுமைதான். கல்வி இல்லாத போது வாழ்க்கையும் ஒரு சுமைதான். அரியணை மயக்கத்தில் அரசியல்வாதிகள். திரை மயக்கத்தில் இளைஞர்கள். பட்டிமன்ற விவாதங்களில் அறிஞர்கள். பசி மயக்கத்தில் நம் மக்கள்! நடிகைகள் குலுங்குவதை நீ ரசிக்கிறாய்! லாட்டரி பம்பர் குலுக்கலை நீ விரும்புகிறாய்! பூமி மட்டும் குலுக்கினால் ஏன் மிரளுகிறாய்! நடிகைகளின் தொப்புள் குழியை ரசிக்கிறாய்! ஆனால் கப்ர் குழியைக் கண்டு ஏன் நடுங்குகிறாய்? நீ ஒய்யாரமாய் நடக்கின்றாய். ஒரு நிமிடம் சிந்தித்தாயா? உன் நிமிர்ந்த நடைக்கு உரம் போட்டது யார் என்று? உயிர் கொடுத்தவருக்கு உயிர் பயம் கேடு கெட்ட மகனால். குழந்தைகள் சிறிய வயதில் பெற்றோருக்குத் தலைவலி அவர்கள் பெரியதான போது பெற்றோருக்கு நெஞ்சு வலி. கப்பல் செல்ல கடல் கேட்பதில்லை தட்சணை வண்டுகள் அமர மலர் கேட்பதில்லை தட்சணை பறவைகள் தங்க இலைகள் கேட்பதில்லை தட்சணை நட்சத்திரங்கள் தவழ வானம் கேட்பதில்லை தட்சணை விலங்குகள் தங்க காடுகள் கேட்பதில்லை தட்சணை தனக்காக வாழ வரும் பெண்ணிடம் மட்டும் நீ கேட்கிறாயே வரதட்சணை ? வாழ்ந்து பார் வாழ்க்கை ஒரு தேடல் முயன்று பார் முன்னேற்றம் உன் கைப்பிடி துணிந்து பார் வீரம் என்பது உன் விரல் நுனியளவு சிந்தித்துப் பார் சவால்கள் என்பது உன் சகோதரன் ஆராய்ந்து பார் அறிவியல் என்பது உனக்கு அடிமை ஏறிப்பார் சிறுத்துப் போகும் சிகரங்கள். அட்டாலும் பாலாய், அரைத்தாலும் சந்தனமாய் சுட்டாலும் சங்காய், கெட்டாலும் பிறருக்கு ஊறு செய்யாமல் வாழ்ந்தால் மட்டற்ற இன்பம் மல்கும் உன்வாழ்வில்...! இரக்கமில்லா மனிதனுக்கு இதயமே சுமைதான்! பறக்கத் தெரியாத பறவைக்கு சிறகுகளே சுமைதான்! மணக்கத் தெரியாத மலர்களுக்கு மகரந்தமே சுமைதான்! உதவத் தெரியாத நண்பருக்கு நட்புகூட சுமைதான்!

Related

பெட்டகம் சிந்தனை 3256921944935160829

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item