மஷ்ரூம் வடா--சமையல் குறிப்பு
மஷ்ரூம் வடா தேவையான பொருட்கள்: மஷ்ரூம் - 200 கிராம், நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, நறுக்கிய பச்சை மிளகாய் - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், நறுக...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_8209.html
மஷ்ரூம் வடா
தேவையான பொருட்கள்: மஷ்ரூம் - 200 கிராம், நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, நறுக்கிய பச்சை மிளகாய் - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மைதா மாவு - 40 கிராம், கார்ன் ஃபளார் (சோள மாவு) - 20 கிராம், பிரெட் தூள்- 125 கிராம், வறுத்து தோள் நீக்கப்பட்ட வேர்கடலை - 50 கிராம், முந்திரிப்பருப்பு - 25 கிராம், வறுத்த கடலைப்பருப்பு - 75 கிராம், சிவப்பு மிளகாய் - 4, ரிஃபைண்டு ஆயில், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மஷ்ரூமை பூவாக நறுக்கி, தண்ணீர் விட்டு அலசி, துணியில் வைத்து பிழிந்து தனியே வைக்கவும். மைதா மாவு, சோள மாவு இரண்டையும் சற்று தாராளமாக தண்ணீர் விட்டுக் கலந்து தனியாக வைக்கவும். வேர்க்கடலை, முந்திரி, கடலைப்பருப்பு மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றை மிதமாக வறுத்து தூளாக்கி தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மஷ்ரூம், வறுத்துப் பொடித்த தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றையும் அதில் சேர்த்து மேலும் வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கவும். சூடு ஆறியதும் அதை மஷ்ரூம் வடிவில் அல்லது உங்களுக்குப் பிடித்த வடிவில் உருண்டை பிடித்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை மைதா - சோள மாவு கலவையில் நனைத்து எடுத்து, பிறகு பிரெட் தூளில் லேசாக புரட்டி எடுக்கவும். பிறகு, கொதிக்கும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தேங்காய் சட்னியோடு இதை சாப்பிட்டால், நாக்கு தானாகவே தாளம்போடும்.
Post a Comment