கோதுமை ரவை அடை--சமையல் குறிப்பு
கோதுமை ரவை அடை தேவையானவை: கோதுமை ரவை - 250 கிராம், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம். காய்ந்த ம...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_7874.html
கோதுமை ரவை அடை
தேவையானவை: கோதுமை ரவை - 250 கிராம், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம். காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை ரவையை அரை மணி நேரம் ஊற வைக்கவும். நான்கு வகை பருப்புகளையும் தனித்தனியாக தனியாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்டி பருப்புகளை ஒன்றாகக் கலந்து... கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் ஊற வைத்த கோதுமை ரவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு 'மொறுமொறு’வென சுட்டு எடுக்கவும்.
கோதுமை ரவை அடை: வாயுத் தொல்லை இருப்பவர்கள், பருப்பின் அளவைக் குறைத்து காய்கறிகள் சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்... எளிதில் ஜீரணம் ஆகும்.
Post a Comment