வெஜிடபிள் சால்ட் அண்ட் பெப்பர்--சமையல் குறிப்பு
வெஜிடபிள் சால்ட் அண்ட் பெப்பர் தேவையான பொருட்கள்: புரூக்கோலி - 80 கிராம், பேபி கார்ன் - 70 கிராம், பட்டன் மஷ்ரூம் - 60 கிராம், நறுக்கிய ஸ்...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_6692.html
வெஜிடபிள் சால்ட் அண்ட் பெப்பர்
தேவையான பொருட்கள்: புரூக்கோலி - 80 கிராம், பேபி கார்ன் - 70 கிராம், பட்டன் மஷ்ரூம் - 60 கிராம், நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய செல்லரி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 20 கிராம், பொடியாக நறுக்கிய குடமிளகாய் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு, அஜினமோட்டோ, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், செல்லரி, குட மிளகாய், கொத்தமல்லி, ஸ்ப்ரிங் ஆனியன் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக் கவும். பிறகு, புரூக்கோலி, பேபி கார்ன், இரண்டாக நறுக்கிய பட்டன் மஷ்ரூம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். கடைசி யாக உப்பு, மிளகுத்தூள், அஜினமோட்டோ மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.
இந்த வெஜிடபிள் சால்ட் அண்ட் பெப்பர்... உடம்புக்கு சக்தி கொடுக்கும்!
--------------------------------------------------------------------------
Post a Comment