வாழைத்தண்டு சட்னி--சமையல் குறிப்புகள்
வாழைத்தண்டு சட்னி தேவையான அளவு வாழைத்தண்டை பொடிப் பொடியாக நறுக்கவும். பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் ப...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_4935.html
வாழைத்தண்டு சட்னி
தேவையான அளவு வாழைத்தண்டை பொடிப் பொடியாக நறுக்கவும். பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை தனியே கலக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கவும். பிறகு, பொட்டுக்கடலை மாவு கலவையை சேர்த்து, மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்தால்... சுவையான, மணமான வாழைத்தண்டு சட்னி ரெடி!
கமென்ட்: பொட்டுக்கடலை மாவின் அளவைக் குறைத்து, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்தால்... நல்ல ருசி கிடைப்பதோடு, சட்னியில் கொழகொழப்புத் தன்மை குறைவாக இருக்கும்!
Post a Comment