உயர்ந்த நான்கு விஷயங்கள்! அமுத மொழிகள்,

உயர்ந்த நான்கு விஷயங்கள்! அண்ணலார் நாயகம் அவர்கள் உருக்கமாக ஒரு பிரார்த்தனையைச் செய்கிறார்கள். ""யா அல்லாஹ்! பயன்படாத கல்வியை வி...

உயர்ந்த நான்கு விஷயங்கள்! அண்ணலார் நாயகம் அவர்கள் உருக்கமாக ஒரு பிரார்த்தனையைச் செய்கிறார்கள். ""யா அல்லாஹ்! பயன்படாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத "துஆ'வை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்,'' என்கிறார்கள். எவ்வளவு அரிய பிரார்த்தனை பாருங்கள். இறைவனிடம் அவர்கள் பொன்னோ, பொருளோ கேட்கவில்லை. பட்டப்படிப்பு படித்தும் உழைக்காமல் இருந்து என்ன பயன்? தாய், மனைவி, மக்களைக் காப்பாற்றத்தானே படிப்பு! "குடிக்காதே' என பள்ளியிலும், மார்க்க ரீதியாகவும் கற்றுத் தந்திருந்தும், சம்பாதிப்பதையெல்லாம் குடித்து அழிக்கும் பட்டதாரியால் யாருக்கு என்ன லாபம்? எனவே பயனற்ற கல்வி வேண்டாம் என்கிறார்கள். அடுத்து இறைவனுக்கு பயந்து நடக்கும் இதயம் வேண்டும் என்கிறார்கள். மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களே நாட்டில் அதிகம். இறைவனிடம் பயமிருந்தால் மது, சூது, கொலை, கொள்ளை ஆகிய பாதகங்கள் இந்தப் பூமியில் நடக்க வாய்ப்பே இல்லை. கடைசி வரை வாழப்போகிறோம் என்ற எண்ணத்தில், இறையச்சம் அறவே இன்றி ஆட்டம்போடும் உலகத்தைச் சிந்திக்கச் செய்யவே, அண்ணலார் நாயகம் அவர்கள், இறைவனிடம் இவ்வாறு வேண்டுகிறார்கள். "எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளம்' பற்றி அண்ணலார் அவர்கள் பேசுகிறார்கள். உலகத்துன்பங்களுக்கு காரணம் ஆசை. மனிதன் மாடிமேல் மாடிகட்டி கோடி கோடியாய் சேர்த்த பிறகும் கூட ஆசை அடங்கவில்லை. தனக்கு தேவையற்றதைக் கூட பிறருக்குக் கொடுக்க மனமில்லை. இறுதிவரை பொருளாசை கொண்டே இறந்து போகிறான். ஒரு பணம் கூட அவனோடு போவதில்லை எனத்தெரிந்தும் இவ்வாறு செய்கிறான். மனைவி மக்களுக்காக ஒருவன் உழைக்க வேண்டியது அவசியமே என்றாலும் தர்மமும் முக்கியம். தேவையற்ற செலவுகளை விட்டாலே இருப்பதைக் கொண்டு வாழ்ந்து விடலாம். ஏற்கப்படாத "துஆ' பற்றியும் பார்க்கலாம். ""எவர் ஒருவர் என்னிடம் கையேந்தி துஆ வேண்டுவதை விட்டு விட்டு, குர்ஆன் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் ஈடுபடுவாரோ, அவருக்கு என்னிடம் கையேந்தி "துஆ' கேட்பவருக்கு அளிப்பதை விட மேலானதாகக் கொடுத்தருள்வேன்,'' என்கிறான் இறைவன். அது மட்டுமல்ல! ""மறைவாக இருக்கும் ஒருவருக்கு மறைவாக இருக்கும் ஒருவர் வேண்டுகின்ற துஆ பிரார்த்தனை போன்று இறைவனால் ஒப்புக்கொள்ளக்கூடிய வேறு எந்த துஆ பிரார்த்தனையும் இல்லை,'' என்றும் அவன் கூறுகிறான். அதாவது நாம் செய்கின்ற உதவி பிறருக்குத் தெரியவே வேண்டாம். அடுத்தவர்களுக்காக நாம் அவர்களே அறியாமல் செய்யும் பிரார்த்தனையே உயர்ந்தது. உயர்ந்த நான்கு விஷயங்களை இன்று நாம் தெரிந்து கொண்டோம் அல்லவா!

Related

பெட்டகம் சிந்தனை 602645124671426223

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item