பயத்தம் பருப்பு தோசை சமையல் குறிப்பு
பயத்தம் பருப்பு தோசை தேவையானவை: பச்சரிசி - 1/2 ஆழாக்கு பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு பச்சை மிளகாய் - 2 மிளகாய் வற்றல் - 2 பெருங்காயம் - சிற...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_205.html
பயத்தம் பருப்பு தோசை
தேவையானவை:
பச்சரிசி - 1/2 ஆழாக்கு
பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - சிறிது
வெங்காயம் - 1 (பெரியது)
தேங்காய் - 1 மூடி (துருவியது)
உப்பு - தேவையான அளவு
முதலில் வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும். அரிசி, பருப்பை தனியே ஊறப் போடவும். இரண்டையும் அரைத்து, மிளகாய், பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து அரைக்கவும். அரிந்த வெங்காயத்தையும் போட்டுக் கலந்து, மாவைக் கரைத்து, தோசைப் பதமாகச் சுடவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு வார்த்தால் ருசியான பயத்தம் பருப்பு தோசை ரெடி!
Post a Comment