மாவு பிசையுங்கள்..சமையல் அரிச்சுவடி,

மாவு பிசையுங்கள்.. கோதுமை வடநாட்டு உணவுப்பொருள் என்ற நிலைமாறி இன்று தென்னிந்திய உணவுப் பழக்கத்திலும் அதிகம் இடம் பிடித்துவிட்டது. சப்பாத்த...

மாவு பிசையுங்கள்.. கோதுமை வடநாட்டு உணவுப்பொருள் என்ற நிலைமாறி இன்று தென்னிந்திய உணவுப் பழக்கத்திலும் அதிகம் இடம் பிடித்துவிட்டது. சப்பாத்தி மற்றும் பூரி விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகம். பப்படம், தந்தூரி ரொட்டி, சமோசா, பாதுஷா போன்ற மாவுப் பதார்த்தங்களும் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. மாவுப் பதார்த்தங்கள் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று சாப்பிடுபவர்கள் ஆசைப்படுவார்கள். அதற்கு மாவு பிசையும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதுமானது. அதற்கான சில டிப்ஸ்... * சப்பாத்திக்கு மாவு தயாரிக்கும்போது கோதுமை மாவில் சிறிது `மலாய்' சேர்த்து பிசையவேண்டும். * சுக்கா ரொட்டிக்கு மாவு தயாரிக்கும்போது, கோதுமை மாவுடன் கொதிக்கும் வெந்நீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசைந்தால் மென்மையான சுக்கா ரொட்டிகளைப் பெறலாம். பிசைந்த மாவை அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்துவிட்டு, ரொட்டி தயாரிக்க வேண்டும். * சமோசாவிற்கு மாவு பிசையும்போது மைதா மாவுடன் சிறிது சோளமாவு சேர்த்து பிசைந்தால் வெகுநேரம் மொறுமொறுப்பாக இருக்கும். * கோதுமை அடை செய்ய கோதுமை மாவுடன், கடலை மாவு, தயிர் சேர்த்து பிசைந்தால் அடை மிருதுவாக இருக்கும். * பூரி தயாரிக்க மைதாவுடன், கோதுமை மாவு, சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும். * பூரி மாவுடன் சிறிது குலோப் ஜாமுன் மிக்ஸ் சேர்த்து பிசைந்தால் பூரிக்கு சூப்பர் டேஸ்ட் கிடைக்கும். * சோளமாவு சப்பாத்தி செய்ய வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து, மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும். * பாதுஷா செய்ய மைதா மாவுடன், தயிர், டால்டா சேர்த்து தண்ணீர்விடாமல் பிசைந்தால் பாதுஷா மிருதுவாக திரிதிரியாக வரும். * தந்தூரி ரொட்டி செய்ய மாவில் கொதிக்கும் தண்ணீர், உப்பு, சோடாமாவு சேர்த்து பிசையலாம். * கடலை மாவு பப்படம் செய்ய கடலைமாவுடன் சிறிது மைதா கலந்து பிசைந்து தயாரியுங்கள். * சோமாஸ் செய்யும்போது மைதாவுடன் சூடான பால் கலந்து மாவு தயாரிக்கவும். * பரோட்டா செய்ய மைதாவுடன், கால் பங்கு கோதுமை மாவு கலந்து காய்ச்சிய எண்ணெய், தண்ணீர் கலந்து இலகுவாக பிசையவும். * ருமாலி ரொட்டி (மிகவும் மெல்லிய மைதா சப்பாத்தி) செய்ய மைதாவுடன் காய்ச்சிய எண்ணெய் தண்ணீர், சிறிது சீஸ் சேர்க்கவும். * தேப்னா செய்ய கோதுமை மாவுடன், கடலைமாவு, ரவை, அரிசிமாவு சேர்த்து பிசையுங்கள். * மசாலா சப்பாத்தி செய்ய கோதுமை மாவுடன் மிளகு, சீரகம், புதினா, கொத்தமல்லி, மசித்த பாலக்கீரை இவற்றில் ஏதேனும் ஒன்று சேர்த்து பிசையலாம். * பருப்பு- தயிர் கூட்டு செய்யும்போது வேக வைத்த பருப்புடன், காய்கறி, தயிர் கலந்து, இறக்கும்போது சிறிது மைதா கலந்து விட்டால் கூட்டு வெண்மையாக, சுவையாக இருக்கும்.

Related

வீட்டுக்குறிப்புக்கள் 8279907886022672425

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item