கட்டா மிட்டா மிக்ஸ்டு சர்பத்-- வாசகிகள் கைமணம்
கட்டா மிட்டா மிக்ஸ்டு சர்பத் தேவையானவை: புளிப்பு மாங்காய் - 1, பொடித்த வெல்லம் - 5 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_1558.html
கட்டா மிட்டா மிக்ஸ்டு சர்பத்
தேவையானவை:
புளிப்பு மாங்காய் - 1, பொடித்த வெல்லம் - 5 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு(சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து கரைக்கவும்), எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலைப் பொடி - சிறிதளவு,தண்ணீர் - 8 டம்ளர், தூள் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாங்காயைத் தோல், கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெல்லம், புளி கரைசலைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைத் தாளித்துச் சேர்க்கவும். கூடவே உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியில், நறுக்கிய மாங்காயைச் சேர்த்து இறக்கிச் சூடாக பரிமாறவும்.
கட்டா மிட்டா மிக்ஸ்டு சர்பத்: தேன், சுக்கு பொடி சேர்க்கலாம். நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
Post a Comment