சுண்டைக்காய் சூப் --உடலுக்கு வலிவு தரும் சூப்கள்
சுண்டைக்காய் சூப் சுண்டைக்காய் பித்தக் கோளாறுகளை அகற்றும். ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும். வயிற்றிலுள்ள கீரைப் பூச்சிகளை அழித்து குடலை...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_14.html
சுண்டைக்காய் சூப்
சுண்டைக்காய் பித்தக் கோளாறுகளை அகற்றும். ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும். வயிற்றிலுள்ள கீரைப் பூச்சிகளை அழித்து குடலைச் சுத்தப்படுத்தும். எனவே உடலுக்கு ஆரோக்கியம் மிகுந்த சுண்டைக்காயை சூப்பாக செய்து குடிக்கலாம். இதோ உங்களுக்கான செய்முறை...
தேவையானவை:
பச்சை சுண்டைக்காய் - 20 கிராம்
பயத்தம் பருப்பு - 25 கிராம்
லவங்கப்பட்டை - 1
லவங்கம் - 1
பெரிய வெங்காயம் - 4
பெரிய தக்காளி - 2
பால் - 200 மி.லி.
தேங்காய்ப்பால் - 100 மி.லி.
மிளகு - 5 கிராம்
நெய் - ஒரு மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு காய்ந்ததும் சுண்டைக்காய்களைப் போடவும். லேசாக வதங்கியதும் இறக்கி தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு லிட்டர் தண்ணீர் விடவும். தண்ணீர் சூடானதும் பருப்பைப் போடவும். பருப்பு வெந்ததும் சுண்டைக்காய்களைப் போடவும். காயும் பருப்பும் கரைந்து போகும் அளவு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் இறக்கிவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய்யை விடவும். நெய் காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு சிவந்து வந்ததும் லவங்கப்பட்டையைப் போட்டு ஒரு புரட்டு புரட்டி, வேக வைத்த சுண்டைக்காய் பருப்பு கலவை, பால், தேங்காய்ப் பால், தக்காளி போட்டு ஒரு கொதிவரும் வரை அடுப்பில் வைக்கவும். கடைசியாக உப்பு, மிளகு இரண்டையும் பொடி செய்து போட்டுக் கலக்கி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து தெளிவாக வடிகட்டி, சூடாக இறக்கி வைக்கவும். அவ்வுளதான் ஆரோக்கியமான சுண்டைக்காய் சூப் தயார்.
Post a Comment