கல்கண்டு வடை--சமையல் குறிப்புகள்
கல்கண்டு வடை தேவையானவை உளுந்தம்பருப்பு - 1/2 கிலோ கல்கண்டு - 1/2 கிலோ உப்பு - 2 சிட்டிகை ஏலக்காய் - 6 ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு செய...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_1242.html
கல்கண்டு வடை
தேவையானவை
உளுந்தம்பருப்பு - 1/2 கிலோ
கல்கண்டு - 1/2 கிலோ
உப்பு - 2 சிட்டிகை
ஏலக்காய் - 6
ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* உளுந்தம் பருப்பை நன்றாகக் களைந்து ஊறவைத்து ஊறிய தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு கல் உரலிலோ, கிரைண்டரிலோ போட்டு அரைக்கவும்.
* அவ்வப்போது சிறிது சிறிதாக கல்கண்டை சேர்த்து அரைக்க வேண்டும். தண்ணீர் சிறிது கூட சேர்க்கக்கூடாது. கல்கண்டிலிருந்து வரும் நீரே உளுந்தை அரைப்பதற்கு போதுமானதாக இருக்கும்.
* மாவை கெட்டியாக அரைத்து, உப்பு சிறிது சேர்த்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து ரீபைண்ட் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறுசிறு வடைகளாக (நடுவில் ஓட்டை செய்து) தட்டிப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு
* அடுப்பை நிதானமாகவே எரிய விடவும். மாலை நேர டிபனுக்கு ஏற்ற இந்த கல்கண்டு வடை சூடாக சாப்பிட மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
* இந்த இனிப்பு வடையை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
Post a Comment