ஆட்டுக்கால் பாயா--சமையல் குறிப்பு
ஆட்டுக்கால் பாயா தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 2 சாம்பார் வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 150 கிராம் பச்சைமிளகாய் - 4 தேங்காய் - 1/2 மூடி...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_10.html
ஆட்டுக்கால் பாயா
தேவையான பொருட்கள்
ஆட்டுக்கால் - 2
சாம்பார் வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
தேங்காய் - 1/2 மூடி
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 10 பல்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
* ஆட்டுக்காலை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
* தேங்காயை பாலெடுத்துக் கொள்ளவும்.
* குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சைமிளகாய் இவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
* மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், போதுமான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
* 10 நிமிடங்கள் கழித்து விசில் வந்ததும் கால் வெந்ததைப் பார்த்து, எடுத்து வைத்த தேங்காய்ப் பாலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.
குறிப்பு
* இதே முறையில் தேங்காய்ப்பால் ஊற்றாமலும் வெறுமனே பாயா தயார் செய்யலாம்.
************************************************************
Post a Comment