நண்டு மசாலா--சமையல் குறிப்பு
நண்டு மசாலா தேவையான பொருட்கள் நண்டு - 1/2 கிலோ வெங்காயம், தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 4 மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் தனி...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_7134.html
நண்டு மசாலா
தேவையான பொருட்கள்
நண்டு - 1/2 கிலோ
வெங்காயம், தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
தனியாத் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
* நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
* தேங்காய், இஞ்சி, பூண்டு போன்றவற்றை வாணலியில் வறுத்து அரைக்கவும்.
* வெங்காயம், தக்காளி நறுக்கி கொள்ளவும்.
* பச்சை மிளகாய் கீறிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
* இவற்றுடன் மிளகாய்த்தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* அரைத்த தேங்காய், பூண்டு கலவையுடன், நண்டையும் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றத் தேவையில்லை.
* நண்டு மசாலா திக்காக வந்ததும் இறக்கி விடவும்.
Post a Comment