சிக்கன் மக்காச்சோள சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்
சிக்கன் மக்காச்சோள சூப் தேவையான பொருட்கள் சிக்கன் - 100 கிராம் மக்காச்சோளம் - 1/4 கிலோ எலும்பு - 1/4 கிலோ அஜினோமோட்டோ - 1 சிட்டிகை ...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_666.html
சிக்கன் மக்காச்சோள சூப்
தேவையான பொருட்கள்
சிக்கன் - 100 கிராம்
மக்காச்சோளம் - 1/4 கிலோ
எலும்பு - 1/4 கிலோ
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
* முதலில் கொதிசாறு (ஸ்டாக்) தயாரிக்க வேண்டும். நீரைக் கொதிக்க வைத்து எலும்பைச் சேர்த்து நன்கு வேக வைக்கவும், அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து (வடிகட்டி) ஸ்டாக் தயாரிக்கவும்.
* சிக்கனை எலும்பு நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.
* மக்காச் சோளத்தை நன்கு வேக வைத்து ஸ்டாக் தண்ணீர் கலந்து சிக்கனை சேர்த்து அஜினோமோட்டோ, தேவையான உப்பு இவை சேர்க்கவும்.
* இதனுடன் சோளமாவு சிறிது கரைத்து ஊற்றிக் குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து சூப்பை இறக்கி விடவும்.
Post a Comment