மட்டன் பலாக் கொட்டை வறுவல்--சமையல் குறிப்பு
மட்டன் பலாக் கொட்டை வறுவல் தேவையானவை மட்டன் - 1/2 கிலோ பலாக்கொட்டை - 1/4 கிலோ வெங்காயம், தக்காளி - 200 கிராம் பச்சை மிளகாய் - 4 மிளக...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_6480.html
மட்டன் பலாக் கொட்டை வறுவல்
தேவையானவை
மட்டன் - 1/2 கிலோ
பலாக்கொட்டை - 1/4 கிலோ
வெங்காயம், தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் - 2 டீஸ்பூன்
தயிர் - 1 குழிக்கரண்டி
தாளிக்க காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
* பலாக் கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைத்து தோலை எடுத்து விடவும்.
* மட்டனை சுத்தம் செய்து தயிரில் ஊற வைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சொன்னிறமாக வதக்கவும்.
* பிறகு தக்காளி, கீறிய மிளகாய் சேர்த்து வதக்கி, பலாக்கொட்டையை சேர்த்து வேகும் அளவு நீர் விடவும்.
* இதனுடன் வெந்த மட்டனைச் சேர்த்து, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்க்கவும்.
* பலாக் கொட்டை, மட்டன் இவை மசாலாவுடன் சேர்த்து தொக்கு பதத்தில் வரும்வரை வைத்திருந்து இறக்கவும்.
*************************************************************************
Post a Comment